2013-2014 நிதியாண்டுக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆண்டு நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்?
சென்னை: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி வரையளவுகள் சென்ற வருடத்தின் அளவுகளிலிருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இடம்பெற்றுள்ளன. 2013-2014ம் நிதியாண்டில் உங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படலாம் என்று தோராயமாக நீங்கள் கணக்கிட உதவும் வகையில் வருமான வரி விதிப்புப் பிரிவுகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.

(Reliance My Gold Plan: Now save in gold at Rs 50 a day)

நிதியாண்டு (எஃப்ஒய்) - நிதி தொடர்பான அனைத்து தகவல்களும் அறிவிக்கப்படும், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான ஒரு வருட காலமே, நிதியாண்டு என்று வழங்கப்படுகிறது.

 

வரி விதிப்பு ஆண்டு (ஏஒய்) - ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் வருமானம் கணக்கிடப்படும், அந்நிதியாண்டை தொடர்ந்து வரும் ஆண்டை, வரி விதிப்பு ஆண்டு என்று கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டுக்குரிய வரி விதிப்பு ஆண்டு 2014-2015 ஆகும்.

 

பெண்கள் மற்றும் வரி செலுத்தும் பொதுப் பிரிவினருக்கான வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,00,000 வரை - வரி கிடையாது
ரூ. 2,00,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10% (2000 ரூபாய் தள்ளுபடி தற்போது அனுமதிக்கப்படுகிறது)
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30% (ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருப்பின் 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படும்)

மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 2,50,000 வரை - வரி கிடையாது
ரூ. 2,50,001-லிருந்து ரூ. 5,00,000 வரை - 10%
ரூ.5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மிக மூத்த குடிமக்களுக்கான (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்) வருமான வரி விதிப்புப் பிரிவுகள்:

0-லிருந்து ரூ. 5,00,000 வரை - வரி கிடையாது
ரூ. 5,00,001-லிருந்து ரூ. 10,00,000 வரை - 20%
ரூ. 10,00,000-க்கும் மேல் - 30%

மேலும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு, சுமார் 2000 ரூபாய் வரை தள்ளுபடி அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. இவ்விதிமுறை, இதே அளவு வரி விதிப்புடைய தனி நபர்கள், ஹெச்யூஎஃப்-கள், நிறுவனங்கள் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும்.

குறிப்பு: மேல்வரி, கல்வித் தீர்வைகள், மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வித் தீர்வைகள் ஆகியவை வட்டி விகிதங்களில் சேர்க்கப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax slabs for Financial Year 2013-14 | இந்த ஆண்டு நீங்கள் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்?

Union Budget 2013-14 presented by P Chidambaram kept Income Tax rates unchanged in view of rising fiscal deficit. Here is the ready reckoner of tax slabs for the Financial Year 2013-14 which will help you while filing your taxes. Financial Year (FY) - Duration of one year between 1st April to 31st March of the following year, in which all financial information are reported. Assessment Year (AY) - The income of a particular financial year is assessed in the following financial year, which is known as the assessment year. Assessment Year 2014-15 relevant to Financial Year 2013-14
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X