குழந்தையின் கல்விச் செலவுகளுக்கு பொருத்தமான திட்டம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் கல்விச் செலவுகளுக்கு பொருத்தமான திட்டம்
சென்னை: குழந்தையின் எதிர்காலத்துக்கு, எங்கே முதலீடு செய்யப் போகிறீர்கள்? குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டத்துக்கு சிறந்ததாக கருதப்படுவது மியூச்சுவல் ஃபண்ட் தான். ஆனால் இதில் போதிய ஈட்டுத் தொகை கிடைக்கி என்பது சந்தேகமே.

சமீபத்தில் ஒரு முன்னணி நிதி சம்பந்தபட்ட இணையதளம் நடத்திய சர்வேயின் படி, குழந்தைகளுக்கு நீண்ட கால ஈட்டுத் தொகையை திருப்பி தரும் பி.பி.எஃப்(PPF) மற்றும் அஞ்சல் துறை திட்டங்களில் முதலீடு செய்வதை தான் அதிகப்படியான பெற்றோர்கள் விரும்புகின்றனர். இவை பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும் இதனால் கிடைக்கப் போகும் ஈட்டுத் தொகை குறைவே. பி.பி.எஃப் முதலீட்டில் வரும் ஈட்டுத் தொகையில் வருமான வரி விலக்கும் உள்ளது. ஆனால் முழுத் தொகையையும் இதில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் கிடையாது. அதற்கு காரணம் இந்த முதலீட்டினால் வரும் ஈட்டுத் தொகை 9% குறைவாகவே கிடைக்கிறது; ஆனால் நுகவோர் விலைவாசி உயர்வு 9% மேல் போகிறது. இது எதிர்மறை ஈட்டு வீதமாகும்.

 

சிறந்த வழி:

பாதுகாப்பான முதலீடு மற்றும் அதிக வருவாயை ஈட்டித் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளிலும் கலந்து முதலீடு செய்வது தான் சிறந்த வழியாகும். பல மியூச்சுவல் ஃபண்ட் சென்செக்ஸ் மற்றும் நிப்டியை அதிக வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

 

உதாரணதிற்கு, எஸ்.பி.ஐ எஃப்.எம்.சி.ஜி. ஃபண்ட் (SBI FMCG Fund) ஒரு வருடத்தில் 37 விழுக்காடு ஈட்டுத் தொகையை பெற்றுத் தந்தது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால், வங்கி மற்றும் அஞ்சல் துறையை விட அதிக அளவு வருவாய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் குழந்தைகளுக்கான முதலீடுகள் அதிக காலம் ஈட்டுத் தொகையை அளிக்க வேண்டியதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு மேலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to plan for your child's education needs?

The one question for parents and "to be parents" has always been where to invest for your child's future needs, whether it be Education or marriage.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X