மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள்
சென்னை: மியூச்சுவல் ஃபண்ட் ஒரு நிதி இடைத்தரகர் போன்றது. பொதுமக்கள் பலர், மியூச்சுவல் ஃபண்ட்-ஐ ஒரு நிறுவனமாகவே கருதுகின்றனர். இது மிக எளிமையான விளக்கமாகத் தோன்றலாம்.

இது, முன்பே வரையறுக்கப்பட்ட இலக்கிற்குள் முதலீடு செய்ய விரும்பும் மக்களை, ஒன்றாகக் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டுச் சாதனமாகும்.

இம்முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மட்டுமல்லாது, அத்திட்டம் ஈட்டிய மூலதன மதிப்பேற்றமும், முதலீட்டாளர்களிடையே அவர்கள் வைத்திருக்கும் பங்குகளைப் பொறுத்து, பகிர்ந்தளிக்கப்படும். மூலதனத்தில், நஷ்டம் அல்லது மதிப்பிறக்கம் இருந்தால், அவையும் அந்த ஃபண்டில் பங்கேற்கும் முதலீட்டாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்வதற்கு உண்டான, சேவைக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் என்று, ஒரு தொகையை வசூலிக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்டின் சாதகங்கள்:

டைவெர்ஸிஃபிகேஷன்:

பங்கு அல்லது பத்திரம் போன்ற ஒரேயொரு செக்யூரிட்டியில் முதலீடு செய்வது அபாயகரமானதாக இருக்கக்கூடும். ஆனால், பல்வேறு செக்யூரிட்டிகளை உள்ளடக்கிய மியூச்சுவல் ஃபண்டை கைக்கொண்டிருப்பது இந்த அபாயத்தை பெருமளவில் குறைக்கின்றது.

தொழில்முறை நிர்வாகம்: உங்கள் போர்ட்ஃபோலியோவுக்கான சிறந்த பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை தேர்வு செய்வது மிகவும் கடினமாகவும், மிகுதியான நேரம் பிடிப்பதாகவும் இருக்கின்றது. இதற்கு தளராத தொடர் முயற்சியும் அவசியமாக உள்ளது. தொழில்முறை மியூச்சுவல் ஃபண்டு மேனேஜரை, உங்களுக்காக பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை தேர்வு செய்ய அனுமதித்தால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, விரக்தியடையாமல் இருக்கலாம்.

குறைந்த டிரான்ஸாக்ஷன் செலவுகள்:

தனிப்பட்ட பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாங்குவது டிரான்ஸாக்ஷன் செலவுகளின் அடிப்படையில் பார்த்தால் விலை உயர்ந்ததாக உள்ளது. ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு முறை வாங்கும்போதும், விற்கும்போதும், பிற செலவுகளோடு, தரகுத் தொகையையும் கொடுக்க நேரிடுகிறது. கொள்முதல் மற்றும் விற்பனை அளவுகோல்கள் பெரிதாக இருப்பதினால் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான டிரான்ஸாக்ஷன் செலவுகள் கம்மியாகவே உள்ளன.

வளைந்து கொடுக்கும் தன்மை:

தனிப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்களை சொந்தமாக்கிக் கொண்டிருப்பின் அவை லிக்விடிட்டி என்று சொல்லப்படும், உங்கள் பணத்தை எளிதாக அணுகக்கூடிய வாய்ப்பின் அடிப்படையில் பார்த்தால், குறைவான வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் முதலீடுகளை இரண்டு வேலை நாட்களில் எடுக்க முடியும்.

சேவை:

மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், தன்னியக்க முதலீடு மற்றும் பணமீட்பு திட்டங்கள்; வட்டி, பங்காதாயங்கள், மூலதன லாபங்கள் மற்றும் வரியில் உதவி போன்றவற்றுக்கான தன்னியக்க முதலீடுகள் போன்ற பிற சேவைகளையும் வழங்குகின்றன.

ட்ரான்ஸ்பரென்ஸி:

கெடுபிடியான அரசு ஒழுங்குமுறைகள் மற்றும் உயர்வான டிஸ்க்லோஷர் பாலிசி ஆகியவை இதனை ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்கியுள்ளன.

மியூச்சுவல் ஃபண்டின் பாதகங்கள்:

செயல்பாடு: பொதுவாக, மிகவும் ஆக்டிவ் ஆக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலம் ஆகியும் தங்கள் பெஞ்ச்மார்க்குகளை அடைவதில்லை. ஆனால் சில வருடங்களில் ஆக்டிவ் ஆக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கள் இன்டெக்ஸ் ஃபண்ட் சகாக்களைக் காட்டிலும் நன்கு செயல்படுகின்றன; சில நேரங்களில், நேர்மாறாகவும் நடக்கலாம்.

அபாயங்கள்:

மியூச்சுவல் ஃபண்டுகள், சந்தை தொடர்பான அபாயங்கள் மற்றும் சொத்து தொடர்பான அபாயங்கள் போன்ற இரு வகை அபாயங்களாலும் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக, மிகவும் கான்ஸென்ட்ரேட்டட் -ஆக இருக்கக்கூடிய, மற்றும் டைவர்ஸிஃபைட் -ஆக இல்லாமல் இருக்கக்கூடிய, போர்ட்ஃபோலியோக்களில் இந்த அபாயங்கள் மிக அதிகமாக உள்ளன.

தொழில்முறை நிர்வாகம்:

நிர்வாகம், எவ்வகையிலும் தவறுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை இழந்தாலும் மேனேஜர் தன் கட்டணத்தை வாங்காமல் இருப்பதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual Funds: advantages & disadvantages | மியூச்சுவல் ஃபண்ட்: சாதகங்கள் மற்றும் பாதகங்கள்

A mutual fund is a financial intermediary. Many people consider mutual fund as a company, this would be an over-simplification. It is more an investment vehicle that brings together a group of people interested in investing within a predefined objective. The income produced through these investments plus the appreciation of capital, earned by the scheme, is shared among the investors, depending on the units possessed by them. If there is a loss or depreciation of capital then that too is shared among the investors participating in the fund. These mutual funds charge a fees covering their service expense and other expenses incurred in the process of investing.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X