இந்தியாவின் சிறந்த கடன் சார்ந்த முதலீடுகள் எவை?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் சிறந்த கடன் சார்ந்த முதலீடுகள் எவை?
கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு என்பது முதலீட்டாளரின் திறன் மற்றும் அவரது முதலீட்டு கால எல்லையை பொறுத்தது.

மிதமான அபாயம் மற்றும் குறுகிய கால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு:

கடன் நிதி, வைப்பு நிதி, மற்றும் வரி இல்லா பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு என்பது நடுத்தர காலம் முதல் நீண்ட கால நோக்கில் முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். கடன் நிதி, பல்வேறு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படும். மேலும் கடன் பத்திரங்கள் மிகச் சிறந்த முறையில் தொழில் முறை விற்பன்னர்களால் நிர்வகிக்கப் படுகிறது. பெரும்பாலான கடன் நிதிகள் விரைவில் விற்பனையாகிவிடுவதால், அதில் மேற்கொள்ளப்படும் முதலீடு நீண்ட காலத்திற்கு தங்காது.

(Spot gold rates in Indian cities on June 5)

பொருளாதார நிலை உயர்ந்து வட்டி விகிதம் குறையும் பொழுது, இந்த பணம் பங்கு சந்தைகளுக்கு திருப்பி விடப்படும். ஒரு முதலீட்டாளராக சந்தையில் மீண்டும் இயல்பு நிலை வரும் வரை வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், ஒரு நடுத்தர கால வைப்பு நிதி என்பது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

பாதுகாப்பு மற்றும் வழக்கமான வருமானத்தை அனுபவிக்க நினைத்தால் வரிஇல்லா பத்திரங்கள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இத்தகைய பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கான வருமானம் உங்களுக்கு சீரான இடைவெளியில் கிடைக்கும். மேலும் முதலீடு முதிர்வு காலத்திற்கு பின் திரும்ப கிடைக்கும்.

அரசு நிர்வகிக்கும் சேமிப்பு முதலீடு திட்டங்களை (என்எஸ்சி போன்றவை) தற்பொழுது தவிர்பது நல்லது. வரவிருக்கும் டிடிசி (DTC) யில் இத்தகைய முதலீடுகளுக்கான வருமான வரி விலக்கு விளக்கி கொள்ளப்பட இருக்கிறது.

குறைந்த அபாய மற்றும் நீண்ட கால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு

2014 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய டிடிசி (DTC) விதியின் படி, பொது வருங்கால வைப்பு நிதி முதலீடுகள் மூன்று ஈக்களால் நிர்வகிக்கப்படும். (EEE). இதற்கு முன்னர் இது இரண்டு ஈ மற்றும் ஒரு டியால் நிர்வகிக்கப்பட்டது(EET). எனவே இதில் செய்யப்படும் முதலீடு, சேமிப்பு, மற்றும் விலக்கிக் கொள்ளுதல் போன்றவற்றிற்கு வரி கிடையாது. DTC இந்த பரிந்துரையை 2014 முதல் அமுல்படுத்தினால், பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு என்பது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு என்பது ஒரு வரியை மிச்சப்படுத்தும் முதலீடாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் வரியை முதலீட்டின் வருமானத்துடன் சேர்த்து பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the best debt options In India?

Investment in debt instruments would depend on the individuals ability to take risk and his investment time horizon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X