இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வரும் புதிய வரி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அண்மைக் காலங்களில் செய்தித் தாள்களில் அடிக்கடி இடம்பெறும் இந்த செய்தியைப் பற்றி எழுதுவதை கண்டிப்பாக நீங்கள் புறக்கணிக்க முடியாது. ஜிஎஸ்டி அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பது நம் நாடு இதுவரை மேற்கொண்ட வரி சீர்திருத்த முயற்சிகளில் மிகப் பெரியதாகும். ஜிஎஸ்டி என்பது ஒரு மறைமுக வரியாகும். இவ்வரி தற்போது நடைமுறையில் உள்ள கலால் வரி, சேவை வரி, வாட் வரி போன்ற வரிகளுக்கு ஒரு மாற்றாக முன் மொழியப்படுகிறது.

(Investors see gold prices continuing to fall)

ஜிஎஸ்டி என்பது ஒரு விரிவான கட்டமைப்பாக இருக்கும். இதன்படி உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான வரி தேசிய அளவில் விதிக்கப்படும். ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டால் அது மத்திய மற்றும் மாநில அரசுளால் விதிக்கப்பட்ட பல்வேறு வரியினால் ஏற்படும் பரவலான ஊழலை தடுக்க உதவும்.

ஒரு விரிவான ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுமானால் நாட்டின் வளர்ச்சி விகிதம் தற்போது உள்ள அளவிற்கு மேல் கண்டிப்பாக 0.9 சதவீதம் முதல் 1.7 சதவீதம் வரை முன்னேறும். அதோடு இந்தியாவின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயரும் என ஹிந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கை டெல்லியைச் சேர்ந்த அப்லைட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியை ஒருமித்த ஆதரவுடன் செயல்படுத்துவதற்கு பல்வேறு முட்டுக் கட்டைகள் உள்ளன. அவற்றுள் பல மாநில அரசாங்கங்களின் வருவாய் பகிர்வு தொடர்பான சில கவலைகள் மிக முக்கியமானவை.

சமீபத்தில் நிதி அமைச்சர் 2013ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மாநிலங்களுக்கான மத்திய விற்பனை வரி இழப்பீட்டு தொகையாக ரூ.9, 000 கோடியை ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிட்டார்.

"ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்த நினைக்கும் இந்த அரசாங்கத்தின் சீரிய நோக்கத்தை புரிந்து கொண்டு, இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நாட்டின் வரி அமைப்பில் ஒரு நிலையான மாற்றத்தை கொண்டு வர அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் ஒத்துழைப்பை நான் கோருகின்றேன் " என்று மத்திய நிதியமைச்சர் திரு ப. சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் கூறினார். ஏற்றுமதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அது ஜிஎஸ்டி வரி கட்டமைப்பிற்குள் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேரடி வரிகளான வருமான வரி, கார்பரேட் வரி மற்றும் டிடிஎஸ் போன்றவை இதன் மூலம் பாதிக்கப்படாது. ஜிஎஸ்டி, அரசியலமைப்பு திருத்த மசோதா மூலம் சட்டமாக நிறைவேற்றப் படவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is GST or Goods and Services Tax? | இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வரும் புதிய வரி

It's so often in the news these days, it's just that you cannot ignore writing about it. GST or the Goods and Services Tax is touted as one of the biggest tax reform initiatives the country would have. The GST is an indirect tax and will replace a host of taxes like excise duty, service tax and value-added tax (VAT). The GST would be a comprehensive mechanism whereby tax on manufacturing and services would be levied at the national level.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X