என்.ஆர்.ஐ.க்கள் என்.ஆர்.ஓ. கணக்கில் இருந்து என்.ஆர்.இ. கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ய முடியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்.ஆர்.ஐ.க்கள் என்.ஆர்.ஓ. கணக்கில் இருந்து என்.ஆர்.இ. கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ய முடியுமா?
சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வெளிநாடுவாழ் இந்தியர்களை என்ஆர்ஓ கணக்கில் இருந்து என்ஆர்இ கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ய அனுமதித்தது. அதற்கு முன்னதாக என்ஆர்இ கணக்கிற்கு வெளிநாட்டிலிருந்து அல்லது மற்றொரு என்ஆர்இ கணக்கில் இருந்து மட்டுமே பணம் அனுப்ப முடியும்.

எனினும் ரிசர்வ் வங்கி என்ஆர்ஓ கணக்கில் இருந்து என்ஆர்இ கணக்கிற்கான பணப் பரிமாற்றத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அந்த நிபந்தனைகள் பின் வருமாறு:

1. வெளிநாடுகளுக்கு மற்றும் பிற என்ஆர்இ கணக்குகளுக்கு ஒரு நிதி ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் அதிகபட்ச நிதிப்பரிமாற்ற உச்ச வரம்பு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

2. என்ஆர்ஓ வைப்பு அல்லது கணக்குகளுக்கான நிதி ஆதாரம் வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டிற்கு மாற்றத் தக்கதாய் இருக்க வேண்டும்.

3. பணத்தை பரிமாற்றுவதற்கு முன்னர் அதற்குறிய வரியை செலுத்த வேண்டும். அதாவது 15 சிஏ மற்றும் சிபி படிவத்தை, பணத்தை பரிமாற்றும் வங்கியில் செலுத்த வேண்டும்.

டிசம்பர் 2011ல் ஏற்பட்ட ரூபாயின் வீழ்ச்சியானது மத்திய ரிசர்வ் வங்கியை என்ஆர்இ வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றத் தூண்டியது. அதனை தொடர்ந்து நம் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் என்ஆர்ஓ கணக்கிற்கு சமமாக என்ஆர்இ கணக்குகளின் வட்டியை உயர்த்தின.

தற்பொழுது, வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்ஆர்இ கணக்குகளில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். ஏனெனில், அந்த நிதியை அவர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் பரிமாற்றிக்கொள்ளளாம். மேலும் அவர்களின் முதலீட்டிற்கு வரிச் சலுகையும் கிடைக்கிறது. பணப் பரிமாற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் சரியான நேரத்தில், அதாவது நாணயங்களுக்கு இடையே அதிக ஏற்றத் தாழ்வு நிகழும் பொழுது, தங்களுடைய பணத்தை, தங்களுடைய கணக்குகளுக்கு இடையே மாற்றி லாபமடையலாம்.

நீங்கள் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர் என்பது எப்படி தெரியும்?

இந்தியாவின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (எப்இஎம்ஏ) படி ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டவர் வெளிநாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வியாபார நோக்கமாகவோ, விடுமுறைக்காகவோ நீண்ட காலம் தங்க முற்படும் பொழுது, வெளிநாடுவாழ் இந்தியர் என்கிற தகுதியை பெறுகிறார். ஓரு தனி நபர், முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாக தங்கி இருந்தார் எனில் அவரை ஒரு வெளிநாடுவாழ் இந்தியராக கருத முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can NRIs transfer money from NRO to NRE account? | என்.ஆர்.ஐ.க்கள் என்.ஆர்.ஓ. கணக்கில் இருந்து என்.ஆர்.இ. கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்ய முடியுமா?

In May last year, the Reserve Bank of India allowed, Non Resident Indians (NRIs) to transfer money from non resident ordinary (NRO) to non resident external (NRO) accounts. Prior to that the only mechanism to transfer money into NRE accounts was through remittance from abroad or from another NRE account. However, certain conditions now have to be met before freely transferring money from NRO account to NRE account.
Story first published: Thursday, May 16, 2013, 8:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X