குறைந்தகால முதலீட்டை வரும்புவோர் இதில் முதலீடு செய்யலாம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சமநிலை பரிமாற்ற நிதிகள் (ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்) என்பவை ஒருவகை மியூச்சுவல் ஃபண்ட் வகையைச் சேர்ந்தவை. சந்தையிலுள்ள மதிப்பு வேறுபாடுகளை சாதகமாக்கி அந்த வேறுபாடுகளை சமன் செய்வதன் மூலம் லாபம் ஈட்டப்படும் முறை தான் இந்த ஆர்பிட்ரேஜ் ஃபண்ட். இதில் உள்ள முதலீட்டு மதிப்பின் ஏற்றத்தாழ்வின் அளவு இதன் மூலம் கிடைக்கும் லாபத்தை நிர்ணயிக்கிறது. ஒரு பெரும் பகுதியை பணத்தை கடன் சந்தைகளில் முதலீடு செய்ய சாத்தியக்கூறுகள் இதில் உள்ளதால், இவை நவீனமானவைகளாகக் கருதப்படுகின்றன.

 

இந்த நிதிகளில் அதிக லாபத்தை ஈட்ட வழிவகை செய்யும் காரணிகளை இப்போது காண்போம்.

மதிப்பு ஏற்றத்தாழ்வுகள்

மதிப்பு ஏற்றத்தாழ்வுகள்

பங்குச்சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்போது (ஏற்றத்தாழ்வுக் குறியீட்டின் மூலம் அளக்கப்படுகிறது) அதிக இடைவெளியை ஏற்படுத்தி வாய்ப்புகளை அதிகரிப்பதால் அது இந்த சமநிலை பரிமாற்ற நிதிகளுக்குச் சாதகமாக அமைகிறது.

இந்தியா பொருளாதாரம்

இந்தியா பொருளாதாரம்

கடந்த ஓராண்டில், சர்வதேச, உள்நாட்டு பொருளாதார மற்றும் புவி-அரசியல் காரணிகளாலும், இந்திய பங்குச்சந்தை பெரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளானது. மேலும் அரசின் ஊக்கத்திட்டங்களை குறைக்கும் முடிவு மற்றும் அடுத்த வருடம் வரவிருக்கும் பொதுத்தேர்தல் போன்ற காரணங்களால் இந்த ஏற்றத்தாழ்வு நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

உயர் நிலை வட்டி விகிதங்கள் சமநிலை பரிமாற்ற நிதிகளுக்கு எதுவாக இருக்கும். ஏனெனில் அந்த சூழ்நிலைகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகும்.

வரிச் சிக்கல்கள்
 

வரிச் சிக்கல்கள்

சமநிலை பரிமாற்ற நிதிகளில் பெரும் பகுதி சம உரிமைப்பங்குகளாக இருப்பதால், வரிகளும் சமஉரிமை பங்குகளைப் போன்றே இருக்கும். எனினும், இந்த வகை நிதிகள் பங்குகளுடன் ஒப்பிடும் பொது அதிக வரிச் சுமைகள் இல்லாதவை. இந்த நிதிகள் ஒருவருட காலத்திற்குள் இருந்தால், இத்திட்டத்திற்கு வரி செலுத்த தேவைஇல்லை. ஆறு மாத கால அவகாசமே உள்ள நிலையில், வெளியேறும் கட்டணமின்றி குறுகிய கால முதலீட்டு வருவாயாக 15 விழுக்காடு தரவேண்டியிருக்கும். பெரும்பாலான இந்த வகை நிதிகள், வரியற்ற பங்காதாயங்களையும் தருகின்றன.

இதில் யார் முதலீடு செய்யலாம்?

இதில் யார் முதலீடு செய்யலாம்?

இவ்வகை நிதிகள், குறைந்த ஆபத்துள்ள நிதிகளை நாடும் முதலீட்டாளர்களுக்கு நன்கு பொருந்தும். தொடர்ந்த ஏற்றத்தாழ்வுள்ள பங்குச்சந்தை சூழ்நிலைகளில் இந்நிதிகள் சந்தை செயல் குறைபாடுகளை சாதகமாக்கிக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித்தருகின்றன.

குறைந்த கால முதலீடு

குறைந்த கால முதலீடு

மேலும், வல்லுனர்கள் கூற்றுப்படி, இவ்வகை நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள், ஆறு மாதம் முதல் ஒருவருடம் வரையிலான கால அவகாசத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are Arbitrage funds?

Arbitrage funds is a mutual fund category that capitalizes on the difference in price in the cash and derivatives market for generating returns.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X