சிபில் கடன் மதிப்பெண்ணை பாதிக்கும் காரணிகள்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிபில் கடன் மதிப்பெண்ணை பாதிக்கும் காரணிகள்?
சென்னை: ஒரு நல்ல சிபில் மதிப்பெண் என்பது உங்களுடைய கடன் மதிப்பை வெளிப்படுத்த உதவும் மிக முக்கிய காரணியாகும். நீங்கள் கடன் பெற விரும்பினால் இது மிகவும் உதவியாக இருக்கும். வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் உங்களுக்கு கடன் வழங்கும் முன் உங்களுடைய சிபில் கடன் மதிப்பெண்ணை கட்டாயம் ஆராய்வார்கள். நீங்கள் எப்பொழுது கடன் வாங்கினாலும் உங்களுடைய நிதியாளர் உங்களுடைய தரவுகளை சீரான இடைவெளியில் சிபில் போன்ற கடன் அறிக்கை முகவர்கள் நிறுவனத்திற்கு வழங்குவார்கள். உங்களுக்கு தற்பொழுது கடன் பொறுப்புகள் ஏதும் இல்லை என்றாலும், நீங்கள் வாங்கிய கடனை குறித்த காலத்தில் திரும்பச் செலுத்தியிருந்தாலும், உங்களுக்கு ஒரு நல்ல உயர்ந்த கடன் மதிப்பெண் கிடைக்கும். ஒரு நல்ல சிபில் கடன் மதிப்பெண் என்பது உங்களுடைய கடன் மதிப்பை நிருபிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். ஒரு மோசமான மதிப்பெண் என்பது நீங்கள் கடன் அல்லது கடன் அட்டை பெறுவதற்கு மிகப் பெரிய தடையாகும்.

கடன் மதிப்பெண்ணை பதிப்புக்கு முக்கிய காரணிகள்:

கட்டணம் செலுத்திய வரலாறு

தாமதமாக கட்டணம் செலுத்துவது, உங்களுடைய மாதாந்திர தவணையை சரிவர செலுத்தாதது, மற்றும் உங்களுடைய கடனுக்கான தவணையை சரிவர செலுத்தாதது போன்றவை உங்களுக்கு கடனை திருப்பி செலுத்துவதற்கான வசதியில்லை என்பதை நீருபிக்கும் காரணிகளாகும். இதனால் உங்களுடைய கடன் மதிப்பெண் கண்டிப்பாக பாதிக்கப் படும்.

கடன் வரம்பை மீறிய பயன்பாடு

கடன் வரம்பை மீறிய பயன்பாடு என்பது உங்களுக்கு பெரும் நிதி தேவை என்பதை நிரூபிக்கும். அது உங்கள் மதிப்பீட்டிற்கு நல்லதல்ல . எடுத்துக்காட்டாக உங்கள் கடன் அட்டையின் கடன் வரம்பு ரூ 1 லட்சம் எனில், நீங்கள் அந்த எல்லையை மீறி செலவு செய்வது உங்கள் மதிப்பீட்டிற்கு நல்லதல்ல. இது நீங்கள் தற்பொழுது ஒரு பெரும் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும். அதிக சதவீத கடன் அட்டை அல்லது தனிநபர் கடன்

உங்களுடைய பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற கடன்களுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.உயர் விகிதத்திலான பாதுகாப்பற்ற கடன்கள் உங்களுக்கு நல்லதல்ல.

பல கணக்குகள்

பல்வேறு இடங்களில் பெறும் கடன் அட்டைகள் மற்றும் கணக்குகள் நிச்சயமாக உங்களுடைய கடன் மதிப்பெண்ணிற்கு நல்லதல்ல. உங்களுடைய கணக்குகள் மற்றும் கடன் அட்டைகளின் எண்ணிக்கையை குறைத்து உங்களுடைய நிதி வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய கடன் தரவரிசையில் அதிசயங்களை உருவாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the factors affecting your CIBIL credit score? | சிபில் கடன் மதிப்பெண்ணை பாதிக்கும் காரணிகள்?

A good CIBIL credit score is extremely important to improve your credit worthiness, if you wish to avail a loan. Banks and financial institutions will generally study your credit score before they disburse loans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X