அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா?
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-க்கள்) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிபிகேட்ஸ், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஸ்கீம்ஸ் மற்றும் இதர அஞ்சலக திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் முதலீடு செய்ய முடியாது.

ஆச்சரியமாக, அரசு சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை, ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை. ஆனால், தற்சமயம் அத்தகைய முதலீடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.

 

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் அத்தகைய முதலீடுகளை உள்நாட்டுவாசியான தன் பெற்றோர்கள் அல்லது பிற நண்பர்கள் மூலம் தங்கள் பெயரில் இல்லாதவாறு அவர்கள் பெயரில் உள்ளவாறு மட்டுமே செய்ய முடியும். அஞ்சலக திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டாலும் கூட, அதில் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

 

இதற்கான காரணம் மிகவும் எளிமாயானதே. அஞ்சலக திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானம் வரிவிதிப்பிற்குட்பட்டதாக இருக்கும். ஆனால் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரி விலக்கு பெற்றதாக இருப்பதோடல்லாமல், வங்கிகளால் வழங்கப்படும் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்கள், சில அஞ்சலக திட்டங்களைக் காட்டிலும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டவையாகவும் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பவைகளான சொத்து முதலீடு, வரி சேமிப்பு கடன் பத்திரங்கள், ஐபிஓ-க்கள், பரஸ்பர நிதி திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முயலலாம்.

ஒரு என்ஆர்ஐ என்பவர் யார்?

ஃபாரீன் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 1999 (எஃப்இஎம்ஏ) -இன் படி, ஒரு நான் ரெசிடென்ட் இந்தியன் அல்லது என்ஆர்ஐ எனப்படுபவர், ஒரு இந்திய குடிமகனாகவோ அல்லது இந்திய வம்சாவளியில் வந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜையாகவோ இருந்து, அவர் வேலை வாய்ப்பு காரணங்களுக்காகவோ அல்லது வியாபார நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையினாலோ வரையறுக்கப்படாத கால அளவில் இந்தியாவை விட்டு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருப்பவரே ஆவர். ஒரு நபர் முந்தைய நிதியாண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாகத் தங்கிருக்க நேர்ந்திருப்பின், அந்நபரையும் என்ஆர்ஐ-யாகக் கருதலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can NRIs invest in NSC, PPF and other post office schemes? | அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா?

Non resident Indians (NRIs) are not allowed to invest in post office savings schemes. This means they cannot invest in instruments like the National Savings Certificates, Public Provident Fund, Monthly Income Schemes and other time deposits offered by the post office. Interestingly, NRIs are also not permitted to invest in government savings bond. It's still not clear as to why non resident Indians are not allowed to invest in the post office schemes, but presently the law does not allow them.
Story first published: Sunday, May 5, 2013, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X