English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

ரியல் ஸ்டேட்டில் இப்போ காசு போடலாமா??

Updated: Saturday, September 21, 2013, 16:49 [IST]
 

சென்னை: வீடு அல்லது நிலம் வாங்கும் போது, விலையைப் பற்றி யோசிக்கக் கூடாது, என்பது பாரம்பரியமாக சொல்லப்பட்டு வரும் ஒரு கருத்து. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரங்கள் அடிப்படையில், எதிர்வரும் அண்மைக் காலங்களில் ரியல் எஸ்டேட் விலை உயர்வு இருக்காது என அத்துறை சேர்ந்த நிபுணர்கள் ஊகித்துள்ளனர். ஆகவே உங்கள் தீர்மானத்தை பின்போடுவதால், எந்த தீங்கும் ஏற்டாது, சாதகமாகவே அமையும்.

இருப்பினும், உங்களுக்கு சொத்து மீது ஆர்வம் இல்லையெனில் மற்றும் கூடுதலாக சொத்து வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இல்லையென்றால், நிச்சயமாக விலையை குறைத்து கேட்கலாம். ரியல் எஸ்டேட்துறையில் அதிகளவு இருப்பு தேங்கியிருப்பதாலும், அதற்கான டிமான்ட் குறைவாக உள்ளதாலும், டெவெலப்பர்கள் அதிகளவில் தள்ளுபடி வழங்க வாய்ப்புண்டு.

சொத்து வாங்குவதை பற்றி சிந்திக்கும் போது, வீட்டுவசதி துறையின் கொள்கைகளை பார்த்தும், சிந்தித்தும் வாங்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணிகள் பின்வருமாறு கூறிப்பிடபட்டுள்ளன:

பணவீக்கம்

பணவீக்கத்தின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பது, குடும்ப பட்ஜெட்டில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே சொத்துகளில் முதலீடு செய்ய விரும்புவோர் தங்கள் தீர்மானத்தை சிறிதுகாலம் நீடித்துள்ளனர். மேலும், ரூபாயின் தாக்கம், டெவெலப்பர்கள் இறக்குமதி செய்யும் கட்டுமான பொருட்கள் மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றின் செலவு அதிகரித்துள்ளது, இதனால் கட்டுமான திட்ட நடவடிக்கைகள் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

80:20 கடன் வழங்கும் திட்டம்

கடன் வழங்கும் திட்டத்தில் ஆர்பிஐ கொண்டுவந்துள்ள மாற்றங்கள், வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு சலுகை வழங்குவதாக தோன்றுவதால், பெருமளவில் விற்பனையை ஊக்குவிப்பதற்கு உதவும், இது டெவெலப்பர் சமூகத்தை கடுமையாக காயப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விற்பனை தொய்வு நிலையை ஊக்குவிப்பதற்கு, டெவெலப்பர்கள் வேறு நடவடிக்கைகைளை மேற்கொள்வதால், இந்த ஆர்பிஐ-யின் நடவடிக்கை சொத்து விலையில் திருத்தங்களை உருவாக்கும் என எதிபார்க்கப்படுகிறது.

இது சரியான தருணம் இல்லை

இந்த துறையில் முதலீட்டு மதிப்பேற்றம் கிட்டத்தட்ட 5-8% வரையே இருக்கும் என இத்துறைச் சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். அதுவும் 1-2 வருடகாலத்திலே இது நடைபெறும், ஆகவே முதலீட்டுத் தேர்வாக சொத்து கொள்முதல் செய்வதற்கு இது தகுந்த நேரம் கிடையாது. சந்தைகளில் அதிக இருப்பு காரணமாக விலை மாறாது உள்ளதால், நிச்சயமாக, வீட்டுகடன் பெற்று, சொத்துக் கொள்முதல் செய்வதற்கு இது பொருத்தமான சமயம் இல்லை, மாறாக இது சிக்கலை ஏற்படுத்தும்.

வீட்டு கடன் விகிதங்கள் மேலும் உயரும்!!

வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் விகிதங்களை மீண்டும் 25-35 புள்ளிகளால் அதிகரித்துள்ளன. ஆகவே, இது உங்கள் கடன் சுமையை அதிகப்படுத்துவதாக இருப்பதால், நீங்கள் கண்டிப்பாக கடன் விகிதங்கள் குறைக்கப்படும் வரை காத்திருப்பது நல்லது.

என்ஆர்ஐகளுக்கு சிறந்த நேரம்:

ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக குறைந்துள்ளதால், என்ஆர்ஐகள் தாமதம் இன்றி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், என்ஆர்ஐ சமுகத்தினர் அதிகளவு நிதியை சொத்து வாங்குவதற்கு ஒதுக்குவார்கள் என டெவெலப்பர்கள் கருதுவத்தால், நிச்சயமாக அவர்களுக்கு சலுகைகள் மற்றும் இதர கட்டணங்கள் இல்லாமல் சொத்து கொள்முதல் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். மேலும், என்.ஆர்.ஐகள் தொகையை முழுமையாக பரிமாற்றம் செய்வதினால் மட்டும்தான், முழுமையான பயனை அவர்கள் உணரமுடியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Story first published:  Saturday, September 21, 2013, 16:13 [IST]
English summary
When buying the first property to live-in, traditional outlook says that one should not consider the price factor.
கருத்தை எழுதுங்கள்

Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?