பங்கு சந்தையில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 20,000 புள்ளிகளை ஒட்டியே நீடித்தாலும், பங்கு சந்தையின் நிலையை நிர்ணயிக்ககூடிய மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகள் மிகக் குறைந்த (52 வாரம்) விலையில் கிடைக்கின்றன. அவ்வாறு தேசிய பங்குசந்தையில் (Nifty) மிகக் குறைந்த விலையில் (ஒரு வருட குறைந்த விலை) கிடைக்ககூடிய சில நிறுவனங்களின் பங்குகளை இப்போது பார்ப்போம்.

 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

நாட்டின் மிகப்பெரிய வங்கியான, எஸ்பிஐயின் பங்கின் மதிப்பு ஒரு வருடத்தில் அடைந்திராத வீழ்ச்சியை கடந்த வெள்ளியன்று கண்டது, அதாவது 1751.70 ரூபாய் மதிப்பில் விற்கப்பட்டன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசமான காலாண்டு முடிவுகளை தொடர்ந்து, முதலீட்டளார்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்குகளை தொடர்ந்து விற்று வருவதால் ஏற்பட்ட வீழ்ச்சி இதுவாகும். தற்போதைய விலை நிலவர அடிப்படையில், 1751.70 ரூபாய் என்பது மிகக்குறைந்த மதிப்பீடாகும்.

டாட்டா ஸ்டீல்

டாட்டா ஸ்டீல்

முதலீட்டளார்கள் உலோகம் மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகளை விற்றதின் விளைவாக, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 52 வார வீழ்ச்சியை அடைந்து 216.65 ரூபாய்க்கு விற்றன. கடந்த ஜனவரி மாதத்தில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 52 வார விலை ஏற்றத்தை அடைந்து 448 ரூபாய்க்கு விற்ற நிலையை ஒப்பிடும் போது , தற்போதைய விலையானது பாதி அளவே ஆகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி
 

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசமான காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து அதன் பங்குகள் 583 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. வங்கியின் நிகர லாபம் எதிர்பார்த்ததை விட குறைந்ததால், அதன் பங்குகளின் விலை 52 வார வீழ்ச்சியை அடைந்தன. தற்போதைய மதிப்பின் படி, பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கின்றன.

ஐடிஎஃப்சி

ஐடிஎஃப்சி

அடிப்படை கட்டமைப்பு நிதி நிறுவனமான ஐடிஎஃப்சி யின் பங்கு விலையும் கடந்த வெள்ளியன்று 52 வார வீழ்ச்சியை அடைந்து, 114.70 ரூபாய்க்கு விற்றது. பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பாரத ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளின் விளைவாக நிதித்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த பங்குகளுக்கு சந்தையில் வரவேற்பு குறைவாகவே காணப்பட்டன

ஜின்டல் ஸ்டீல்

ஜின்டல் ஸ்டீல்

ஜின்டல் ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையும் ஒரு வருட வீழ்ச்சியை சந்தித்து, 182 ரூபாய்க்கு விற்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மந்தமாக காணப்படுவதால், உலோக துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியையே அடைந்தன. இருப்பினும் தற்போதைய விலையானது குறைந்த மதிப்பீடாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 super Nifty stocks at 52-week lows

Even as the Sensex remains near the 20,000 levels, the fact remains that there are many stocks that have hit their 52-week lows.
Story first published: Tuesday, July 30, 2013, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X