பர்சனல் லோன் வாங்கும் போது செய்யக் கூடாத 10 தவறுகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பர்சனல் லோன் வாங்கும் போது செய்யக் கூடாத 10 விஷயங்கள்
சென்னை: ஒருசில தவர்க்க முடியாத செலவுகளை மேற்கொள்வதற்காக, பொதுவாக பர்சனல் லோன்(தனிநபர் கடன்) பலரும் வாங்குகின்றனர். ஒருவரின் வங்கி சேமிப்பு, அவருடைய வருமானம், அவர் கடனைத் திருப்பி செலுத்துவாரா என்பவை ஆராயப்பட்டு அவருக்கு பர்சனல் லோன் வழங்கப்படுகிறது.

அவ்வாறு ஒருவர் பர்சனல் லோன் வாங்கும் போது கீழ்காணும் தவறுகளைச் செய்யக் கூடாது.

1. திருப்பிச் செலுத்தும் தகுதிக்கு அதிகமாக லோன் வாங்கக் கூடாது

லோன் வாங்குபவர்கள் எப்போதுமே அதிக தொகையை வாங்குகின்றனர். அந்த தொகையைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்று அவர்கள் பார்ப்பதில்லை. இறுதியில் லோனத் திருப்பிச் செலுத்த முடியாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். அதனால் தங்களின் அன்றாட தேவைகளைக்கூட அவர்களால் நிறைவு செய்ய முடிவதில்லை. எனவே முறையாக இஎம்ஐ மூலம் உங்களால் திருப்பிச் செலுத்த முடிந்தால் மட்டுமே பர்சனல் லோன் வாங்க வேண்டும்.

2. பழைய வங்கி சேமிப்பு

ஒருவர் சரியான அளவில் தனது வங்கிக் கணக்கில் சீராக சேமிப்பை வைத்திருந்தால் வங்கிகள் அவருக்கு பர்சனல் லோனை வழங்குகின்றன. எனவே உண்மையான வங்கி நடவடிக்கைகளை லோன் வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு லோன் வழங்கும் வங்கிக்கு, வங்கி நடவடிக்கைகள் எதையும் மறைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் லோன் கிடைக்காது.

3. நிலுவையில் இருக்கும் லோன் விவரங்களைத் தெரிவித்தல்

ஏற்கனவே வாங்கிய லோனுக்கு இஎம்ஐ செலுத்தி வந்தால் அவற்றை லோன் வழங்கும் வங்கிக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதை வைத்தே உங்களுக்கு லோன் தொகை நிர்ணயிக்கப்படும். ஆனால் அதை மறைத்து, அதிக லோன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்த நீங்கள் திணற வேண்டியிருக்கும்.

4. மார்க்கெட் சர்வே செய்யுங்கள்

பர்சனல் லோன் பெற விண்ணப்பிப்பதற்கு முன்பாக மார்க்கெட் சர்வே செய்யுங்கள். எந்த வங்கி சிறந்த பர்சனல் லோனை வழங்குகிறது என்பதை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதோடு சர்வீஸ் சார்ஜ், ப்ரீபேமன்ட் மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். அதோடு டாக்குமன்டேஷன் மற்றும் ப்ராசஸிங் கட்டணங்களைக் குறைக்கச் சொல்லி வங்கிகளிடம் பேசுங்கள்.

5. பல பர்சனல் லோன்களைத் தவிர்க்கவும்

பர்சனல் லோன் மூலம் உங்களுக்குத் தேவையான தொகைய ஒரு குறிப்பிட்ட வங்கி வழங்கவில்லை என்றால், மீதி தேவையாக இருக்கும் பணத்திற்காக வேறொரு புதிய வங்கியை நாடாதீர்கள். அவ்வாறு நீங்கள் வாங்கினால் உங்கள் பணத் தேவை நிறைவேறினாலும் நீங்கள் மாதா மாதம் ஒரு பெரிய தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே ஒவ்வொரு மாதமும் ஒன்றுக்கு மேற்பட்ட இஎம்ஐ செலுத்த நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

6. வெற்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம்

வங்கி பணியாளர்கள, கடன் வேண்டி வருபவருக்கு ஆவணங்கள் மூலமே உதவி செய்கின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் ஆவணத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் நீங்களே நிரப்புங்கள். வங்கிப் பணியாளரை நிரப்ப அனுமதிக்க வேண்டாம். அதன் மூலம் வங்கி ஆவணங்களை நிரப்ப நீங்கள் கற்றுக் கொள்ளலாம். வெற்று ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம்.

7. லோன் ஒப்பந்தத்தை வாசித்தல்

வங்கி வழங்கும் லோனுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை மிகத் தெளிவாக வாசிக்க வேண்டும். அதன் மூலம் வட்டி விகிதம், ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஏனைய மறைமுகக் கட்டணங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதுபோல் லோன் பிரீ குளோசர் க்ளாசஸைப் பற்றியும் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

8. இஎம்ஐ மற்றும் லோன் காலத்தை தேர்ந்தெடுத்தல்

உங்களால் செலுத்த முடியும் அளவிற்கு இஎம்ஐ-யை தேர்ந்தெடுங்கள். அதிக இஎம்ஐயுடன் கூடிய குறைந்த காலம், குறைந்த இஎம்ஐயுடன் கூடிய அதிக காலத்தைவிட சிறப்பாக இருக்கும். ஆனால் அது உங்கள் மாத பட்ஜெட்டைப் பாதிக்கக் கூடாது.

9. வங்கியைத் தேர்ந்தெடுத்தல்

நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வங்கியிடமே பர்சனல் லோன் பெற முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அந்த வங்கி உங்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கும். உங்கள் வங்கி நடவடிக்கைகளையும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் மிக விரைவாக உங்களுக்கு லோன் வழங்க ஏற்பாடு செய்வார்கள். மேலும் அவர்களிடம் லோன் ப்ராசஸிங் கட்டணங்களைக் குறைக்கச் சொல்லி மிக எளிதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

10. லோன் பெற்ற அறிக்கையை பாதுகாத்து வைத்தல்

லோன் பெற்ற அறிக்கை மற்றும் திருப்பிச் செலுத்திய தொகை ஆகிய விவரங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். அதுபோல் வட்டி விகிதம், ப்ராசஸிங் கட்டணம் போன்ற விவரங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சில சமயம், வங்கிகள் புதிய கட்டணங்களையும் விதிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது நீங்கள் வைத்திருக்கும் விவரங்களை வைத்து வங்கியிடம் பேசலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Mistakes to Avoid While Taking Personal Loans | பர்சனல் லோன் வாங்கும் போது செய்யக் கூடாத 10 விஷயங்கள்

Personal loans could well be the answer to many immediate financial needs. Whether it"s a home renovation, education expenses or medical emergency, a personal loan may appeal as the ideal solution. However, with the myriad of loans available in the market, each claiming its competency, how do you ensure that you do not end up in a bad debt or a huge loan liability? InvestmentYogi brings out the pitfalls one must avoid in a personal loan to ensure that the burden of the loan doesn"t burn one"s pocket.
Story first published: Friday, April 19, 2013, 16:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X