வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்.. இதோ சூப்பர் டிப்ஸ்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்.. இதோ சூப்பர் டிப்ஸ்!
பெங்களூர்: பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர்.

எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர். தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.

1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.

2. காப்பீடு திட்டங்களை நாடலாம். உடல்நல காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏதாவது நோயால் அவதியுறும் போது இவ்வகை திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும். கூடுதலாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணத்தை போட்டால், பணத்தை திரும்பப் பெரும் திட்டத்தின் (money-back policy) மூலம் நிறைய பயனை அடையலாம். உதாரணமாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் திட்டத்தின் கீழ் 6 வருடங்களில் முதலீடானது இரட்டிப்பாக்கப்படும்.

3. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

4. நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.

5. பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.

6. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறந்த பயனை பெறலாம். ஆனால் நிபுணர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.

7. ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.

8. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.

9. வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.

10. அஞ்சலகத்தில் உள்ள பல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு மொத்தமாக சேமித்த தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த, மாதா மாதம் அதற்கு வட்டி கிடைப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பணமும் திரும்பக் கிடைக்கும்.

11. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Few investment mantras for working women | வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்.. இதோ சூப்பர் டிப்ஸ்!

It is high time for the working women to wake up and start planning your investment, financial goals and diversify your portfolio. If required, seek financial advice. Women should start realising, thinking and understanding the importance of money and its investment aspect to avoid critical situations and be prepared to face it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X