பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?
சென்னை: இந்த அவசர உலகத்தில் நாம் அடிக்கடி நமது இருப்பிடங்களை மாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது பணியின் நிமித்தமாக நமது குடும்பங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் நம்முடைய பொது வருங்கால வைப்பு நிதி (பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கை புதிய இடத்திற்கு மாற்றவில்லை என்றால் பழைய இடத்தில் இருக்கும் நம்முடைய வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு சென்று அலைய வேண்டி இருக்கும். எனவே நம்முடைய பிபிஎஃப் கணக்கை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அவ்வாறு பிபிஎஃப் கணக்கை மாற்றுவது மிகவும் எளிது.

(5 reasons to invest in the Mahindra Finance fixed deposit)

ஸ்டெப் 1

1. வெள்ளைத் தாளில் நமது பிபிஎஃப் கணக்கை மாற்றக் கோரி விண்ணப்பத்தை எழுத வேண்டும்.

 

2. ஒருவேளை அஞ்சலகத்தில் இருந்து வங்கிக்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான ட்ரான்ஸ்பர் பார்மை (எஸ்பி 10 பார்ம்) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

 

3. எந்த இடத்திற்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

4. பின் அவற்றை பாஸ்புக்கோடு இணைத்து சமர்பிக்க வேண்டும்.

5. அடையாளத்திற்காக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

ஸ்டெப் 2

1. நீங்கள் சமர்பித்தவுடன் உங்கள் கணக்கு முடிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் மற்றும் இருப்புத் தொகை டிடி அல்லது காசோலையாக நீங்கள் கேட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.

2. பின் உரிய வங்கியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

3. பின்னர் உங்களுக்கு புதிய பாஸ் புக் வழங்கப்படும்.

பிபிஎஃப் கணக்கு இடமாற்றம் பெற 3 முதல் 4 வாரங்கள் ஆகும். ஆனால் அதற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படாது.

நினைவில் கொள்க:

1. பிபிஎஃப் கணக்கை மாற்றுவதற்கு முன் உங்கள் பாஸ்புக்கில் எல்லா நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. பழைய பாஸ்புக்கை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. புதிய பாஸ்புக்கில் பழைய வங்கி நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட மாட்டாது.

4. மாற்றம் செய்யப்பட்ட கணக்கு தொடர் கணக்காகவே கருதப்பட வேண்டும்.

5. கணக்கை மாற்றும் போது நாமினியையும் மாற்றிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer a PPF account? | பிபிஎஃப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

In this fast moving world it may have so happened that you have moved from one place to another but your PPF accounts have not been transferred. In case you are finding it difficult to commute to that place or not able to visit due to hectic schedule, here is how you can transfer your PPF account from post office to bank or vice a versa.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X