போனஸ் பங்குகள் என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போனஸ் பங்குகள் என்றால் என்ன?
போனஸ் பங்குகள் என்பது, ஒரு நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி வரும் நிறுவனம் அதனுடைய ரொக்க கையிருப்பை உபயோகிக்கும் பொருட்டு அதனுடைய தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். போனஸ் பங்குகள் 1:1, 1:2 போன்ற ஒரு நிச்சயமான விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக் காரராகி விடுகிறார்.

போனஸ் பங்குகளின் பாதிப்புகள் மற்றும் நன்மைகள் என்ன?

ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் பொழுது அந்நிறுவனத்தின் பங்கு விலை குறைகிறது. உதாரணமாக A என்கிற நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ 1000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அது தானகவே ரூ 500 ஆக குறைந்து விடும்.

ஒரு நிறுவனத்தின் போனஸ் பங்குகள் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு அதிக நீர்த்தன்மையை வழங்குகிறது. ஏனெனில் பங்கு விலை பாதியாக இருந்தால், உதாரணமாக, மேலே கூறிய எடுத்துக்காட்டில், ரூ 1000 ஆக இருந்ததை விட ரூ 500 ஆக இருக்கும் பொழுது, இன்னும் பல மக்கள் அந்த பங்குகளை வாங்க முடியும்.

முக்கிய விகிதங்களின் தாக்கம்

போனஸ் பங்குகள், பங்கு மூலதனத்தை அதிகரிக்கும். அது பங்கு மதிப்பு, மற்றும் பங்கு மூலதனத்தை காரணியாக கொண்ட ஒவ்வொரு விகிதத்தையும் பாதிக்கும். உதாரணமாக ஒரு பங்கினுடைய வருமானம் (EPS) குறைந்து விடும், ஏனெனில் அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் அதிகரித்துவிட்டது. எனவே, போனஸ் பங்குகள் என்பது மிகப் பெரிய நிறுவனத்தால் போனஸ் பங்குகள் வழங்கிய பின்னும் பங்கு மதிப்பு அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது.

கடந்த காலங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் மற்றும் சன் பார்மா போன்ற நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்கியுள்ளன.

எங்கிருந்து போனஸ் பங்குகள் வழங்கப்பகின்றன?

ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுதோறும் வரும் லாபத்தில் ஒரு குறிப்பிடப்பட்ட பகுதியை சேமித்து வைக்கின்றன. அந்த ரொக்க கையிருப்பை உபயோகிக்கும் பொருட்டு அந்த நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குகிறது. போனஸ் பங்குகள் வழங்கப் பட்ட பிறகு அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் உயர்ந்து விடும். அதன் ரொக்க கையிருப்பு குறைந்து விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are bonus shares? When are they issued?

Bonus share are issued by well managed profitable companies from the free reserves of the company to the existing shareholders. The bonus shares are issued in a definite ratio like 1:1, 1:2 etc. In the case of 1:1, every shareholder owning 1 share of a company would be entitled to another share free of cost.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X