குடும்ப பட்ஜெட் திட்டத்தின் முக்கியதுவம்!!! உண்மையிலே ரொம்ப முக்கிய பாஸ்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மாதாந்திர வருமானம் மற்றும் குடும்பத்தின் மாத செலவு முறைகளை கணக்கில் கொண்டு, சம்பாதித்த வருமானத்தை சரியான முறையில் பயன்படுத்தும் ஒரு திட்டம் தான் குடும்ப பட்ஜெட். சிறப்பாக திட்டமிட்ட ஒரு குடும்ப பட்ஜெட்டை தயார் செய்து, அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருவதன் மூலம் ஒரு குடும்பம் தனது நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்கான மிகச்சிறந்த வழிமுறையாகும்.

தற்போதைய நுகர்வோர் சகாப்தம், பணத்தினுடைய முக்கியத்துவத்தையும் மதிப்பையும் குடும்ப உருப்பினர்களுக்கு உணர்த்துவதால், குடும்ப பட்ஜெட் திட்டமிடுதல் மிக மிக அவசியமானதொன்றாகி விட்டது. சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட ஒரு குடும்ப பட்ஜெட்டிடை பராமரித்து, அதற்கேற்றவாறு வரவு செலவு செய்வதால் கிடைக்கக்கூடிய பல்வேறு நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

செலவுகளை குறைக்க!!

செலவுகளை குறைக்க!!

எதற்காக செலவிட வேண்டும் என்பதை ஆராய்ந்தறிந்து, அனாவசிய செலவுகளை குறைப்பதற்கு உதவுகிறது. நாம் எவ்வாறு செலவு செய்கிறோம், எதற்காக செலவு செய்கிறோம் மற்றும் தேவையில்லாமல் அனாவசியமாக பணத்தை விரயம் செய்கிறோமா என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க குடும்ப பட்ஜெட் நமக்கு உதவுகிறது.

அவசர சிக்கல்களை சமாலிக்க!!

அவசர சிக்கல்களை சமாலிக்க!!

சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஒரு குடும்ப பட்ஜெட், நமது செலவுகளை முறையாக கண்காணித்து அவற்றைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது, மேலும், கவனக்குறைவால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்க இது உதவும்.

நிதி செயல்பாடு..
 

நிதி செயல்பாடு..

கடுமையான நிதி பிரச்சனை ஏற்படும் நேரங்களில் நம்மை தயார்படுத்தி கொள்வதற்கு இது உதவுகிறது. எதிர்கால பணப் பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு குடும்ப பட்ஜெட் மூலமாக நமக்கு கிடைக்கிறது. உதாரணமாக, உங்கள் வங்கி கணக்கிலிருந்து கிரடிட்டுக்கு எதிராக அதிகளவு நேரடி டெபிட் செய்யப்படுவது, இருப்புக்கு அதிகமாக பணம் எடுக்கும் வசதி பெறுதல் அல்லது நடப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வங்கியிலிருந்து ஒரு சிறிய கடன் வசதி பெறுதல் போன்ற முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிவகுக்கும்.

வரவு, செலவு!!

வரவு, செலவு!!

பண உள்ளீடு மற்றும் பண வெளியீடு வேறுபாட்டை அறிய முடிவதால், ஒரு புதிய வணிகத்தின் மூலம் கூடுதலாக வருமானம் பெறக்கூடிய வழிகள் அல்லது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு நீங்கள் முயற்சி செய்ய முடியும்.

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க!!

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க!!

கட்டுபடியான கடன் வரையறையைக் கண்டறிவதற்கு உதவுகிறது. கடன் தொல்லையில் சிக்கித்தவிக்காமல், ஒரு தேவைக்கு உங்களால் எந்த அளவு கடன் பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள, சிறப்பாக வரையப்பட்ட ஒரு குடும்ப பட்ஜெட் உங்களுக்கு உதவுகிறது.

விபரித முடிவுகள்..

விபரித முடிவுகள்..

சரியான முறையில் வரவு செலவை திட்டமிட்டாத குடும்பங்கள், வருமானத்துக்கு அதிகமாக கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை எற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் விபரித முடிவுகள் எடுக்க விலைகிறது.

குடும்ப பட்ஜெட்

குடும்ப பட்ஜெட்

எனவே, குடும்ப பட்ஜெட் தயார் செய்து அதை பின்பற்றுவதில், ஒரு குடும்பம் மிக ஆர்வமாக இருக்க வேண்டும். இது அவர்களின் வேறுபட்ட பணத் தேவைகைளை சுமுகமாக சந்திப்பதற்கு மிகவும் உதவுயாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why it is necessary to plan your household budget?

A Household Budget is a plan for using the earned income taking into account your monthly income as well as expenditure pattern.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X