ஏம்ப்பா 80C-யை தவிர என்னென்ன வரி விலக்கு இருக்கு???

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பொதுவாக வரி செலுத்துபவர்கள் தாங்கள் கட்டும் வரிப் பணத்தை குறைப்பதற்கு 80C-யின் கீழ் வரிவிலக்கு பெறும் பலதரப்பட்ட முதலீட்டில் தங்களின் பணத்தை முதலீடு செய்வார்கள். அது எந்தெந்த முதலீடுகள் என்பதை பற்றி தங்களின் நிதி ஆலோசகர் அல்லது வேறு யார் மூலமாவது அறிந்து வைத்திருப்பார்கள்.

80C-யை தவிர வேறு எந்த முதலீடுகளில் முதலீடு செய்தால் என்னென்ன வகை வரி பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? வரி விலக்கு பெற 80சி தவிர மற்ற பிரிவுகளை பற்றி நாங்கள் இங்கு பட்டியலிட்டுள்ளோம். அதை பயன்படுத்தி உங்கள் வரி பணத்தில் மேலும் சில பணத்தை மிச்சப்படுத்தவும்.

பிரிவு 80CCG

பிரிவு 80CCG

இதனை ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்பு திட்டம், 2012 (RGESS) என்றும் கூறுகின்றனர். உங்களின் மொத்த வருமானம் 12 லட்சத்திற்கு உட்பட்டு இருந்து, நீங்கள் முதன் முறையாக ஈக்விட்டி, ம்யூச்சுவல் பண்ட் அல்லது பங்கு வர்த்தக நிதியில் முதலீடு செய்தால் இந்த பிரிவின் கீழ் உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். முதலீடு செய்த பணத்தில் 20 சதவீதம் வரை வர விலக்கு கிடைக்கும். அதிகப்படியான வரி விலக்கு 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சின்ன முதலீட்டாளர்களை ஈக்விட்டி சந்தைக்கு வரவழைக்கவே இந்த தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

பிரிவு 80D

பிரிவு 80D

உங்கள் குடும்பத்திற்கு மருத்துவ பாதுகாப்பு காப்பீடு எடுத்திருந்தால், 15,000 ருபாய் வரை வரி விலக்கு கிடைக்கும். இந்த தள்ளுபடியை பெற வேண்டுமானால் தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி (HUF) வகையை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பிரிவு 80DD

பிரிவு 80DD

இந்த பிரிவின் கீழ் தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையை சேர்ந்தவர் தன்னை நம்பி வாழும் உடல் ஊனமுற்றவருக்காக கட்டும் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ருபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்த வரி விலக்கு கிடைக்க அவரை நம்பியுள்ள அந்த ஊனமுற்றவர், அவரின் பெற்றோராகவோ, உடன் பிறந்தவராகவோ, கணவன்/மனைவியாகவோ அல்லது குழந்தையாகவோ இருக்க வேண்டும்.

பிரிவு 80DDB

பிரிவு 80DDB

உங்கள் குடும்பத்தாருக்கு ஏற்படும் மருத்தவ செலவுகளுக்கு இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையை சேர்ந்தவருக்கு இந்த பிரிவின் கீழ் 40,000 ரூபாய் வரை அல்லது நீங்கள் செலவு செய்த தொகை, இவையில் எது குறைவாக இருக்கிறதோ அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். மூத்த குடிமகன்களுக்கு 60,000 ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.

பிரிவு 80E

பிரிவு 80E

உங்கள் மேல் படிப்பு அல்லது உங்களை நம்பியுள்ளவர்களின் மேல் படிப்புக்காக வாங்கிய கல்வி கடனுக்காக கட்டப்படும் வட்டிக்கு இந்த பிரிவின் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். இந்த வரி விலக்கை அதிகபட்சமாக 8 வருடம் வரை பெறலாம். அல்லது அதற்கு முன்பாக நீங்கள் வட்டியை முழுவதும் கட்டி விட்டால் அது வரைக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் பகுதி நேர படிப்புக்கு வாங்கிய கல்விக் கடனுக்காக கட்டும் வட்டிக்கு வரி விலக்கு கிடையாது.

பிரிவு 80G

பிரிவு 80G

அற நிறுவனம், அறக்கட்டளை மற்றும் தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு செய்யப்படும் நன்கொடைகளுக்கு 80G-யின் கீழ் முழு தொகைக்கு அல்லது 50 சதவீதம் வரை வரி விலக்கு கிடைக்கும்.

பிரிவு 80GG

பிரிவு 80GG

தங்களின் நிறுவனத்திடம் இருந்து வீட்டு வாடகை (HRA) கிடைக்கவில்லை என்றால், இந்த பிரிவின் கீழ் தாங்கள் கட்டும் வீட்டு வாடகைக்கு வரிவிலக்கை பெறலாம். இந்த பிரிவின் கீழ், நீங்கள் கட்டும் வாடகையில் அதிகபட்சமாக 25% வரை , அல்லது 2000 ருபாய் அல்லது மொத்த வருமானத்தில் 10 சதவீதத்திற்கு குறைவாக கொடுக்கும் வாடகை, இதில் எது குறைவாக இருக்கிறதோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.

பிரிவு 80GGC

பிரிவு 80GGC

வாக்காளர் ட்ரஸ்ட் அல்லது அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கும் இந்திய நிறுவனங்களை தவிர அனைத்து வரி விதிப்புக்குரியவர்களுக்கும் இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.

பிரிவு 80 TTA

பிரிவு 80 TTA

தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையை சேர்ந்தவர் தான் சேமித்த பணத்தில் ஈட்டிய வட்டி தொகைக்கு இந்த பிரிவின் கீழ் ஒரு வருடத்திற்கு அதிகப்படியாக 10,000 ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும். நிரந்தர வைப்பு நிதி அல்லது டெர்ம் வைப்பு நிதிக்கு வரி விலக்கு அளிக்கப்படாது.

பிரிவு 80U

பிரிவு 80U

தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையை சேர்ந்தவர் 40 சதவீதத்திற்கு மேல் உடல் இயலாமையால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். அதிகப்படியாக 1 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the tax deduction or exemptions apart from 80C?

Taxpayers in an attempt to lower down their tax liability have come to know about the deductions available to them for different investments made under the provisions of Sec 80C through their financial consultant or some other resource.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X