விபத்தில் இருந்து மீண்டு வர உதவும் இன்சூரன்ஸ் பாலிசிகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விபத்தில் இருந்து மீண்டு வர உதவும் இன்சூரன்ஸ் பாலிசிகள்
சென்னை: ஐசிஐசிஐ லம்பார்ட், ஹெச்டிஎஃப்சி எர்கோ, ராயல் சுந்தரம், அப்பல்லோ முனிச் மற்றும் டாடா ஏஐஜி போன்ற அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. ஆனால் இந்த விபத்து கால இன்சூரன்ஸ் பாலிசிகளின் தொகை குறைவாக இருப்பதாலும் மற்றும் இவற்றிற்கு வழங்கப்படும் கமிஷன் குறைவாக இருப்பதாலும், இன்சூரன்ஸ் முகவர்கள் இந்த பாலிசிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

பிரீமியத் தொகை

விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகளின் பிரீமியத் தொகை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். அதாவது ரூ.100 முதல் 200 வரை இருக்கும்.

விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகள் பின்வரும் இழப்புகளைக் கவர் செய்கிறது.

பாலிசிதாரரின் இறப்பு

விபத்திற்கான பாலிசியை வைத்திருப்பவர் விபத்தில் இறந்துவிட்டால் அந்த பாலிசிக்கான மொத்த தொகையும், இழப்பீடாக அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்படும். அதோடு மட்டும் அல்லாமல் ஒரு சில இன்சூரனஸ் நிறுவனங்கள் இறந்தவருடயை ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக "சில்ட்ரன்ஸ் எஜுகேஷன் போனஸ்" என்ற பெயரில் ரூ.5000 அல்லது ரூ. 10,000 வரை வழங்குகின்றன.

பெர்மனன்ட் டோட்டல் டிஸ்ஏபிள்மன்ட் (பிடிடி)

விபத்தில் ஒரு பாலிசிதாரர், நிரந்தரமாக மொத்தமாக செயலிழந்துவிட்டால் அவருடைய மொத்த பாலிசி தொகையையும், உடனடியாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கிவிடுகின்றன. ஒரு சில நிறுவனங்கள் 125 அல்லது 110 சதவீத தொகையை இழப்பீடாக வழங்குகின்றன.

நிரந்தர மொத்த செயலிழப்பு எவற்றையெல்லாம் உள்ளடக்குகிறது

1. இரண்டு கைகள் அல்லது இரண்டு கால்களை இழத்தல்
2. ஒரு கை அல்லது ஒரு காலை இழத்தல்
3. ஒரு கை அல்லது ஒரு கால் மற்றும் ஒரு கண்ணை இழத்தல்
4. இரண்டு கண்களின் பார்வை இழத்தல், பேச்சுத் திறனை இழத்தல் அல்லது கேட்கும் திறனை இழத்தல்

நிரந்தர உறுப்பு இழப்பு

விபத்தில் பாலிசிதாரரின் ஒரு உறுப்பு மட்டும் நிரந்தரமாக செயலிழந்துவிட்டால் அதற்கு இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ ஒரு சிறு தொகையை அவருக்கு வழங்குகின்றன. 100 வாரங்களுக்கு இந்த தொகை வழங்கப்படும்.

உறுப்பு நிரந்தர செயலிழப்பு எவற்றையெல்லாம் உள்ளடக்குகிறது

1. ஆள்காட்டி விரல் அல்லது கட்டை விரலை இழத்தல்
2. ஒரு காது மட்டும் செயலிழத்தல்
3. ஒரு கண் மட்டும் பார்வை இழத்தல்
4. ஒரு கால் மட்டும் இழத்தல்

தற்காலிக செயலிழப்பு

ஒருவேளை விபத்தின் காரணமாக பாலிசிதாரரின் உறுப்புகள் தற்காலிகமாக செயலிழந்துவிட்டால் அதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகைய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடாக வழங்குகின்றன.

குழு மற்றும் குடும்ப விபத்து இன்சூரன்ஸ் பாலிசிகள் தற்போது வந்திருக்கின்றன. ஒரு குழுவோ அல்லது ஒரு குடும்பமோ மொத்தமாக விபத்தில் பாதிக்கப்படும் போது அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர இந்த விபத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகள் பெரிதும் உதவி செய்கின்றன என்றால் அது மிகையல்ல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A few facts on personal accident insurance policy | விபத்தில் இருந்து மீண்டு வர உதவும் இன்சூரன்ஸ் பாலிசிகள்

All general insurance companies (ICICI Lombard, HDFC Ergo, Royal Sundaram, Apollo Munich, Tata AIG etc.) offer accident insurance policies. The agents, however, don't try to pitch these policies much as these are quite low priced policies with lesser commissions.
Story first published: Wednesday, May 15, 2013, 12:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X