லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்தால் இவ்வளவு நன்மையா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்தால் இவ்வளவு நன்மையா?
சென்னை: பெரும்பாலான மக்கள் செய்யும் ஒரு தவறு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமல் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது. பல காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவதற்காக மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என்று கூறுகின்றன.

ஆனால் நீண்ட கால அடிப்படையில் இது தீங்கு விளைவிப்பதாகவே இருக்கிறது. பாலிசிதாரரின் இன்சூரன்ஸ் கிளெய்மின் போது பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமல்லாது அதிகளவு பிரீமியம் தொகையும் செலுத்த வேண்டியுள்ளது.

மருத்துவ விவரங்கள் இல்லாமல் இருப்பதால் வரக்கூடிய பிரச்சினைகள்:

கிளெய்ம்ஸ் நிறுத்தி வைக்கப்படுதல்:

பாலிசி எடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாக பாலிசிதாரர் இறந்து போகும் பட்சத்தில் அவர் உடல்நிலை குறித்த விவரங்களை மறைத்து வைத்ததாக கூறி இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் தர மறுக்கலாம்.

இது ஒரு பொதுவான பிரச்சினை. பல சமயங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கூற்று சரியாக இருந்தாலும் சில நேரங்களில் பாலிசிதாரர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு பாலிசி எடுத்த சமயத்தில் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்து பாலிசி எடுத்த சில நாட்களிலேயே இறந்து போனால் இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு தர மறுக்கலாம்.

அதிக பிரீமியம்:

மருத்துவ பரிசோதனை செய்யாமல் பாலிசி தரும் நிறுவனம் உங்களிடம் அதிக பிரீமியம் வசூலிக்கிறது. உங்களை விட ஆரோக்கியம் குறைவாக இருக்கும் உங்கள் நண்பரும் உங்களைப் போலவே பிரீமியம் செலுத்துகிறார். இது புத்திசாலித்தனமில்லாத ஒரு விஷயமாகும். ஆரோக்கியமானவர்கள் குறைந்த பிரீமியம் அல்லவா செலுத்த வேண்டும்? நீங்கள் ரூ.9,000 செலுத்த வேண்டிய இடத்தில் ரூ. 12,000 பிரீமியமாக செலுத்துகிறீர்கள்.

மருத்துவ பரிசோதனை முன்கூட்டியே செய்வதன் பலன்கள்:

இன்சூரன்ஸ் கிளெய்ம் எளிதாகிறது:

பரிசோதனைகள் முடிந்ததும் பொறுப்பு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செல்கிறது. உங்கள் முழு உடல் நிலை பற்றி அறிந்திருப்பதால் மரணத்தின் போது காப்பீட்டுத் தொகையைத் தர மறுக்க இயலாது. கடந்த ஆண்டு மும்பையில் நடந்த ஒரு வழக்கில் மருத்துவ பரிசோதனை முன்கூட்டியே எடுத்திருந்த காரணத்தால் பணம் தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தொகையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலிசி எடுக்கப்படும் முன்பே பரிசோதனைகள் செய்து சரியான பிரீமியம் வாங்குவதால் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் இன்சூரன்ஸ் கிளெய்மை மறுக்க இயலாது.

குறைந்த பிரீமியம், அதிக காப்பீடு:

மருத்துவ பரிசோதனை தேவைப்படாத பாலிசிகள் குறைந்த காப்பீடு வழங்குகின்றன. இளமையாக ஆரோக்கியமாக இருந்தாலும் உங்களுக்கான காப்பீட்டுத் தொகை குறைவாகவே இருக்கிறது. இது போக இறுதியில் நீங்கள் அதிகப் பிரீமியமும் செலுத்துகிறீர்கள். இதுவே மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய பாலிசிகளில் தேவையான சரியான அளவு பிரீமியம் செலுத்தி அதிக காப்பீடு பெறுகின்றீர்கள். நீங்கள் எந்த வகையான பாலிசி எடுத்தாலும் உங்கள் உடல்நிலை குறித்து அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது. தவறான தகவல்களை தெரிவித்தால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது எளிதானது, பிரச்சினை இல்லாதது மற்றும் எல்லா வகையிலும் பயனுள்ளதும் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Benefits of a Pre-Insurance Medical Test | லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்தால் இவ்வளவு நன்மையா?

This is a common mistake many people make- they avail of an insurance policy without going for a medical test. Many insurance companies also lure customers by saying that medicals won't be required. But in the long run this proves to be harmful, as not only do the policyholders face problems during claims, they also end up shelling out heftier amounts of cash while paying the premiums.
Story first published: Wednesday, April 10, 2013, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X