தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

By Yazhini
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்
உலக மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பக்கூடிய மற்றும் விலைமதிப்பற்ற உலோகம் தங்கமாகும்.தங்கம் அனைவரும் அணியக்கூடிய ஒரு அற்புதமான நகை, அது மட்டுமல்லாமல் பணவீக்கம் மற்றும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்டவும் உதவும்.இதன் மற்றோரு முக்கிய பண்பு என்னவென்றால், இதை உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும்.

இந்தியர்கள் தங்கத்தை தூய்மை மற்றும் செல்வ வளமையின் சின்னமாகவே நினைக்கிறார்கள். நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் வருமாறு.

 

1.தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை ஆராய்ந்து வாங்க வேண்டும்.

 

2.தூய்மை-தங்கத்தின் தூய்மையை கேரட் எனப்படும் அலகால் தெரிந்து கொள்ளலாம்.தூய தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது.எனவே வெள்ளி, செம்பு,நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதாகவும் உள்ளது. பொதுவாக 18கே, 22கே அல்லது 24கே என தங்கத்தின் தூய்மையை அளவிடலாம்.

3.விலை-தங்க நகைகளின் விலை தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி போன்றவற்றை பொறுத்து உறுதி செய்யப்படும்.

4.நிறம்-மஞ்சள் நிற தங்கம்,வெள்ளை நிற தங்கம் மற்றும் ரோஸ் தங்கம் என தங்கத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் தங்கத்தை பல நிறங்களின் கலவையாக பெற விரும்பினால், வேறுபட்ட இரண்டு நிறங்களின் கலவையை பயன்படுத்தலாம்.

சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம். பலாடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. இது பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக பயன்படுகிறது. தங்கத்துடன் செம்பு கலப்பதால் மென்மையான பிங்க் நிறம் கொண்ட ரோஸ் தங்கம் கிடைக்கிறது. பச்சை, ஊதா மற்றும் கருப்பு போன்ற நிறங்களிலும் தங்கம் தயாரிக்கப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் அனைவராலும் கவரப்படுகிறது. மேலும் இதுவே உயர்ந்த மற்றும் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.

5.அடையாளங்கள்-இந்தியா உட்பட்ட பல நாடுகளில் ஒவ்வொரு தங்க நகைகளும் கேரட் அல்லது அதன் தூய்மையை ஒரு தெளிவான முத்திரையால் குறிப்பிடுகிறார்கள்.இந்த அடையாளங்கள் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர்.

இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.

6.நகை கடைகளின் நற்பெயர்- தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த நகை கடையுடன் ஒரு நீண்ட கால உறவு இருக்க வேண்டும். நம்பகத்தன்மை மற்றும் போலி இல்லாத, நிரூபிக்கப்பட்ட தங்கம் கொண்ட கடைகளாக இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold தங்கம்
English summary

6 things to keep in mind before buying gold | தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

Gold is among the most loved precious metals in the world. It's a wonderful ornament to wear as well as a great hedge against inflation and falling markets. Another significant attribute of gold is that it can be liquidated easily around the world. For us Indians, gold is a symbol of purity, prosperity and opulence. But how well do you know your gold jewellery and what things should you keep in mind while buying gold ornaments? Here's what you need to know - Tips when buying Gold Jewellery.
Story first published: Monday, March 11, 2013, 17:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X