ஒன்றுக்கும் மேற்பட்ட சொந்த வீடு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன்றுக்கும் மேற்பட்ட சொந்த வீடு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க
சென்னை: இந்திய வருமான வரி சட்டத்தின் படி ஒரு தனிநபருக்கு (என்.ஆர்.ஐ. அல்லது இந்திய குடிமகன்) ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் சொந்தமாக இருந்தால், ஒரே ஒரு வீடு மட்டும் அவர் குடியிருக்கும் வீடாக கருதப்படும். அந்த நபர் குடியிருக்கும் சொந்த வீட்டிற்கு வருமான வரி கிடையாது.

உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருந்தால் நீங்கள் குடியிருக்கும் வீட்டை தவிர பிற வீடுகளை நீங்கள் வாடகைக்கு விட்டுள்ளதாக கருதப்படுவீர்கள். எனவே, நீங்கள் உங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குரிய வருமானத்தை கணக்கிட்டு அதன் படி வருமான வரி செலுத்த வேண்டும்.

வாடகை வருமானம் கணக்கிடும் முறை, வருமான வரி விதிகளால் பரிந்துரைக்கப்படும் சில மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது. எனவே விதிகளின் படி நீங்கள் உங்களுடைய இரண்டாவது வீட்டை குத்தகைக்கு கொடுத்திருந்தாலும், அது வாடகை வருமானமாக கருதப்படும்.

இந்தியாவின் இந்த வருமான விதி உங்களுடைய பரம்பரை சொத்துகளுக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, உங்களுக்கு ஏற்கனவே ஒரு வீடு இருந்து பரம்பரை சொத்திலிருந்து உங்களுக்கு மற்றொரு வீடு கிடைத்தால் நீங்கள் உங்களுடைய இரண்டாவது வீட்டிற்கான வாடகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், இரண்டாவது வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம், உங்களுடைய மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்படும். எனவே, உங்களுக்கு இரண்டாவது வீடு சொந்தமாக இருந்தால் அதற்குறிய வாடகை வருமானத்தை கணக்கிட மறக்க வேண்டாம்.

ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் தன்னுடைய வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாமா?

ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவில் சொத்து வாங்க மற்றும் அதை வாடகைக்கு விட அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அந்த வாடகை வருமானத்திற்கு கண்டிப்பாக அவர் வருமான வரி செலுத்த வேண்டும். மேலும், அவருடைய வாடகை வருமானம் அவரின் மொத்த வருமானத்தின் ஒரு அங்கமாக கருதப்படும். எனவே, அவர் தற்பொழுது உள்ள வருமான வரி சட்டத்தின் படி வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்களுடைய இதர வருமானம் ரூ 2 லட்சம், மற்றும் உங்களுடைய வீட்டை குத்தகைக்கு கொடுத்த வகையில் உங்களுடைய வாடகை வருமானம் ரூ. 2 லட்சம் எனில், நீங்கள் ரூ. 4 லட்சத்திற்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியரின் வாடகை வருமானத்தை அவருடைய என்ஆர்ஓ கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is deemed rental income? | ஒன்றுக்கும் மேற்பட்ட சொந்த வீடு வைத்திருக்கிறீர்களா? இதை படிங்க

The Indian Income Tax Act specifies that, if an individual (never mind resident or NRI) owns more than one house property, only one of them will be deemed as self-occupied. The self-occupied property will not attract any income tax. However, if you own more then one house, then these houses will be deemed to be given on rent. So, the point is that, whether you give it on rent or not, you will have to calculate rental income on it and pay income tax accordingly. T
Story first published: Friday, May 17, 2013, 16:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X