ஹெல்மெட் வாங்கலயோ ஹெல்மெட்டு!!! கூவி கூவி விற்கும் பாஸ்ட்டிராக்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கைக்கடிகாரம், அணிகலன்கள், கண்ணாடி, பேக், பர்ஸ் ஆகியவற்றை உருவாக்கி (அதிக லாபத்துடன்) விற்று வந்த டைட்டன் நிறவனம் (பாஸ்ட்டிராக்) இப்பொழுது 400 கோடி முதலீட்டில் ஹெல்மெடை விற்க சந்தையில் குதித்துள்ளது. இதை தனது பாஸ்ட்டிராக் பிராண்டில் அறிமுகம் செய்துள்ளது (அப்ப தான் கண்ண முடிகிட்டு வாங்குவாங்க). ஒரு ஹெல்மெட்டின் விலை 1,495 ரூபாயிலிருந்து 3,495 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

'உலகிலேயே அதிக அளவு இரு சக்கர வாகனங்கள் உள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. அங்கீகாரம் பெறாத பலரும் வியாபாரத்தில் ஈடுபட்டு ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் மத்தியில் டைட்டன் ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்தினால் அது பெரிதும் விரும்பப்படும் பொருளாக சந்தையில் விளங்கும்' என்று டைட்டன் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பாஸ்கர் பாட் பத்திரிக்கை நிருபர்களுக்கு தெரிவித்தார்.

'எங்கள் தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ள வடிவமைப்புகள், மார்க்கெட்டிங் யுக்திகள் மற்றும் சில்லறை வியாபாரத்தின் நாங்கள் பரவலாக பரவியுள்ள பாதை ஆகியவற்றைக் கொண்டு நாங்கள் ஹெல்மெட் பிரிவில் கால் பதித்திருக்கிறோம்' என்றும் அவர் கூறினார்.

தரமான ஹெல்மெட்

தரமான ஹெல்மெட்

அமைப்பு சாராமலும், சேவை குறைபாடுகளுடனும் உள்ள தற்போதைய சந்தையில் எங்களின் தரம் வாய்ந்த தயாரிப்பின் மூலமாக பாதுகாப்பையும், சௌகரியத்தையும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தர முயற்சிக்கிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேஷன் ஷோ

பேஷன் ஷோ

ஹெல்மெட்களின் தொகுப்பை நேற்று நடந்த ஒரு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் வடிவமைப்பாளர் பிரசாத் பிதாப்பா வெளியிட்டார்.

ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெற்றது

ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெற்றது

ஹெல்மெட்கள் எல்லாம் ஐ.எஸ்.ஐ அனுமதி பெற்றதாகவும் மற்றும் இன்றைய இளைஞர்களை நினைவில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களை கவர

இளைஞர்களை கவர

இந்த புதிய வகை ஹெல்மெட்டில் 24 ரகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் விதவிதமான வண்ணங்கள் மற்றும் ஸ்டைல்களில், நிறைய கிராபிக்ஸ்களுடன் அழகாக காணப்படும் வகையில் ஹெல்மெட் இருக்கும்' என்று அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இத்தாலிய உற்பத்தி

இத்தாலிய உற்பத்தி

டைட்டன் கம்பெனியின் கடிகாரங்கள் மற்றும் உபரி சாதனங்கள் பிரிவின் துணைத் தலைவராகவும் மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரியாகவும் உள்ள ரோனி தலாதி கூறுகையில் 'நாங்கள் AGV என்னும் உலகின் சிறந்த இத்தாலிய ஹெல்மெட் தயாரிப்பளர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெல்மெட்டை தயாரிக்கிறோம், அவர்கள் உலகிலேய மிக அதிகமாக ஹெல்மட் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்ராக உள்ளனர்.

பாஸ்ட்டிராக் ஸ்டோர்ஸ்

பாஸ்ட்டிராக் ஸ்டோர்ஸ்

ஹெல்மெட்டை எங்களுடைய 147 பாஸ்ட்டிராக் கடைகளில் வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றும், அது இவ்வாண்டின் இறுதிக்குள் 200 கடைகளாக உயரும் என்றும் டைட்டன் கம்பெனியின் தலைமை இயக்க அதிகாரி எச்.ஜி.ரகுநாத் கூறினார்.

ரூ.30 கோடி - ரூ.770 கோடி

ரூ.30 கோடி - ரூ.770 கோடி

பாஸ்ட்டிராக் பிரான்ட் பற்றி கூறுகையில் 'பாஸ்ட்டிராக்-ன் கடிகாரங்கள் மற்றும் உபரி பாகங்கள் மூலம் 1998ல் ரூ.30 கோடியாக இருந்த மொத்த விற்பனை மதிப்பு இன்று ரூ.770 கோடியாக உயர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Titan announces launch of Fastrack Helmets

After watches, jewellery and eyewear, Titan Company Ltd today announced its foray into the Rs 400 crore organised helmet market under its Fastrack brand, priced between Rs 1,495 and Rs 3,495.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X