ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்த கட்டுக்கதைகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்த கட்டுக்கதைகள்!!!
சென்னை: ஆன்லைனில் வருமான வரியை தாக்கல் செய்வது எளிய முறை மட்டுமல்ல, இ ஃபைலிங் செய்தால் ரீபண்டும் விரைவில் கிடைக்கும்.

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் பற்றிய சில பொதுவான கட்டுக்கதைகள் சுருக்கமாக பின் வருமாறு:

 

கட்டுக்கதை-1:

வருமான வரி கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்தால் டிஜிட்டல் கையெழுத்து அவசியம்.

 

உண்மை நிலவரம்:

ரூ. 100 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள யாருக்கும் டிஜிட்டல் கையெழுத்து அவசியமில்லை. நீங்கள் உங்கள் வருமான வரி தகவலறிக்கையை கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்த பின், உங்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஐடிஆர் 5 படிவத்தை, பெங்களூரிலுள்ள சிபிசி-க்கு அனுப்பி வைக்கும் பட்சத்திலும் டிஜிட்டல் கையெழுத்து தேவைப்படாது.

கட்டுக்கதை-2:

ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் அது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

உண்மை நிலவரம்:

இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானதொரு கற்பனையாகும். ஒவ்வொரு வருடமும் வருமான வரித் துறை, எவ்வித வரிசை முறையுமின்றி, அங்கொன்றும், இங்கொன்றுமாக பெயர்களை தேர்வு செய்து ஒரு பட்டியல் தயார் செய்கின்றது. பின் அப்பட்டியலில் இடம்பெற்றோர் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகளை ஆய்வு செய்யும். இப்பட்டியலில் இடம்பெறும் பெயர் கொண்ட நபர், வழக்கமான முறையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளாரா அல்லது ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளாரா என்பது கணக்கில்லை. இன்னும் சொல்லப் போனால், ஆன்லைன் தாக்கல் முறையில், நீங்கள் உங்கள் அறிக்கையில் கொடுத்துள்ள தகவல்கள், உங்களை பணியிலமர்த்தியவர், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஆகியவை தாக்கல் செய்த தகவல்களோடு ஒத்துப் போகின்றனவா என்பதை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

கட்டுக்கதை-3:

ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் அதற்கு செலவாகும். ஆனால், வழக்கமான முறையில் தாக்கல் செய்தால் எந்த செலவும் இருக்காது.

உண்மை நிலவரம்:

அரசு இணையதளமான www.taxyogi.com மூலம் இ-ஃபைலிங் செய்தால், அதற்கு எந்த கட்டணமும் இல்லை.

கட்டுக்கதை-4:

ஒருவர் ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால், அவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் திருத்தம் ஏதும் செய்ய இயலாது.

உண்மை நிலவரம்:

பிற தாக்கல் முறைகளில் செய்யப்படுவது போலவே, இ-ஃபைலிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளிலும் திருத்தங்கள் செய்யலாம். www.taxyogi.com, நடப்பு நிதியாண்டு 2013-2014 (வரி விதிப்பு ஆண்டு 2014-2015) -இல், திருத்தம் செய்யப்பட்ட அறிக்கைகளை தாக்கல் செய்ய உங்களை அனுமதிக்கிறது.

கட்டுக்கதை-5:

ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்வது பாதுகாப்பற்றது

உண்மை நிலவரம்:

முறையாக பதிவு செய்யப்பட்ட அனைத்து போர்ட்டல்கள், வரி விதிக்கப்பட்டோர் தாக்கல் செய்யும் அறிக்கைகள் அனைத்தையும், வருமான வரித்துறைக்கே அப்லோட் செய்கின்றன.

அரசு இணையதளம் மிக சமீபத்திய மென்பொருள்களை பயன்படுத்தி இ-ஃபைலிங் முறையை பாதுகாப்பானதாகவே வைத்துள்ளது. உதாரணமாக, www.taxyogi.com, தன் தகவல் பரிமாற்றத்துக்கு, 128-பிட் என்க்ரிப்ஷனையே பயன்படுத்துகிறது. இதில், ஊடுருவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு; ஏன் இல்லையென்றே சொல்லலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are common myths on online tax filing? | ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்த கட்டுக்கதைகள்!!!

Online filing is not only the simplest way to file your ITR, but refunds are also issued faster on for electronically filed Returns. Some of the common myths on online filing are summarized above.
Story first published: Wednesday, April 10, 2013, 11:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X