பங்கின் பீட்டா மதிப்பு என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குகளில் முதலீடு செய்ய எத்தனிக்கும்போது அதன் மீதான ஆபத்தை குறிக்கும் முக்கிய குறியீட்டெண் பீட்டா மதிப்பு ஆகும். பீட்டா மதிப்பு குறிப்பிட்ட பங்கின் ஆபத்தையோ அல்லது ஒட்டுமொத்த பங்குகளின் ஏற்ற இறக்கங்களையோ குறிக்க பயன்படுத்தப்படும். இந்த அளவு முதலீட்டாளர்களிடம் பயன்பாட்டில் பரவலாக இல்லை என்றாலும், பங்குச்சந்தை வல்லுனர்கள் பங்கின் ஆபத்து அளவை தீர்மானிக்க தொடர்ந்து பீட்டா மதிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

எவ்வாறு பீட்டா மதிப்பு கணக்கிடப்படுகிறது?

எவ்வாறு பீட்டா மதிப்பு கணக்கிடப்படுகிறது?

பொதுவான வரையறையின் படி, முன்னிருப்பு அளவாக சந்தைக்கு பீட்டா மதிப்பு ஒன்று (beta value 1) ஒதுக்கப்படும். பங்கின் ஏற்ற இறக்கத்தை பொருத்து அதன் பீட்டா மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

பீட்டா மதிப்பு ஒன்றை விட உயர்வானதாக இருந்தால்

பீட்டா மதிப்பு ஒன்றை விட உயர்வானதாக இருந்தால்

சந்தையின் ஏற்ற இறக்கத்துடன் ஒப்பிடுகையில், பங்கின் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தால் அதன் பீட்டா மதிப்பு ஒன்றை விட கூடுதலாக இருக்கும். அவ்வாறான பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்து மிகுந்தது. அதே வேளையில் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்தால் கூடுதலான இலாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. அப்பங்கு அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும் என்றும் மாற்றத்தக்க பணம் குறைந்த அளவில் கிடைக்கும் என்பதையும் குறியிட இம்மதிப்பீடு பயன்படுகிறது. உதாரணமாக தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் பீட்டா மதிப்பு ஒன்றும் மேலாக குறிக்கப்படுகிறது.

பீட்டா மதிப்பு ஒன்றை விட குறைவாக இருந்தால்

பீட்டா மதிப்பு ஒன்றை விட குறைவாக இருந்தால்

சந்தையின் ஏற்ற இறக்கத்துடன் ஒப்பிடுகையில் பங்கின் ஏற்ற இறக்கம் குறைவாக இருந்தால் அதன் பீட்டா மதிப்பு ஒன்றை விட குறைவாக அளவிடப்படும். இந்த பீட்டா மதிப்பீடு பங்கின் குறைந்த ஆபத்தை பிரதிபலிப்பதாய் உள்ளது, ஆகவே குறிப்பிட்ட காலத்தில் குறைந்த இலாபமே ஈட்ட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக எளிதில் பணமாக்கக்கூடிய பங்குகள் மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களின் (blue-chip) பீட்டா மதிப்பு ஒன்றை விட குறைவாக அளவிடப்படும்.

பீட்டா மதிப்பு ஒன்று

பீட்டா மதிப்பு ஒன்று

பீட்டா மதிப்பு ஒன்றாக இருக்குமானால் பங்குகளின் விலை ஒட்டுமொத்த சந்தை நிலைமைகள் மற்றும் இயக்கத்துடன் இணைந்தே நகரும் என குறிக்கிறது. பொதுவாக சந்தை மதிப்பை குறிக்க உதவும் பங்குகளின் பீட்டா மதிப்பு ஒன்றாக இருக்கும்.

ஜீரோ பீட்டா மதிப்பு

ஜீரோ பீட்டா மதிப்பு

சந்தை நிலைமைகள் மற்றும் இயக்கத்துடன் எந்த தொடர்பும் பங்கு விலையுடன் இல்லையெனில் அப்பங்குகள் ஜீரோ பீட்டா மதிப்பைக் கொண்டிருக்கும்.

பீட்டா மதிப்பும், முதலீட்டாளர்களுக்குமான தொடர்பும்

பீட்டா மதிப்பும், முதலீட்டாளர்களுக்குமான தொடர்பும்

பீட்டா மதிப்பு பங்கு பகுப்பாய்வு நடவடிக்கைகளிலும், விலை இடரை கணக்கிடவும் பயன்படுத்தப்படுகிறது. எனினும் பீட்டா மதிப்பீடு சில கட்டுப்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is beta value of shares?

One of the statistical measures to adjudge the degree of risk of any stock while considering it for investment is the beta value.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X