மூதலீட்டுப் பாதுகப்பு நிதி ஏன்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூதலீட்டுப் பாதுகப்பு நிதி ஏன்றால் என்ன?
மூதலீட்டுப் பாதுகாப்பு நிதி திட்டம் ஒரு குளோஸ்ட் என்டெட் (மூடிய முனை) மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நியூ ஃபண்ட் ஆஃபரின் ( NFO) போது மட்டுமே சப்ஸ்க்கிரைப் செய்வதற்கு திறந்துவைக்கப்படும். அதற்கு பின்னர் இந்த நிதியில் மீள்முதலீடு செய்வதற்கோ அல்லது புதிதாக சப்ஸ்க்கிரைப் செய்வதற்கோ அனுமதி இல்லை. ஆகவே முதலீட்டுக் கால முடிவு வரை, கார்ப்பஸ் அல்லது முதலீட்டுத் தொகை நிலையாக இருக்கும். முதலீட்டு இடர்பாடுகளை விரும்பாத, முதலீட்டு மதிப்பேற்றத்தை விரும்பும் முதலீட்டாளர்களின் இலக்காக இவ்வாறான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்திற்கு இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும்.

முதலீட்டுப் பாதுகாப்பு நிதி பின்வரும் நோக்கங்களுக்கு உகந்ததாகும்.

முதலீடு குறித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களைக் கொண்ட ஒரு முதலீட்டாளர் என்றால், நீங்கள் நிச்சயமாக இந்த முதலீட்டு திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.

உறுதியான நிதி திட்டம்

முதலீட்டுப் பாதுகாப்பு நிதிகள் குளோஸ்ட் என்டெட் (மூடிய முனை) திட்டங்களாக இருப்பதால், இது ஒரு உறுதியான நிதி இலக்கைக் கொண்ட, 3-5 வருட கால முதலீட்டுத் திட்டமாகும். மேலும், முலதன பாதுகாப்பு நிதி திட்டங்கள் பங்குச் சந்தைப் பட்டியலில் இருந்த போதிலும், இவற்றின் லிக்யூடிடி தன்மை மிகவும் குறைவாகும்.

மூலதனப் பாதுகாப்புடன், முதலீட்டு மதிப்பேற்றம்

வங்கி நிலையான வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புத் திட்டங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் இலாப விகிதத்தை ஒப்பிடு செய்து, அதனை விட அதிக லாபம் ஈட்டக்கூடிய மற்றும் முதலீட்டு பாதுகாப்பை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பொருத்தமான திட்டமாகும்.

இருப்பினும், உங்கள் முதலீட்டிலிருந்து நீங்கள் 30%-40% வரை உயரிய லாப விகிதத்தை எதிர்பார்த்தால், இவ்வாறான முலதன மதிப்பேற்ற நிதிகளின் மூலம் இதை ஈட்ட முடியாது.

முதலீட்டுப் பாதுகாப்பு

வழக்கமாக மூலதன பாதுகாப்புக் குறித்து எந்தவொரு உறுதியான உத்தரவாதம் இல்லை என்ற போதிலும், பெரும்பாலான நேரங்களில், இது போன்ற சில நிதித் திட்டகளில் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் மொத்த தொகையில், 70%-80% கடன் பத்திரங்களிலும், 20%-30% பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்யப்படுகிறது.

எனவே 3-5 வருட முதலீட்டுக் காலத்தில், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து வட்டி வருமானமும், முதலீட்டு மதிப்பேற்றமும் ஒரு உறுதியான சதவிகிதத்தில் கிடைக்கும். ஆகவே, பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட தொகையில் நஷ்டம் ஏற்பட்டாலும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து கிடைக்கக் கூடிய லாபம், பங்குகளில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்து, மூலதன பாதுகாப்பு நோக்கத்தை அடைய வழிசெய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Capital Protection Funds: Finer points explained

Capital protection funds are closed-ended mutual fund schemes that are open for subscription only during the new fund offer (NFO) and thereafter no redemption or fresh subscription is allowed in the fund.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X