வருமானத்தை அள்ளித்தரும் 6 நிறுவனங்களின் பிக்சட் டெபாசிட்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்த கட்டுரையை ஒரு எச்சரிக்கையின் மூலம் தொடங்கலாம் என நினைக்கிறோம். நிறுவனங்களின் வைப்புத் தொகை என்பது ஒரு உத்தரவாதமற்றது. மேலும், வங்கியின் வைப்புத் தொகையுடன் ஒப்பிடும் பொழுது, மூலதனம் மற்றும் வட்டியை இழக்கும் வாய்ப்பு இங்கே மிக மிக அதிகம். ஆனால், பிரபலமான பழமொழியான "அதிக அபாயம், அதிக வருமானம்" த்தின் படி, இங்கே வருமானம் அதிகம்.

நாங்கள், இங்கே அதிக வருமானம் தரும் 6 நிறுவனங்களின் வைப்புத் தொகையைப் பற்றிய விவரங்களை உங்களுக்காக தருகின்றோம். ஆனால், முதலீட்டாளர்கள் இத்தகைய நிதிகளில் முதலீடு செய்யும் முன் தொழில்முறை ஆலோசனை பெறுவது நல்லது.

அன்சால் ஹவுசிங்

அன்சால் ஹவுசிங்

அன்சால் ஹவுசிங் என்பது வட இந்தியாவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் காலாண்டிற்கான நிரந்தர வைப்புத் தொகைக்கு ஒரு வருட வட்டியாக சுமார் 11 சதவீதத்தை வழங்குகிறது. மேலும் 3 ஆண்டு வைப்புத் தொகைக்கு 11.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

டி.ஹெச்.எப்.எல்.

டி.ஹெச்.எப்.எல்.

திவான் ஹவுசிங் என பிரபலமாக அறியப்படும் `டி.ஹெச்.எப்.எல்' இந்தியாவில் உள்ள பழைய வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஒரு வருட நிரந்தர வைப்புத் தொகைக்கு 10.51 சதவீதம் கூட்டு வட்டி வழங்குகிறது. மேலும் இது இரண்டு வருட முதலீட்டிற்கு 11. 07சதவீதம் வட்டி வழங்குகிறது.

காட்டி

காட்டி

காட்டி லிமிடெட் என்பது இந்தியாவின் முதன்மையான ஒரு எக்ஸ்பிரஸ் விநியோகம் மற்றும் செயின் டிஸ்ட்ரிபியூஷன் சொலுஷன்ஸ் நிறுவனம் ஆகும். இது காலாண்டு நிரந்தர வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 10.5 சதவீத சாதரண வட்டி வழங்குகிறது. இரண்டு ஆண்டு நிரந்தர வைப்புத் தொகைக்கு 11 சதவீத வட்டி வழங்குகிறது.

ஹெச்டிஎப்சி

ஹெச்டிஎப்சி

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வீட்டு நிதி நிறுவனமான ஹெச்டிஎப்சி, தனது ஹெச்டிஎப்சி பிளாட்டினம் நிரந்தர வைப்புத் தொகைக்கு ஆண்டுக்கு 9.4 சதவீதம் வட்டி வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இத்த நிதிக்கு கிரிசல் எஃப்ஏஏஏ தர மதிப்பீடு வழங்கியுள்ளது. ஹெச்டிஎப்சி, தன்னுடைய பிற வைப்பு நிதி திட்டங்களுக்கு குறைந்த வட்டியே வழங்குகின்றது.

ஜேபீ இன்ஃப்ராடெக்

ஜேபீ இன்ஃப்ராடெக்

ஜேபீ இன்ஃப்ராடெக் நிறுவனம், யமுனா நதியின் கரையை ஒட்டி, நொய்டா மற்றும் ஆக்ராவை இணைக்கும் சுமார் 165 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வேயை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு வருட வைப்புத் தொகைக்கு 12 சதவீத கூட்டு வட்டி வழங்குகிறது. ஜேபீ இன்ஃப்ராடெக் என்பது புகழ்பெற்ற ஜேபீ குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

கேரளா போக்குவரத்து நிறுவனம்

கேரளா போக்குவரத்து நிறுவனம்

கேரளா போக்குவரத்து நிறுவனம் என்பது கேரள அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இது பல்வேறு கால அளவிலான வைப்புத் தொகைக்கு 10.25 சதவீதம் வட்டி வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இது கேரள அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 company fixed deposits for superior returns | இந்த 6 நிறுவனங்களில் பிக்சட் டெபாசிட் போட்டால் செம வருமானம்

Let's begin by a warning. Company fixed deposits are unsecure and hence the chances of losing capital and interest are far higher, as compared to say a bank fixed deposit. Of course, the returns are far superior, so the adage, "greater the risk, greater the returns" works. Above are 6 company deposits that offer superior returns, though investors should seek professional advice before investing in them
Story first published: Monday, May 13, 2013, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X