மருத்துவ காப்பீடு: யாரும் பார்க்காத மறுபக்கம்..!!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிஸி, மருத்துவ செலவுகள் அனைத்தையும் கவர் செய்யும் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. பாலிஸிதாரர்கள், தங்கள் காப்பிட்டின் கீழ் அடங்குபவை எவை, அடங்காதவை எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்ள காப்பீட்டு பத்திரத்தை நுணுக்கமாக படித்துப் பார்த்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதை விடுத்து நுனிப்புல் மேய்வது போல் பாலிஸியை ஏனோதனோவென்று பார்வையிடுவதில் எந்த புண்ணியமில்லை.

உதாரணமாக, காப்பீட்டாளர்களுக்கு ஏற்கெனவே இருந்த சில நோய்கள் இதில் அடங்காது. முதல் இரண்டு வருடங்களுக்கு, ஹெர்னியா உள்ளிட்ட சில பிரச்சினைகள் இதில் அடங்குவதில்லை. இதர சில நோய்களுக்கு, குறிப்பிட்ட காலம் வரை காத்திருப்பு காலம் இருக்கக்கூடும். இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள பாலிஸியை கவனமாகப் படித்து புரிந்து கொள்வது அவசியம்.

இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் (IRDA) கன்ஸ்யூமர் எஜுக்கேஷன் இணையதளத்தை பார்க்கும் பொழுது சில சிகிச்சைகளுக்கும், பரிசோதனைகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிஸியில் கவர் ஆகாது என குறிப்பிட்டு இருந்தது. இதை பற்றி முழுமையாக இங்கு பார்ப்போம்

கண் பரிசோதனை

கண் பரிசோதனை

கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ்கள், ஹியரிங் எய்ட்கள் போன்றவற்றிற்காகும் செலவு கவர் ஆகாதது;

பற்கள் சீரமைப்பு

பற்கள் சீரமைப்பு

பற்களுக்கான சிகிச்சை/அறுவை சிகிச்சை போன்றவை கவர் ஆகாதது.

உடலியல் பிரச்சனை

உடலியல் பிரச்சனை

உடல் தேறுதல்; சாதாரண உடற்சோர்வு; பிறப்பிலிருந்தே இருக்கக்கூடிய சில வெளிப்புற குறைபாடுகள்; பால்வினை நோய்; வேண்டுமென்றே தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட காயங்கள்; நச்சுத்தன்மை கொண்ட போதை/மது போன்ற வஸ்துக்களை உபயோகித்தல். உயிர கொல்லி நோயான எய்ட்ஸ்.

இதர செலவுகள்

இதர செலவுகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயுடன் சம்பந்தப்படாத நோய்களுக்கான பரிசோதனை, எக்ஸ்ரே அல்லது லேபரேட்டரி டெஸ்ட்கள்.

மகப்பேறு சிகிச்சை

மகப்பேறு சிகிச்சை

கர்ப்பகாலம் அல்லது சிசேரியன் போன்ற குழந்தைப்பேறு காலத்துடன் தொடர்புடைய சிகிச்சைகள்; இயற்கை வைத்தியத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

பாலிஸி தொடங்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் 30 நாட்கள் வரையிலான காத்திருப்பு காலம் இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காப்பீட்டின் பயன்

காப்பீட்டின் பயன்

இந்த காத்திருப்பு காலத்திற்குப் பின் உங்கள் உடல்நலம் தொடர்பான செலவுகளை கிளெயிம் செய்து கொள்ளவோ அல்லது மருத்துவமனைகளில் பணமற்ற சிகிச்சை வசதியை உபயோகித்துக் கொள்ள தகுதி பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the things that a health insurance may not cover?

It's not as if anything and everything is covered under your health insurance policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X