பங்கு சந்தையில் பரவலாக பேசப்படும் ‘க்ரீன்ஷூ ஆப்ஷன்' என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நிறுவனங்கள், பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டுவதற்காக முதல்நிலை முதலீட்டு சந்தையில் பட்டியலிடும் இதுவே இனிஷியல் பப்ளிக் ஆப்பர் அல்லது ஐபிஓ எனப்படும். ஒர்வொரு ஐபிஓ வழங்கல் ஆவணதோடும் (ஆஃபர் டாக்குமென்ட்) ‘க்ரீன்ஷூ ஆப்ஷன்' பயன்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய விபரங்களும் கொடுக்கப்படும். இந்த ‘க்ரீன்ஷூ ஆப்ஷன்' தேர்வு ஒதுக்கீடுகள் என்ன என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

 

க்ரீன்ஷூ ஆப்ஷனை, மேல் ஒதுக்கீடு அல்லது கூடுதல் ஒதுக்கீடு எனவும் குறிப்பிடலாம். க்ரீன்ஷூ என்னும் ஒரு உற்பத்தி நிறுவனம், தமது ஐபிஓ பங்குகொள்முதல் ஒப்பந்தத்தில், மேல் ஒதுக்கீடு வழங்குவதற்காக முதல் முறையாக அமுல்படுத்திய ஒரு வசதி ‘க்ரீன்ஷூ ஆப்ஷன்' என அழைக்கப்படுகிறது. இந்த ஆப்ஷன், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

க்ரீன்ஷூ ஆப்ஷன் செயல்பாடு

க்ரீன்ஷூ ஆப்ஷன் செயல்பாடு

பங்கு சந்தையில் ஒரு ஐபிஓ பட்டியலிடப்பட்ட பின்னர், அதன் வழங்கல் விலையில் வீழ்ச்சி ஏற்படாமல், விலைச் சமநிலையை நிலைப்படுத்துவதற்காக, நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு நிதி முறை க்ரீன்ஷூ ஆப்ஷன்.

க்ரீன்ஷூ ஆப்ஷனின் சிறப்பு

க்ரீன்ஷூ ஆப்ஷனின் சிறப்பு

பொதுவாக, வழங்கல் ஆவணத்தில் கொடுக்கப்பட்ட விபரங்களுக்கு ஏற்றவாறே நிறுவனங்கள் ஐபிஒ திட்டத்தின் கீழ் பங்குகளை வழங்க முடியும். இருப்பினும், க்ரீன்ஷூ ஆப்ஷன் மூலம், கூடுதல் பங்குகளை வழங்கும் வாய்ப்பு உண்டு. இதனடிப்படையில், ஒரு குறிப்பிட்ட ஐபிஓ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த பங்கு அளவில், அதிகபட்சமாக 15% பங்குகளை மேல்-ஒதுக்கீடு செய்யவதற்கு இந்த முன் ஏற்பாடு அனுமதிக்கிறது.

30-நாளில் விலை ஏற்ற இறக்கம்
 

30-நாளில் விலை ஏற்ற இறக்கம்

பங்கு சந்தையில் ஐபிஓ பட்டியலிடப்பட்ட பின்னர், 30-நாள் உறுதிப்படுத்தல் காலத்தில் வழங்கல் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் சமயத்தில், விலைச் சமநிலையை உறுதி செய்வதற்காக, ஐபிஓ வழங்கும் அண்டர்ரைட்டர்கள் (முன்னனி முதலீட்டு வங்கிகள்) பங்குகளை கொள்முதல் செய்ய அனுமதிப்பார்கள்.

உதாரணம்

உதாரணம்

ஒரு நிறுவனம் 5 மில்லியன் பங்குகள் கொண்ட, 10% க்ரீன்ஷூ ஆப்ஷன் உள்ள ஒரு ஐபிஓவை வழங்கிறது. ஒரு வேளை இந்த பங்குகளுக்கான டிமான்ட் அதிகரிக்கும் போது, அண்டர்ரைட்டர்கள் கூடுதலாக 5 லட்சம் பங்குகளை வழங்க முடியும்.

க்ரீன்ஷூ ஆப்ஷனின் பயன்பாடு

க்ரீன்ஷூ ஆப்ஷனின் பயன்பாடு

இத்திட்டத்தின் மூலம் பங்குசந்தையில் அதிகப்படியான பங்குகளை விநியோகிக்க முடியும். மேலும், ஒட்டுமொத்த பங்குசந்தை வெளிப்பாட்டுடன் ஒப்பிடுகையில், நிறுவன பங்கின் விலையை சமநிலைப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is greenshoe option in IPO ?

Initial Public Offer or IPO is issued for subscription in the primary market by companies to mobilize funds from general public. The offer document associated with each of the issued IPO besides including other essential details entails the 'greenshoe option'. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X