நிறுவனத்தின் நிரந்தர வைப்பு நிதிகளில் பொதிந்திருக்கும் அபாயங்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிறுவனத்தின் நிரந்தர வைப்பு நிதிகள் பாதுகாப்பற்ற நிதிகள் என்று கருதப்படுகின்றன. ஏனெனில், ஒரு முதலீட்டாளர், அவர் முதலீடு செய்த பணத்தைத் திருப்பி எடுக்க அவரது சான்றிதழை விற்க முடியாது. மேலும், கம்பெனி சொத்துகளைக் கொண்டு அவரது முதலீடுகள் பாதுகாக்கப்படுவதும் மிகவும் ஆபத்து.

இதன் அர்த்தம் யாதெனில், சில பல காரணங்களால் மூலதனத் தொகையை சர்வீஸ் செய்யவும், அதனை உங்களுக்கு திருப்பிச் செலுத்தவும் கம்பெனியால் இயலவில்லையெனில் உங்கள் மூலதனம் மற்றும் அதுவரை சேர்ந்து வந்த வட்டித்தொகையோடு உங்கள் டெபாசிட் மொத்தமும் பறிபோய் விடும் அபாயம் உள்ளது. நிறைய முதலீட்டாளர்கள் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்களிலிருந்து ஒழுங்காக பணம் பெறாதது பற்றியும், தாமதமாகப் பெற்ற தொகைகளைப் பற்றியும் ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன.

வரும் முன் காப்பது நலம்

வரும் முன் காப்பது நலம்

ஒரு நிறுவனத்தின் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு முன் அலசி ஆராய்ந்து புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது நல்லது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்ஸிகள் ஒரு நிறுவனத்தின் அடிப்படைகக் கூறுகளைக் கொண்டு அதற்கான கிரெடிட் ரேட்டிங்கை வழங்குகின்றன. ஒரு நிறுவனம் வலுவான நிதி நிலைமையுடன் உள்ளதா எனவும், அந்நிறுவனத்தால் கொடுத்த வாக்கு உறுதிகளை சரியாக நிறைவேற்ற முடியுமா எனவும் இந்த ரேட்டிங் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஏஏஏ ரேட்டிங்

ஏஏஏ ரேட்டிங்

உதாரணமாக, கிரெடிட் ரேட்டிங் ஏஜென்ஸியான கரிசில்(crisil), ஒரு நிறுவனத்தின் நிரந்தர வைப்பு நிதிக்கு ஏஏஏ என்ற ரேட்டிங்கை வழங்கியிருக்குமாயின் அந்நிறுவனம் நிதி தொடர்பான அதன் சேவைகளை சரிவர நேரத்தோடு நிறைவேற்றக்கூடியது என்பதையே இந்த ரேட்டிங் உணர்த்துகிறது. இத்தகைய நிறுவனங்களின் திட்டங்கள் மிக மிகக் குறைவான கிரெடிட் அபாயத்தைக் கொண்டிருக்கும்.

ஏஏ ரேட்டிங்

ஏஏ ரேட்டிங்

அதே போல், ஏஏ ரேட்டிங் என்றால் நிதி தொடர்பான சேவைகளில் உயர்ந்த அளவிலான பாதுகாப்பைக் கொண்டு கால தாமதமின்றி கடமையாற்றக் கூடியது என்று அர்த்தமாகும். இத்தகைய ரேட்டிங் அளிக்கப்பட்ட நிறுவனங்களின் திட்டங்கள் ஓரளவு குறைவான கிரெடிட் அபாயத்தைக் கொண்டிருக்கும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

அனைத்தையும் அலசி ஆராய்ந்து சரிபார்ப்பதைக் காட்டிலும் அதீத வட்டி விகிதங்களைக் கண்டு மயங்காமல் இது போன்ற முதலீடுகளைத் தவிர்ப்பதே சிறந்த வழியாகும். வங்கி நிரந்தர வைப்பு நிதிக்கும் மோசமான ஒரு நிறுவனத்தின் ஃநிரந்தர வைப்பு நிதிக்கும் அதிகபட்ச வேறுபாடு மிஞ்சிப் போனால் சுமார் 4% இருக்கக்கூடும். அதனால், இந்த விகிதங்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன்

நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன்

கடைசியாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன், அதில் ஏற்கெனவே டெபாசிட் வைத்திருக்கக் கூடியவர்களிடமும், புரோக்கர்களிடமும் அந்நிறுவனம் தன் ஃபிக்ஸட் டெபாசிட் கடமைகளை சரிவர நிறைவேற்றி வந்திருக்கிறதா என்று அதன் கடந்த கால செயல்பாட்டுத் திறனைக் கேட்டறிந்து கொள்வது புத்திசாலித்தனமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the risks associated with company fixed deposits?

Company deposits it must be remembered are deposits that are not safe, as they are unsecured deposits. What this means is that an investor cannot sell his Certificate to recover the money and it may also not be secured against the assets of the company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X