ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீட்டாக காரணம் காட்டி இனிக்க இனிக்க பேசி மக்களிடம் காப்பீடு ஏஜென்ட்கள் பாலிசி எடுக்க வைத்து விடுவார்கள். அவர்கள் மீது முழமையாக தவறு இல்லை என்றாலும். நாம் வாங்க விருப்பப்பட வேண்டியதை தான் அவர்கள் விற்கிறார்கள். மேலும் சிலரால் இதை முதலீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதன் முக்கியதுவத்தை உணர தொடர்ந்து படிக்கவும்.

 

காப்பீடு என்பதின் முதன்மையான நோக்கம் என்ன?

 

வாழ்கையில் ஏற்படும் இடர்பாட்டில் இருந்து நமக்கு நிதி சார்ந்த பாதுகாப்பு அளிப்பது தான் இந்த காப்பீடு. இந்த வாழ்க்கையில் கடைசி கட்ட இடர்பாடாக கருதப்படுவது மரணம். அதற்காக வடிவமைக்கப்பட்டது தான் இந்த ஆயுள் காப்பீடு திட்டம். இந்த காப்பீடை கொண்டு மரணத்தின் போது நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரை இந்த காப்பீடு பாதுகாக்கும்.
காப்பீட்டாளர் மரணிக்கும் சமயத்தில், காப்பீடு அளிப்பவர் இழப்பாக காப்பீட்டாளரின் குடும்பத்தை பாதுகாக்க காப்பீட்டு பணத்தை கொடுக்கும். காப்பீட்டாளர் இழப்பால் அந்த குடும்பத்தின் நிதி சுமையை இந்த காப்பீடு பணம் அவர்களை காக்கும்.

காப்பீடு vs முதலீடு:

காப்பீட்டின் முக்கியதுவத்தை மேலே கூறியிருந்தோம். அது உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. இருப்பினும் முதலீட்டு அம்சம் கலந்த ஆயுள் காப்பீடு திட்டங்களின் மீது ஈர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல!!!

உதாரணம்:

30 வயதான ராஜீவ் ஒரு ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கிறார். எந்த வித சிக்கலும் இல்லாமல் மலிவாக இருப்பதால் அவரின் நிதி ஆலோசகர் அவரை 20 வருடத்திற்கான டெர்ம் பாலிசி எடுக்க பரிந்துரைக்கிறார். தன் நிதி நிலைமை நன்றாக இருக்கும் போது, ராஜீவ் எப்போது வேண்டுமானாலும் அதை நிரந்தர ஆயுள் காப்பீடாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பாலிசியின் காலத்திலேயே ராஜீவ் இறந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் கிடைக்கும். ஆனால் ராஜீவிற்கு ஒரு கேள்வி எழுகிறது: "20 வருட காலம் முடிந்த பின்னர் நான் உயிரோடு இருந்தால் எனக்கு என்ன கிடைக்கும்?". நிதி ஆலோசகர் கூறும் பதில், "ஒன்றுமே கிடைக்காது.".

கண்டிப்பாக இது ராஜீவை ஈர்க்காது. ஒவ்வொரு வருடமும் 2000 ரூபாய் என 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் அதன் முடிவில் ஏதாவது பயனை பெற வேண்டும் அல்லவா?

இது ஒரு பொதுவான இணக்கம் தான். ஆனால் ஆயுள் காப்பீடு உங்களுக்கு நல்ல வணிகத்தை ஏற்படுத்தி கொடுக்காது. டெர்ம் பாலிசி எடுப்பதற்கு பதில் நிரந்தர ஆயுள் காப்பீடை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு நீங்கள் மரணிக்கும் வரை காலாவதி தேதி கிடையாது. மேலும் நீங்கள் இறந்தால் கண்டிப்பாக பணம் திருப்பி வந்து விடும். அதனால் சில வருடங்களாக நீங்கள் கட்டிய பிரீமியத்திற்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களாவது பயனை அடைவார்கள்.

ஆயுள் காப்பீடு என்பது முதலீடு அல்ல!!!

உங்கள் பாலிசியில் ஒரு முதலீட்டு அங்கத்தை சேர்த்துக் கொள்ள விரும்பினால் மறுபடியும்நன்றாக யோசியுங்கள். இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது விலை உயர்ந்த முதலீடாகும். ராஜீவ் உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமே, 10 லட்ச மதிப்பிலான 20 வருட டெர்ம் பாலிசிக்கு மாதம் 2000 ரூபாயை தான் ப்ரீமியம் கட்ட வேண்டி வரும். இதுவே முதலீட்டு அடிப்படையில் எடுத்துக் கொண்டோம் என்றால் வருடம் 60,000 ரூபாய் ப்ரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.

இந்த முதலீட்டினால் கிடைக்கும் வருவாய் சரியான மதிப்பிலானது தானா என்ற கேள்வி எழும். ஒரு மியூசுவல் பண்ட் என்றால் 12 சதவீதம் அல்லது அதற்கு மேலாக வருவாய் கிடைக்கும். இடர்பாடு எடுக்க விரும்பாத முதலீட்டார்கள் ஈக்விட்டி சந்தையில் பணத்தை கொட்டுவதற்கு பதில் வரி இல்லாமல் 8.6% வருவாயை ஈட்டி தரும் பி.பி.எஃப்.-ல் (பப்ளிக் பிராவிடன்ட் பண்ட்) முதலீடு செய்வார்கள். உங்கள் வங்கியில் உள்ள வைப்பு நிதியில் பணத்தை முதலீடு செய்தால் கூட நல்ல தொகையை ஈட்டி தரும். கிட்டதட்ட 8 சதவீதத்திற்கு மேல் அதற்கு வட்டி அளிக்கிப்படுகிறது. நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். இன்ஷூரன்ஸ் உடன் கூடிய முதலீட்டு பாலிசியால் கிடைக்கப் போகும் வருவாய் மற்ற முதலீட்டு வகைகளினால் கிடைக்கப் போகும் ஈட்டு தொகைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ignore anyone who tells you ‘insurance is an investment'

Insurance agents have a tendency to sweet-talk people into buying life insurance for "investment purposes". It is not their fault entirely.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X