இபிஎஃப் கணக்கை எவ்வாறு மாற்றுவது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் அடிக்கடி தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் இந்தக் காலத்தில், நீங்கள் உங்களுடைய ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) பற்றி புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த கட்டுரை இபிஎஃப்(EPF) கணக்கை பழைய நிறுவனத்திடம் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு உதவும்.

நாங்கள் உங்களுடைய பழைய கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளை இங்கு வழங்குகிறோம்.

இபிஎஃப் திரும்ப பெறுவதற்கான படிவங்கள்

இபிஎஃப் படிவம் 13: மற்றொரு கணக்கில் இருந்து உங்கள் இபிஎஃப் கணக்கிற்கு அல்லது ஓய்வூதியத்தை மாற்ற பயன்படுகிறது.

இபிஎஃப் படிவம் 10 சி: இபிஎஃப் கணக்கை திரும்ப பெறுவதற்கும் / திட்டத்தின் சான்றிதழை பெறவும் பயன்படுத்தப்படுகிறது

இபிஎஃப் படிவம் 10 டி: இபிஎஃப்ஒ திட்டத்தின் ​​(மாநிலத்திற்கு உள்ளே எனில் 2 பிரதிகள் அல்லது மாநிலத்திற்கு வெளியே எனில் 3 பிரதிகள்) கீழ் முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதியை திரும்பப் பெற பயன்படுத்தப்படுகிறது.

இபிஎஃப் படிவம் 19: ஃப்ரவிடன்ட் நிதியை இறுதியாக முடித்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இபிஎஃப் படிவம் 20: மரணத்திற்கு பிறகு வாரிசு அல்லது சட்ட வாரிசு ஃப்ரவிடன்ட் நிதியைப் பெற பயன்படுகிறது.

இபிஎஃப் படிவம் 31: ஊழியர் ஃப்ரவிடன்ட் நிதி திட்டம் 52 இன் கீழ் தற்காலிகமாக திரும்ப பெறுவதற்கு அல்லது முன்கூட்டியே பணத்தை பெறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இபிஎஃப் படிவம் 5IF: ஒரு ஊழியர் அவருடைய சேவையின் போது இறந்தால் அவருடைய வாரிசு இறந்தவருடைய சேமலாப நிதி நன்மைகளைப் பெற பயன்படுகிறது.

உங்கள் இபிஎஃப் கணக்கை பரிமாற்றுவதற்கான நடவடிக்கைகள்:

உங்கள் இபிஎஃப் கணக்கை பரிமாற்றுவதற்கான நடவடிக்கைகள்:

* முதலில் படிவம் 13ஐ (இதை சுலபமாக பதிவிறக்கம் செய்யலாம்)பெற வேண்டும்.

* பழைய இபிஎஃப் கணக்கு எண்ணை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* முந்தைய நிறுவனத்தின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

* புதிய நிறுவனத்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட உங்களுடைய புதிய வைப்பு நிதிக் கணக்கு எண்ணை நிரப்பவும்.

* பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை உங்களுடைய மனிதவள மேம்பாடு துறையில்(HR DEPT) சமர்ப்பிக்கவும்.

* மனிதவள மேம்பாடு துறை உங்களுடைய பிற விவரங்களை பூர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெற வேண்டும்.

*அதன் பிறகு அந்த படிவத்தை ஃப்ரவிடன்ட் நிதி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இது எவ்வாறு இயங்குகிறது?

இது எவ்வாறு இயங்குகிறது?

பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 13 உடன் விண்ணப்பத்தை சமர்பித்த பின்னர் அதனுடைய ஒரு நகலானது, பழைய நிறுவனத்திற்கு அனுப்பப்படும். மற்றொரு நகல் ஃப்ரவிடன்ட் நிதி துறைக்கு அனுப்பப்படும். உங்களூடைய பழைய முதலாளி உங்களைப் பற்றிய முக்கிய தரவுகளான உங்களுடைய பணி ஆண்டுகள் எண்ணிக்கை மற்றும் பிற விபரங்களை பூர்த்தி செய்து அதை ஃப்ரவிடன்ட் நிதித் துறைக்கு அனுப்பி வைப்பார். அந்த விபரங்களின் நகல் உங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

எனினும், இந்த முழு செயல்முறை முடிவுக்கு வர ஒரு மாதம் வரை ஆகலாம்.

 

திரும்பப் பெறுதல்

திரும்பப் பெறுதல்

இபிஎஃப் கணக்கை திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் ராஜினாமா செய்த தினத்திலிருந்து 60 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் கணக்கை திருப்பப் பெறுவதில் உறுதியாக இருந்தால் படிவம் 10சி ஐ பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

வரி பிடித்தம்

வரி பிடித்தம்

இபிஎஃப் கணக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் முறித்து, பணத்தை திரும்பப் பெற நினைத்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆகவே இபிஎஃப் கணக்கை எந்த காரணத்தை முன்னிட்டும் முறிக்காதீர்கள். அதை மாற்றுவதே அனுகூலமானது.

பரிமாற்ற நிராகரிப்பு / பணத்தை திருப்பித் தருதலில் கால தாமதத்திற்கான காரணங்கள்

பரிமாற்ற நிராகரிப்பு / பணத்தை திருப்பித் தருதலில் கால தாமதத்திற்கான காரணங்கள்

* பெயர், கையெழுத்து பொருத்தமில்லாமல் இருப்பது

* நிறுவனத்தில் சேர்ந்த தேதி அல்லது ராஜினாமா தேதி பொருத்தமில்லாமல் இருப்பது

* தவறான ஃப்ரவிடன்ட் நிதி கணக்கு எண்

* தவறான முகவரி

* தவறான வங்கி கணக்கு விவரங்கள்

எனவே, நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

 

ஏன் மாற்ற வேண்டும்?

ஏன் மாற்ற வேண்டும்?

கணக்கை முடித்து பணத்தை திரும்ப பெறும் விஷயத்தில் சேமிப்பிற்கான வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். அது சேமிப்பில் கணிசமான அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இபிஎஃப் கணக்கை மாற்றும் பட்சத்தில் உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியில் குறைந்த பட்சம் 12% ஒவ்வொரு ஆண்டும் சேமிக்க முடியும். மேலும் உங்களுடைய முதலாளியும் உங்களுக்கு சமமான அளவில் பங்களிப்பை செலுத்துகிறார்.

பயன்கள்

பயன்கள்

நீங்கள் உங்களுடைய கணக்கை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்து இருந்தால், உங்களுடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியில் குறைந்த பட்சம் 24 சதவீதத்தை ஒவ்வொரு ஆண்டும் சேமிக்க முடியும். மேலும் நீங்கள் 50 வயதை அடையும் பொழுது நீங்கள் அதுவரை சேமித்த பணம் உங்களுக்கு ஓய்வூதியமாக பயன்படும். நீங்கள் 58 வயதை அடையும் பொழுது ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவீர்கள்.

உங்களுடைய சிறிய பங்களிப்பு ஒரு மிகப் பெரிய தொகையாக உருவெடுத்து உங்களுடைய ஓய்வு காலத்திற்கு கைகொடுக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer an EPF account? Why is it necessary?

In an era where employee turnover is high, it's extremely important to know, understand and transfer the balance in your emplyees providend fund (EPF) account.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X