நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்டை வேறு ஒருவரின் பெயரில் மாற்றுவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்டை வேறு ஒருவரின் பெயரில் மாற்றுவது எப்படி?
சென்னை: நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் அல்லது என்எஸ்சி என்ற சான்றிதழ் அஞ்சலகத்தில் வழங்கப்படும் ஒரு பாதுகாப்பு பத்திரம் ஆகும். இந்த பத்திரத்தை ஒருவர் வைத்திருந்தால் அவருக்கு வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சான்றிதழை ஒருவருக்குகொருவர் மிக எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

அவ்வாறு இந்த சான்றிதழை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அஞ்சல் அலுவலகரிடமோ அல்லது அஞ்சலக தலைமை அலுவலரிடமோ அதற்கான விண்ணப்பத்தை வழங்க வேண்டும். பொதுவாக இந்த சான்றிதழ் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். ஒரு வருடம் முடிந்து இந்த சான்றிதழ் காலாவதியான பின்னர் இதை வேறொருவருக்கு மாற்றித் தரலாம்.

பின் வரும் காரணிகள் சரியாக இருக்கும் பட்சத்தில்தான் இந்த சான்றிதழை வேறொருவருக்கு மாற்றித் தர முடியும்.

1. இந்த என்எஸ்சி சான்றிதழை வாங்குபவர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும்.

2. மேலும் இந்த சான்றிதழைக் காலாவதியான பின்னர் தான் வேறொருவருக்கு மாற்றித்தர முடியும்.

ஒருவேளை காலாவதியாகும் முன் மாற்றித் தர வேண்டும் என்றால், இந்த பாத்திரம் யாருக்கு மாற்றித் தரப்படுகிறதோ அந்த நபர் இந்த பத்திரத்தை வைத்திருப்பவருக்கு நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் தான் காலாவதியாகுவதற்கு முன்னர் மாற்றித் தர முடியும்.

மூன்றாவதாக இந்த பத்திரத்தில் இருக்கும் முழுத் தொகையையும் மாற்றித் தர வேண்டும். இதில் இருக்கும் ஒரு பகுதித் தொகையை மட்டும் மாற்றித் தர முடியாது.

ஒரு வேளை வயது குறைந்த மைனர்களுக்கு இந்த பத்திரத்தை மாற்றித் தர வேண்டும் என்றால், அந்த மைனர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர்கள், சம்பந்தப்பட்ட மைனர்கள் உயிருடன் இருக்கின்றனர் மற்றும் அவர்களின் நலனுக்காகவே இந்த பத்திரம் மாற்றப்படுகிறது என்று சான்று தர வேண்டும்.

மேலும் இந்த பத்திரத்தை வைத்திருந்தவருக்கே மீண்டும் மாற்றித் தரப்படலாம். ஆனால் அதற்கு தபால் அலுவலரின் அனுமதி வேண்டும்.

வரி விலக்கு:

இந்த என்எஸ்சி பத்திரத்தை வைத்திருந்தால் வரி விலக்கு உண்டு. இந்த பத்திரத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு ஆனால் டிடிஎஸ்(TDS) கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer a NSC from one person to another? | நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்டை வேறு ஒருவரின் பெயரில் மாற்றுவது எப்படி?

A National Savings Certificate or NSC as it's popularly known are issued at the post offices and are extremely secure instruments that help you get tax benefits under Section 80C of the Income Tax Act. Not many individuals know that these NSC Certificates can also be transferred from one person to another. In order to do so, you need the written consent of the Postmaster or the Head Postmaster. The transfer can be made after the expiry of a period of at least one year from the date of Certificate.
Story first published: Thursday, April 25, 2013, 16:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X