ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்.. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்.. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை
நீங்கள் எடுத்திருக்கும் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸை நீங்கள் விரிவுபடுத்தினால், அது இன்னும் பல இழப்புகளைக் கவர் செய்யும். எனினும் அவ்வாறு விரிவுபடுத்தும் போது, அது உங்களுடைய செலவுகளை அதிகரிக்கும். எனவே தேவைக்கேற்ப, பாலிசியை விரிவுபடுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது விரிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ் பாலிசிகளை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் இவை தேவைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அப்படி இல்லையானால் அந்த பாலிசிகள் உங்கள் பாலிசி தொகையை அதிகரித்துவிடும்.

 

கார் வாங்குவது என்பது ஆடம்பரம் என்றால், அந்த காரை இன்சூர் செய்வது, ஒரு தேவையாகும். ஏனெனில் விபத்துகளிலிருந்து இன்சூரன்ஸ் காரைக் காப்பாற்றுகிறது. தற்போது சந்தையில் விரிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஏராளமாக உள்ளன. எந்த பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவு உங்கள் கைகளில் உள்ளது. அதுபோல் தேவையான இழப்புகளை மட்டும் கவர் செய்யும் பாலிசிகளும் உள்ளன.

 

சிஎன்ஜி(CNG) கிட் பாலிசி

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை அதிகமாக இருப்பதால், பல கார் உரிமையாளர்கள் எல்பிஜி கிட்ஸில் இயங்கும் கார்களை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் கோடை காலங்களில் இந்த எல்பிஜி கிட்ஸ் கார்களில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த கிட்சுகளுக்கு விரிந்த இன்சூரன்ஸ் பாலிசியைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.

இழப்பீடு கோரவில்லை என்றால் வழங்கப்படும் போனஸ்

நீங்கள் பாலிசி எடுத்த ஒரு வருடத்திற்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் எந்த விதமான இழப்பீடும் கோரவில்லையானால், அதற்காக உங்களுக்கு போனஸ் வழங்கப்படும். நீங்கள் இழப்பீடு கேட்கவில்லை என்பதற்கு பரிசாக இந்த போனஸ், இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் நீங்கள் இழப்பீடு கேட்காததைப் பொறுத்து 20 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை இருக்கும்.

இதற்கு முன்பு, ஒரு சிறிய இழப்பீட்டைக் கேட்டாலும், நிறுவனங்கள் போனஸை வழங்காது. ஆனால் தற்போது அதிக இழப்பீடு கோரினால், குறைவான போனசும், குறைவான இழப்பீடு கோரினால், அதிகமான போனசும் வழங்கப்படுகிறது.

சக பயணிக்கான இன்சூரனஸ்

சாலை விபத்து ஏற்படும் போது, அது ஓட்டுநரை மட்டும் பாதிப்பதில்லை. அவரோடு பயணம் செய்து வருபவர்களையும் பாதிக்கிறது. எனவே நீங்கள் சக பயணிகளுக்கும் சேர்த்து விரிந்த பாலிசியை எடுத்தால், விபத்தின் போது சக பயணிகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் இழப்புகளையும் பாலிசி கவர் செய்யும்.

சாலையில் ஏற்படும் தடைகளுக்கு இன்சூரன்ஸ்

ஒருவேளை உங்கள் வாகனம் சாலையில் செல்லும் போது பஞ்சர் காரணமாகவோ அல்லது வேறு பிற தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நடுவழியில் நின்றுவிட்டால் அதற்கும் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கிறது. அப்படிப்பட்ட சூழல்களில் இந்த இன்சூரன்ஸ், அதற்கான இழப்பை உங்களுக்கு வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Add on insurance cover for vehicle: things to remember

Add-on cover in your automobile insurance policy is made to expand the scope of coverage in the insurance cover. However, these covers also increase your cost and so the decision to go for these extensions can only be made based on the requirement of the policy. Now-a-days. various companies are offering such covers, but it should be need based, otherwise it can work to amplify your premiums.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X