சீட்டுகளும் அதன் லாப நஷ்டங்களும்!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீட்டுகளும் அதன் லாப நஷ்டங்களும்!..
சீட்டு என்பது கைவினைஞர்கள், கடைக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்கள் போன்றவர்களின் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது. சிறு சேமிப்பாக செயல்படும் இது, அவசர கால தேவையை சமாளிக்க உதவுகிறது. மேலும், திருமணம் போன்ற சுபகாரியங்களை சமாளிக்கத் தேவையான ஒரு பெருந் தொகையை தந்து உதவுகிறது. ஆகவே இதுபோன்ற அவசரத் தேவைகளை சமாளிக்க விரும்பும் நடுத்தர மக்களின் நெருங்கிய நண்பனாக இருந்து ஆபத்து காலங்களில் கைகொடுப்பதால், மக்கள் மத்தியில் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது.

சீட்டு எவ்வாறு வேலை செய்கிறது?தனிநபர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுடைய பங்களிப்பு அளிப்பார்கள். அவர்களில் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக ஏலமிட்ட தேதியில் பெறுவார்.

 

உதாரணமாக இப்போது சுமார் 10 உறுப்பினர்கள் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த சீட்டின் மொத்த கால அளவு சுமார் 10 மாதங்கள் இருக்க வேண்டும். தற்பொழுது ஒர்வொரு உறுப்பினரும் சுமார் 1000 ரூபாயை தங்களுடைய பங்களிப்பாக செலுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு நபருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால், அவர் ஒரு குறைந்த விகித ஏல தொகைக்கு ஏலம் எடுப்பார். உதாரணமாக மேலே கூறப்பட்ட வழக்கில் ஏல தொகை ரூ 10,000 (10 உறுப்பினர்கள் X ரூ 1000 = ரூ 10000) அல்லது அதற்கு குறைந்த அளவாக இருக்க வேண்டும். ஒரு சில நபர்களுக்கு அவசர பண தேவை இருக்கலாம் என்பதால் ஏலத்தின் முதல் மாதத்தில் ரூ 10000 க்கு பதில் ரூ 9000 க்கு ஏலம் எடுக்கலாம்.

 

அவ்வாறு ஏலம் போகும் விஷயத்தில், ஒவ்வொரு உறுப்பினரும் ரூ 1000 க்கு பதில் ரூ 900 மட்டுமே செலுத்த வேண்டும் . ஏனெனில் இந்த மாதத்திற்கு ஏலம் எடுத்த நபர் தனது அவசர தேவையின் காரணமாக ரூ 10000க்கு பதில் ரூ 9000 க்கே ஏலம் எடுத்தார். ஆகவே மீதம் உள்ள ரூ 1000 உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆரம்ப காலத்தில் ஏலம் எடுக்காததால் பிற நபர்கள் தள்ளுபடியை சீட்டின் நன்மையாக அனுபவிக்கிறார்கள்.

சீட்டு நிதிகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் சில சீட்டு நிறுவனங்கள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கர்நாடகாவில் இது சீட்டு நிதி (கர்நாடகா) விதிகள் 1983 ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. கேரளாவில், சீட்டு நிறுவனங்கள் கேரளா சீட்டு சட்டம் 1975 மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இதேபோல், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, புது தில்லி போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களால் சீட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கேரளா மாநிலத்தில் கேரள மாநில நிதி நிறுவனங்கள் லிமிடெட் என்கிற மாநில அரசுக்கு சொந்தமான அரசு நிறுவனம், சீட்டுகளை நடத்தி வருகிறது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are chit funds? How do they work?

Chit funds are rather popular among the artisans, shopkeepers and many such businessmen running small businesses. It's also popular among other individuals as well, who would like to receive a lumpsum for a special occasion like marriage, anniversary etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X