வரியை சேமிக்கும் என்ஹெச்பி சுவ்ரிதி பிக்சட் டெபாசிட் பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எக்ஸ்டிரா வட்டி பிளஸ் வரி விலக்கு பெற என்ஹெச்பி சுவ்ரிதி பிக்சட் டெபாசிட்
சென்னை: வருமான வரியை சேமிக்க பல வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்யலாம். பெரும்பாலும் எல்லோரும் வங்கிகளின் வைப்புத் தொகை திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்கின்றனர். நேஷனல் ஹவுசிங் வங்கி (என்ஹெச்பி), என்எச்பி சுவ்ரிதி வைப்புத் தொகை என்ற வரி சேமிக்கும் திட்டத்தை வழங்குகிறது என்பது பலருக்கு தெரியாது.

இந்த என்ஹெச்பி சுவ்ரிதி வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு நேஷனல் ஹவுசிங் வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட அதிகம் ஆகும். ஏனெனில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இந்த வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு 9 சதவீத வட்டியையே வழங்குகின்றன.

மேலும் என்ஹெச்பி சுவ்ரிதி வைப்புத் தொகை திட்டம் மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கு பிற வங்கிகளை விட .10 சதவீத வட்டி வழங்குகிறது.

நேஷனல் ஹவுசிங் வங்கி இந்திய அரசால் இயக்கப்படும் வங்கியாகும். அதனால் இந்த வங்கியில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை முழுமையான பாதுகாப்புடன் இருக்கும்.

இந்த வங்கியில் செய்யப்படும் முதலீடு 5 ஆண்டுகளைக் கொண்டது. இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி, இந்த முதலீட்டுக்கு வரி விலக்கு அளிக்கிறது. இந்த பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை வரி வலிக்கு பெறலாம்.

இந்த வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புத் தொகைக்கு ஒவ்வொரு காலாண்டு அல்லது ஆண்டு முடிவில் வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர் தனக்கு விருப்பமான வட்டி காலத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி வட்டி வழங்கும் காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது இருக்கும் 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் பிரிவு யு/எஸ் 194ஏ வழங்கும் சலுகையின்படி ஒருவர் ஒரு நிதியாண்டில் வைப்பு நிதி மூலம் ரூ.5000 வரை வட்டி பெற்றால் அந்த வட்டிக்கு வரி கட்டத் தேவையில்லை.

இந்த நேஷனல் ஹவுசிங் வங்கி, மத்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானதாகும். இந்த வங்கி மிக எளிமையான முறையில் வீட்டுக் கடன் வசதிகளையும் வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why NHB Suvridhi tax deposit is better than bank tax deposit? | எக்ஸ்டிரா வட்டி பிளஸ் வரி விலக்கு பெற என்ஹெச்பி சுவ்ரிதி பிக்சட் டெபாசிட்

Not many investors know that the National Housing Bank (NHB) has a tax savings deposit called the NHB Suvridhi Deposits. Now, these deposits are more less identical in features to the bank tax savings deposits. However, where the NHB Tax Savings Deposit score over the PSU and other banks tax savings deposits is when it comes to interest rates. The NHB Suvridhi Deposit offers an interest rate of 9.25 per cent, as compared to present interest rate on bank tax savings deposit, which can fetch you a rate of around 9 per cent in most public sector banks. Interestingly, the rate for Senior Citizens is also higher and placed at 0.60 per cent, as compared to 0.50 per cent at most banks.
Story first published: Friday, April 5, 2013, 17:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X