இன்டர்நெட்டில் காப்பீட்டுத் திட்டங்கள் சீப்... ஏன் என்று தெரியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்டர்நெட்டில் காப்பீட்டுத் திட்டங்கள் ஏன் மலிவாக கிடைக்கிறது?
சென்னை: "காலம் மாறிப் போச்சு... இப்பொழுது இன்டர்நெட் மூலம் எல்லாம் வாங்கலாம்..." இந்த எல்லாம் பட்டியலில் காப்பீட்டு திட்டம் கூடச் சேர்ந்துவிட்டது. அப்படியா என்று கேட்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த தகவல்கள் உங்களுக்காகத் தான்... நன்றாகப் படியுங்கள்.

இது வரை நாம் காப்பீட்டு திட்டத்தை எப்படி வாங்கினோம்? நன்றாக யேசித்துப் பாருங்கள்... ஏஜெண்ட் ஒருவர் நம் வீட்டுக்கு வந்து சில பல பேப்பர்களைக் காட்டி, கணக்குகளைப் போட்டு ஏதேதோ சொல்லுவார். புரிகிறதோ இல்லையோ நாம் யோசித்து சொல்கிறோம் என்று கூறி அவரை அனுப்பிவிடுவோம். பின்னர் அவர் நம்மை துரத்தித் துரத்தி வருவதை தடுக்க ஏதோ ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வாங்கிவிடுவோம். பின்னர் இது சரியில்லை அது சரியில்லை இப்படி ஏமாந்துப் போய்விட்டோமே என்று வருந்துவோம். சில சமையங்களில் அந்த காப்பீட்டுச் சந்தாவைக் கட்டாமலே விட்டுவிடுவோம். இந்த கதை இனி இப்படி போகாது. இன்டர்நெட்டில் ஏஜெண்ட் தொல்லையில்லை. வீட்டில் இருந்த படியே திட்டங்களைப் பார்க்கலாம். ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதைப் பற்றி இன்னும் தெளிவாக பார்க்கலாம்.

ஏஜெண்ட்கள் இல்லை:

ஆம், இன்டர்நெட்டில் உங்களுக்குத் தேவையான காப்பீட்டுத் திட்டத்தை நீங்களே பார்த்து வாங்கலாம். எல்லா விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதால் நீங்கள் உங்களின் தேவைக்கு ஏற்ற காப்பீட்டு திட்டத்தை வாங்கலாம். ஏஜெண்ட்கள் சொல்லும் பொய்களுக்கு இடமில்லை. ஏஜெண்ட் கமிஷனும் இல்லை. இதனால் காப்பீட்டுத் தொகை சற்று குறையும்.

ஒப்பிடும் வசதி:

இன்டர்நெட்டில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்கள் இருப்பதால் நீங்கள் இவற்றை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடலாம். இது ஏஜெண்ட்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஒரே நிறுவனத்தைச் சார்ந்து இருப்பதால் இந்த தகவல் அவர்களிடம் இருக்காது. அதே போல நிறுவனங்கள் இன்டர்நெட்டில் பல சலுகைகளை அளிக்கும். இதனால் நீங்கள் விலை குறைந்த அதே நேரத்தில் உங்கள் தேவைக்கு ஏற்ற திட்டத்தை ஒப்பிட்டு வாங்கலாம்.

போட்டி:

காப்பீட்டு நிறுவனங்கள் பல சலுகைகளை அளித்து மக்களை கவர்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டு: ஏகான் ரெலிகேர் என்னும் நிறுவனம் ஐ-டர்ம் என்னும் திட்டத்தை இன்டர்நெட்டில் அமல்படுத்தியது. அந்த திட்டத்தின்படி ரூ. 5,350 வருட சந்தாவிற்கு ரூ. 50 லட்சம் காப்பீட்டுத் தொகை. இதனை தொடர்ந்து மேட் லைப் நிறுவனம் மேட் ப்ரொடெக்ட் திட்டத்தையும், அவிவா நிறுவனம் ஐ-லைப் திட்டத்தையும் அறிமுகம் செய்தன. அதன்படி ரூ. 4,046 வருட சந்தாவிற்கு ரூ. 35 லட்சம் காப்பீட்டுத் தொகை. இத்தகைய சலுகைகள் கிடைக்கும் போது இதை வாங்குவது தானே புத்திசாலித்தனம்.

இது எல்லாம் சரி... முன் கூறிய தகவல்களினால் கண்மூடித் தனமாக காப்பீட்டுத் திட்டங்களை வாங்குதல் முதிர்வு காலத்தில் பிரச்சனைகளைத் தரும். அதனால் வாங்கும் முன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை கவனமாகப் படிக்கவும். குறைந்த சந்தாவிற்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன என்பதையும் உங்களுக்குத் தேவையான சலுகைகள் இருக்கிறதா என்பதையும் பார்த்து வாங்கவும். இன்று ஒரு ரூபாய் சேமிக்கிறோம் என்று நினைத்து நாளை வர வேண்டிய தொகையைக் கோட்டை விட்டுவிடாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Makes an Online Term Plan So Cheap? | இன்டர்நெட்டில் காப்பீட்டுத் திட்டங்கள் ஏன் மலிவாக கிடைக்கிறது?

At a time when even the daily grocery is bought over the internet, people do not hesitate to buy insurance policies online. Think about it. While buying an offline policy, you need to travel to the insurer's office (or wait for the agent to come over), go through a whole lot of paperwork, devote a considerable amount of time and then pay for the services rendered to you. On the other hand, you can simply sit in front of your computer, fill in your details and click your way to a new insurance policy. So obviously, you would be tempted to buy the policy online. It is this very reason that has made the online term plan insurance policies so popular today. And since they are available at discounted rates too, more and more people are opting for them.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X