இந்தியாவின் கேபிஓ சந்தை அடுத்த இரு ஆண்டுகளில் 30 பில்லியன் டாலரைத் தாண்டும்: அஸ்ஸோசாம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் கேபிஓ சந்தை அடுத்த இரு ஆண்டுகளில் 30 பில்லியன் டாலரைத் தாண்டும்: அஸ்ஸோசாம்
வருடத்திற்கு சுமார் 30 சதவீத வளர்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆர்) வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் நாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்ஸிங் (KPO) சந்தை, 2015 ஆம் ஆண்டில் தற்போதைய 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலிருந்து சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான அளவை எட்டும் என்று தொழிற்துறை அமைப்பான அஸ்ஸோசாம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸோசாம் "இந்திய கேபிஓ துறையின் தற்போதைய சூழல்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அதன் சமீபத்திய ஆய்வுக் குறிப்பில், அதிகரித்துக் கொண்டே இருக்கும் தொழில்முறை சார்ந்த சேவைகளுக்கான தேவை, ஏனைய பணிகளைக் காட்டிலும், மூலதனம் மற்றும் நிதி சந்தைகள், சட்டம் தொடர்பான பணிகள் மற்றும் பதிப்பு சார்ந்த பணிகளைப் பற்றிய ஆராய்ச்சி போன்ற தொழிற்துறைகளில் முக்கியமாக வளர்ச்சியை முடுக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் இந்தியாவின் கேபிஓ துறை தற்போது ஃபிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளிலிருந்து மிகக் கடினமான போட்டியை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் யாதெனில், தரமான கேபிஓ தொழில்துறை வல்லுநர்கள், குறைந்த விலை பயன்கள், தொழில்நுட்ப அறிவு, அனுகூலமான இட அமைவு, திறமையான விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல், மற்றும் தகவல் உடன்படிக்கை போன்ற அம்சங்களை எடை போட்டுப் பார்க்கும் போது இந்த நாடுகள் அனைத்தும் போட்டியாளர்களாக விளங்குவதே ஆகும்.

 

எனினும், அஸ்ஸோசாம் செக்ரெட்டரி ஜெனரல் டி.எஸ்.ராவத் கூறுகையில் இந்திய நிறுவனங்களுக்கு நல்ல தரமான, அனுபவம் மற்றும் ஆற்றல் வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்துவது மிகவும் கடினமாக இருப்பதினால், இந்திய கேபிஓ துறை மனிதவள விநியோகப் பற்றாக்குறையினால் தவித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's KPO market to cross $30 bn in next two years: Assocham

India's Knowledge Process Outsourcing (KPO) market, which is growing at a compound annual growth rate (CAGR) of about 30 per cent annually, may touch USD 30 billion by 2015 from the current level of USD 20 billion
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X