டெபிட் கார்டு பயன்பாட்டில் நம்முடைய முட்டாள்தனம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தற்பொழுது கடன் அட்டை திருட்டுகள் அதிகரித்தது என்பதை செய்திகளில் பரவலாக காண முடிகின்றது. ஏன் சில சமயம் தலைப்பு செய்தியாகவே காண்கிறோம். சில நேரங்களில் இந்தியாவில் உள்ள ஒருவரின் அட்டை அமெரிக்காவில் பயன்படுத்த படுகின்றது என்பது கூடுதல் அதிர்ச்சி. அதே அட்டையை பயன்படுத்தாமல் இருந்தாலும், அதன் டூப்பிலிக்கேட் பயன்படுத்தப்படுகின்றது.

 

இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறையினர் பல கார்டுகளை வைத்திருக்க ஆசை படுகின்றார்களே தவிர அதை எப்படி பத்திரமாக வைத்திருப்பது என்பதை பற்றி யோசிப்பதில்லை. எங்கு சென்றாலும் முன்பின் தெரியாத நபரிடம் கார்டை கொடுத்து பில் கட்ட கொடுக்கின்றனர். இதன் மூலம் உங்கள் அட்டையின் தகவல்களை அவர்கள் எடுத்து கொள்ளக்கூடும் என்பதை சுத்தமாக மறந்து விடுகின்றனர்.

பலர் சமூக வலை தளங்கள் தங்களின் தகவல்களை கொடுத்து விடுகின்றனர். இதனால் உங்கள் வங்கி கணக்குகள் பற்றிய தகவல்கள் வெளி நபர்களுக்கு பரவுகின்றது. அவர்கள் அதை பயன்படுத்தி நீங்கள் அரும்பாடு பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இந்த தவறை படிக்காதவர்கள் படித்தவர்கள் என்ற வரம்பு இல்லாமல் அனைவரும் செய்கின்றனர். கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும் உங்கள் பணத்தை நீங்களெ பாதுகாக்க முடியும். அரும்பாடு பட்டு சம்பதித்த பணத்தை பாதுகாக்க சில டிப்ஸ்.

உங்கள் கையெழுத்து தேவை

உங்கள் கையெழுத்து தேவை

கடன் அட்டையை எப்பொழுதும் எடுத்து செல்வீர்களா? ஆமாம் என்றால், அட்டையில் உங்கள் கையெழுத்து இருக்கின்றதா என்பதை கவனமாக பாருங்கள். இல்லையென்றால் முதலில் அதை செய்யுங்கள்.

நீங்கள் உணவு பிரியரா?

நீங்கள் உணவு பிரியரா?

நீங்கள் வெளி இடங்களில் அதிக அளவில் உணவு எடுத்து கொள்பவர் என்றால் உணவு விடுதிகளில் நீங்கள் கடன் அட்டையை அதிக அளவில் பயன்படுத்த கூடும். அட்டையை விடுதி பணியாளிடம் கொடுத்து, திருப்பி தரும் சில மணி நேரங்களிலேயே உங்கள் அட்டையின் அனைத்து விபரங்களையும் சேகரிக்க முடியும். ஆகாயால் உங்கள் அட்டையை உங்களுக்கு முன்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

ரசீதை உடனே கிழிக்கவும்
 

ரசீதை உடனே கிழிக்கவும்

ஏடிஎம் சென்று பணம் எடுத்த பின்னர் நாம் பணம் எடுத்த தகவல் நிறைந்த ரசீது ஒன்று நமக்கு கிடைக்கும். நம்மில் பலர் அந்த ரசீதை அப்படியே போட்டு விடுகின்றோம். இது முற்றிலும் தவறு. அவ்வாறு செய்வதால் திருடனுக்கு நாமே இடம் கொடுத்து விடுகின்றோம். ஆகையால் அந்த ரசீதை உடனே கசக்கியோ கிழித்தோ விடுங்கள். அதுதான் சரி.

வங்கியில் பதியுங்கள்

வங்கியில் பதியுங்கள்

கடன் அட்டையை பயன்படுத்துவதுடன் நிறுத்தி கொள்ளாமல் வங்கியுடனும் உங்கள் தொடர்பை பலப்படுத்தி கொள்ளுங்கள். இதனால் வங்கி பண பரிமாற்றத்தை உங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும். ஆகையால் யாராவது மற்றொரு நபர் உங்கள் கடன் அட்டையை பயன்படுதினால் உடனே உங்களுக்கு தெரிவதுடன் உங்கள் வங்கிக்கும் நீங்கள் தகவல் சொல்லவும் முடியும்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

தற்பொழுது ஃபேஸ் புக் மற்றும் டிவிட்டர் அன்றாட உணவு போன்று ஆகி விடுகின்றது. அவை இல்லாமல் யாராலும் செயல் பட முடிவதில்லை. இதனால் ஒருவருடைய விஷயங்கள் வெளி உலகத்துக்கு தெரிய வருகின்றது. இதன் மூலம் திருடர்கள் உங்கள் பிறந்த நாள், பான் கார்ட் நம்பர், தொலைபேசி எண் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என்பதால் கவனமாக இருங்கள். ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்த பின் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Ways To Outsmart Credit Card Fraudsters

Recently, credit card frauds made front page headlines. In some cases, the credit card of someone in India was used in the US, despite the fact that the card was with the customer in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X