இம்பளைட் வொலட்டிலிட்டி என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆப்ஷன் டெரிவேட்டிவ், இதர நிதித் திட்டங்களைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை அளிப்பதனால் இத்திட்டம் பிரபலமடைந்து வருகின்றன. பங்கு அல்லது ஒரு சொத்தின் விலையை நிர்ணயப்பதில், இதர அம்சங்களைக் காட்டிலும் இம்பளைட் வொலட்டிலிட்டி முக்கியமானதாகத் திகழ்கிறது. எனவே, ஆப்ஷன் ப்ரீமியம் விலை நிர்ணயத்தில் இம்பளைட் வொலட்டிலிட்டி முக்கியப் பங்கு வகிப்பதைக் காணலாம்.

 

இம்பளைட் வொலட்டிலிட்டி என்பது, சந்தையில் ஒரு சொத்தின் வருங்கால விலை நிலை மற்றும் தற்போது இருக்கக் கூடிய விலை நிலையை குறிக்கும் ஒரு குறியீடு. இத்தகைய குறியீடு, ஆப்ஷன் காண்ட்ராக்ட்களின் வருங்கால விலையை மட்டுமின்றி அவற்றின் லிக்விடிட்டியையும் நிர்ணயிக்கக்கூடியதாகக் காணப்படுகிறது.

 
இம்பளைட் வொலட்டிலிட்டி என்றால் என்ன?

இம்பளைட் வொலட்டிலிட்டி மற்றும் ஆப்ஷன் காண்ட்ராக்ட்களின் கொள்முதல்-விற்பனை:

சந்தையின் மனோபாவம் எதிர்மறையாக இருக்கும் போது, சந்தைகளுக்கிடையே நிலையற்ற தன்மை அதிகரிக்கும். இம்பளைட் வொலட்டிலிட்டி, ஆப்ஷன் ப்ரீமியம் விலையோடு நேரடி தொடர்பு கொண்டிருப்பதனால், இம்பளைட் வொலட்டிலிட்டி அதிகரிக்கும் போது, அது ஆப்ஷன் காண்ட்ராக்ட் விலையையும் உயரம். இதன் விளைவாக, அதிகமான அளவிலான இம்பளைட் வொலட்டிலிட்டி, அண்டர்லையிங் ஆப்ஷன் காண்ட்ராக்ட்களின் அமோக விற்பனையைக் குறிக்கும் அதே வேளையில், குறைவான வொலட்டிலிட்டி, இதற்கு நேர்மாறான சூழலை குறிக்கும்.

ஒரு குறிப்பிட்ட பங்கு அல்லது இன்டெக்ஸின் இம்பளைட் வொலட்டிலிட்டி அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதை தீர்மானிக்கும் போது கடந்த கால தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இம்பளைட் வொலட்டிலிட்டி பற்றி தீர்மானிப்பதற்கு இருவேறு பங்குகள் ஒருபோதும் ஒப்பிடப்படுவதில்லை; ஏனெனில் ஒவ்வொரு பங்குக்கும் அதற்கென பிரத்யேகமான இம்பளைட் வொலட்டிலிட்டி ரேஞ்ச் இருப்பதே காரணம் ஆகும்.

இம்பளைட் வொலட்டிலிட்டி பற்றிய இதர தகவல்கள்!!

1. இம்பளைட் வொலட்டிலிட்டி சுழற்சி இயக்கத்துடன் காணப்படுகிறது; அதாவது இது ஒரு உச்ச நிலை அல்லது அடி மட்ட நிலையை எட்டும் போது, இன்டிக்கேட்டர் அதற்கு எதிர்ப்புறத்தை நோக்கி செல்கிறது.

2. ஒரே பங்கு அல்லது இன்டெக்ஸிற்கான இம்பளைட் வொலட்டிலிட்டி அதன் காலாவதி தேதி மற்றும் ஸ்ட்ரைக் விலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். இந்த ஸ்ட்ரைக் விலை என்பது, ஆப்ஷன் காண்ட்ராக்ட்டின் உரிமையாளர், அழைப்பு விடுக்கப்படும் சமயத்தில் அதனை வாங்குவதற்கும் அல்லது புட் பொஸிஷனில் இருக்கும்போது அதனை விற்பதற்கும், உரியதாக நிர்ணயிக்கப்பட்ட விலையாகும்.

3. பொதுவாக கார்ப்பொரேட் நடவடிக்கைகளின் தாக்கம், பங்கு அல்லது இன்டெக்ஸின் மீதான அதன் பாதிப்புகள் நன்மையானதா அல்லது தீமையானதா என்பதை பொருட்படுத்தாது, இம்பளைட் வொலட்டிலிட்டியை உயர்ந்திடச் செய்யும்.

எனவே, இம்பளைட் வொலட்டிலிட்டியை உபயோகித்து, ஆப்ஷன் காண்ட்ராக்ட்டின் வாங்கும் விலை அல்லது விற்பனை விலையை முதலீட்டாளரால் தீர்மானிக்க இயலும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Implied volatility in an option contract?

Option derivatives that have been fast gaining momentum on account of the benefits they offer over other financial instruments derive their price from implied volatility among other factors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X