ஹோட்டல் பில்லில் என்னென்ன வரிகள் அடக்கம் என்று தெரியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உணவகங்களுக்கு சென்று நாம் சாப்பிடும் பில்களோடு சேர்த்து பலவிதமான வரிகளைக் கட்ட வேண்டும். பலருக்கும் அந்த பில்களுக்கு விதிக்கப்படும் வரிகளைப் பற்றி தெரியாது. எனினும் வேறு வழியின்றி சாப்பிட்டு முடித்துவிட்டு அந்த வரிகளையும் கட்டிவிட்டு வருவர். குறிப்பாக ஏசி வசதி செய்யப்பட்ட உணவகங்களில் சாப்பிடுவதற்கு முன், சாப்பாட்டு பில்களுக்கு விதிக்கப்படும் வரிகளைப் பற்றித் தெரிந்திருப்பது நல்லது. என்னென்ன வரிகள் விதிக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

சேவை கட்டணம்

சேவை கட்டணம்

பொதுவாக பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்த தொகையில் 10 சதவீதம் டிப்ஸ் அல்லது சேவை கட்டணம்(சர்வீஸ் சார்ஜ்) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே பரிமாறிய சர்வருக்கு நாம் டிப்ஸ் தர வேண்டிய அவசியமில்லை. ஏனனில் அவருக்கான டிப்ஸ் அல்லது சர்வீஸ் சார்ஜ் ஏற்கனவே நமது பில்லில் சேர்க்கப்பட்டிருக்கும். எனினும் பலர் தனியாக டிப்ஸ் தருகின்றனர்.

சேவை வரி

சேவை வரி

உணவகங்கள் தாங்கள் வழங்கும் சேவைக்கு சேவை வரியையும் விதிக்கின்றன. இந்த சேவை வரி12.36 சதவீதமாகும். ஏசி வசதி கொண்ட உணவகங்களில் 40 சதவீத சேவை வரி விதிக்கலாம் என்று வருவாய் சேவை வரி துறையின் சட்ட புத்தகம் தெரிவிக்கிறது.

எனவே சாப்பாட்டிற்கான கட்டணம் மற்றும் சேவை கட்டணம் ஆகியவை இணைக்கப்பட்டு அவற்றிற்கு 4.94 சதவீதம் வரி விதிக்கப்படும்.

 

வாட்

வாட்

வாட் வரி எப்போதுமே மக்களுக்கு குழப்பமாகத்தான் இருக்கிறது. வாட் வரி சேவை கட்டணத்துக்கு தான் விதிக்கப்படுகிறதே தவிர மொத்த பில் தொகைக்கும் அல்ல.

பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், குளிர்பானங்ள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு போன்றவற்றிற்கு வாட் வரி விதிக்கப்படக் கூடாது. எனினும் இந்தியாவில் வாட் வரி மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது.

 

கீழ்வரும் எடுத்தாக்காட்டைப் பார்ப்போம்

கீழ்வரும் எடுத்தாக்காட்டைப் பார்ப்போம்

உணவு = ரூ.1000.00
சேவை கட்டணம் 10% = ரூ.100.00
சேவை வரி 4.94% = ரூ.54.34
வாட் 14.5% = ரூ.154.00
மொத்தம் = ரூ.1299.34

சேவை வழங்கப்பட்டால் மட்டுமே வாடிக்கையாளரிடம் சேவை வரி வாங்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ளவாறு சேவை கட்டணத்துக்கு மட்டுமே சேவை வரி விதிக்க வேண்டும். மொத்த பில்லுக்கும் சேர்த்து சேவை வரி விதிக்கக் கூடாது.

எனினும் உணவகங்கள் விதிக்கும் வரிகளில் இன்னும் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. இந்த குழப்பங்கள் விரைவில் தீர்க்கப்பட்டால் மக்கள் பயனடைவார்கள்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax bills பில் வரி
English summary

What are the taxes on a restaurant bill? | ஹோட்டல் பில்லில் என்னென்ன வரிகள் அடக்கம் என்று தெரியுமா?

Decoding the various taxes on a restaurant bill are so confusing at times people finally tend to pay the amount without getting into the nitty-gritties of the bill. Most of us are unaware of the different types of tax applied when we dine at a restaurant, especially an air-conditioned one. Due to the various taxes applied people tend to get confused. Take a look at the various taxes and its implications on your bill.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X