புது கார் வாங்க போரிங்களா?? இத படிச்சிட்டு போங்க பாஸ்...

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கார்கள் வாங்குவதற்கான கடன்கள் திட்டத்தை பல வடிவங்களில் தனி நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. இத்தகைய நிதி திட்டங்கள் பலவேறு வகையான வட்டி விகிதத்திலும், கால நிலைகளிலும் கிடைக்கிறது. கடன் அளிப்பவர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையின் சதவிகிதத்தை மேற்கோளாக கொண்ட காரின் விலையில் நிதிஉதவி செய்வார். மீதம் உள்ள தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். கடனை அடைக்கும் வரை கார் கடன்கொடுத்தவரிடம் அடைமானத்தில் இருக்கும்.

 

இத்தகைய கடன் பெறும் பொழுது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளது, மேலும் கடன்களுக்கு தேவைப்படும் ஆவணங்களையும் குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன் பெறவும்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

வருமான ஆதாரமான சம்பள சீட்டுகள் (Pay slips) அல்லது கடந்த 2-3 ஆண்டுகளாக செலுத்திய வருமான வரி சான்றிதழ்களுடன் அடையாள சான்றுகளை மற்றும் முகவரி சான்று இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

செயலாக்க கட்டணம்

செயலாக்க கட்டணம்

செயலாக்க கட்டணமாக ஸ்டாம்ப் டூட்டி மற்றும் இதர ஆவணங்கள் கட்டணம் போன்றவை வங்கிகளின் விதிப்படி கடன் தொகையைப் பொறுத்து பொருந்தும்.

கடன் தொகை

கடன் தொகை

அதிகபட்ச கடன் தொகையை பெற காரின் விலை, மாடல், வேரிஎன்ட், வாடிக்கையாளரின் வேலைவாய்ப்பு மற்றும் வருமான விவரங்கள் மற்றும் பிற அடிப்படையின் மத்தியில் சார்ந்தே இருக்கும்.

கடன் காலம் & விகிதம்
 

கடன் காலம் & விகிதம்

கடன் காலம் 3-15 வருடங்கள் வரையிலான கடன்கள் உள்ளன. மேலும் வட்டி விகிதம் வட்டி வகையை - மிதக்கும் அல்லது நிலையான விகிதம் - மற்றும் கடன் காலம் பொருத்தே இருக்கும்.

வட்டி மற்றும் இதர கட்டணங்கள்

வட்டி மற்றும் இதர கட்டணங்கள்

புதிய கார்களின் வட்டி விகிதங்கள் மற்றும் இதர கட்டணங்கள், பழைய கார்களுக்கு முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

விரைவான கடன்

விரைவான கடன்

உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்த கடன் 1-2 நாட்களுக்குள் வழங்கப்படும்.

காரின் முக்கிய ஆவணங்கள்

காரின் முக்கிய ஆவணங்கள்

கடன்வாங்குபவர் அசல் பதிவு சான்றிதழ், விலைப்பட்டியல் மற்றும் வாகன காப்பீட்டு பாலிசி தன்னிடமே வைத்து கொள்ளலாம். சில நிதி நிறுவனங்கள் இதை தங்களிடம் வைத்து கொள்வர். நிதி நிறுவனங்களுக்கு இத்தகைய ஆவணங்களின் நகல் மட்டும் அளித்தால் போதுமானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Application for a car loan: Things to remember

Banks and financial institutions offer individuals financing schemes in the form of loans for buying cars. The loans come with fixed or floating rates for various tenures.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X