வைரத்தை மதிப்பிடுவது எப்படி??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வைரத்தின் மதிப்பீடு என்பது அதன் தரத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. வைரத்தை வாங்கும் முன் ஒரு தொழில்முறை வல்லுனரிடம் கருத்து கேட்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பொதுவாக வைர கொள்முதல் சம்பந்தப்பட்ட மந்திரச்சொல்லான "சி" ஐ பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வைரத்தின் தெளிவு

வைரத்தின் தெளிவு

வைரம் வாங்குபவர் இந்த காரணியைப் பற்றி முழு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் ஏராளமான முதலீட்டாளர்கள் இந்த காரணியின் அடிப்படையில் ஏமாற்றப் படுகிறார்கள். வைரத்தின் தெளிவு, வடுக்கள், மற்றும் கடினத்தன்மையை ஆதாரமாகக் கொண்டு வைரத்தின் தரம் பிரிக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு அதிகம் எனில் அதில் உள்ள வடுக்கள் குறைவு என அர்த்தம். அத்தகைய வைரங்கள் மதிப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதை ஒரு நிபுணரால் மட்டுமே கணிக்க முடியும்.

வைரத்தின் தெளிவு கூட்டுதல்

வைரத்தின் தெளிவு கூட்டுதல்

நிறமற்ற வைரங்கள் சில செயற்கையான நடைமுறைகளுக்கு பின்னர் மதிப்பு கூட்டப்படுகின்றன. வடுக்கள் மற்றும் வெட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு அந்த வைரத்தை குறைபாடற்ற வைரமாக மாற்றுகின்றன. இது `பிராக்சர் பிள்ளிங்க்' (fracture filling) என்கிற முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின் ஒளி அந்த வைரத்தின் வழியே நன்கு கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் அது வைரத்தின் தெளிவை அதிகரிக்கிறது.

வைரத்தின் வெட்டுத் தரம்

வைரத்தின் வெட்டுத் தரம்

வைர வெட்டு சிறப்பாக இருந்தால் அதன் விலையும் மிக அதிகம். இந்த வெட்டு வைரத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்கிறது. இந்த வைர வெட்டு சில நேரங்களில் வைரத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி வைரத்தின் நிறத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.

வைர சான்றிதழ்

வைர சான்றிதழ்

சான்றளிக்கப்பட்ட வைரத் துண்டுகள் பிற வைரங்களை விட உண்மையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்றன. வைரத்திற்கு சர்வதேச ஜெம்மாலஜிக்கல் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனம் (IGL &I), மற்றும் ஜியா, மும்பை போன்ற நிறுவனங்கள் சான்றளிக்கின்றன. சான்றளிக்கபட்ட வைரத்தின் விலை பிற வைரங்களை விட சற்று அதிகமாககும். மேலும் சான்றளிக்கப்பட்ட வைரத்தின் உண்மையான மதிப்பை அதன் சான்றிதலின் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: diamond jewellery வைரம்
English summary

How to evaluate a diamond for investment in India?

The evaluation of a diamond is done on the basis of grades. You either have to take a professional opinion before buying diamonds or you should be aware of the "C"s that are generally used in diamond purchase terminology.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X