2014ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்!!...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த நிதியாண்டு மத்திய அரசிற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது, அரசிற்கு மட்டும் இல்லை மக்களுக்கு நிதி நெருக்கடி அதிகமாகவே அமைந்தது. மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை வான் அளவு உயர்ந்தது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதுப்புக்குள்ளாகினார்.

மேலும் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்பட்ட வித்தியாசங்கள் நாட்டின் பொருளாதார நிலையை முற்றிலும் மாற்றியது, இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் பதவி ஏற்ற பிறகு நிதி நிலை கட்டுக்குள் வந்தது.

2013-ம் ஆண்டின் நிதிச் சிக்கல்களை மறந்து விடுங்கள்! இதோ இங்கே 2014-ம் ஆண்டுக்கான கடன்களை சமாளிக்கவும், நிதி நிலையை மேம்படுத்த உதவும் சில யோசனைகளை பட்டியலிட்டுள்ளோம், அதை படித்து பயன்பெறுங்கள்.

திருமணம் செய்து கொள்பவர்களுக்கு..

திருமணம் செய்து கொள்பவர்களுக்கு..

நீ உன்னுடை நிதி நிலையை காட்டு, நான் என்னுடையதை காட்டுகிறேன். இது ரொமான்டிக் ஆக இல்லாத சூழலாக இருந்தாலும், உங்களுடைய துணைவர், துணைவிக்கு இருக்கும் எக்கச்சக்கமான கடன் சுமையின் காரணமாக, நீங்கள் உங்களுக்காக சொந்த வீடு வாங்க நினைத்தாலும் கூட வாங்க முடியாது. எனவே அறிவே ஆற்றல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன்னர் உங்களுடைய நிதி நிலைமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை சற்றே கவனித்துக் கொள்ளுங்கள்.

நேர்காணலில் முக்கியமான ஒன்று..

நேர்காணலில் முக்கியமான ஒன்று..

நீங்கள் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும், பல நிறுவனங்கள் வேலைக்கு தேர்ந்தெடுப்பதன் ஒரு பகுதியாக உங்களுடைய கடன் நிலையையும் கவனிக்கின்றனர் (Money management). எனவே, நேர்முகத்தேர்வில் உங்களுடைய நிதி நிலைமை பற்றிய கேள்விகள் வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

உங்களுடைய கடன் அறிக்கையில் உள்ள தவறான அல்லது விளக்கம் அளிக்கக் கூடிய ஒரு நெகடிவ் பகுதி பற்றி பேசும் சூழலில் நீங்கள் பைனலிஸ்ட் ஆக இருந்தால் உங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் கடன் அறிக்கைகளில் 25 சதவிகிதம் தவறுகளுடனேயே உள்ளன.

 

அவசர சூழலில் உதவும் சேமிப்புகள்!

அவசர சூழலில் உதவும் சேமிப்புகள்!

இது பழைய ஐடியாவாக இருந்தாலும் நல்ல ஐடியா தான். உங்களிடம் அவசர காலங்களில் சேமிப்புகள் எதுவும் இல்லையென்றால் நீங்கள் கடனை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எனவே, இத்தகைய சேமிப்பு இல்லாத போது உங்களால் நிதி நிலையை சரியாக சமாளிக்க முடியாது.

கடன்!! கடன்!! கடன்!!

கடன்!! கடன்!! கடன்!!

குறிப்பிட்ட நாளில் கடன்களை கட்டி முடிப்பது என்பது சற்றே கடினமான விஷயம் தான். எதிர்பாராவிதமாக ஏற்படும் செலவுகளை சமாளிக்க உங்களிடம் பணம் இல்லாத போது, அடுத்த மாத சம்பளத்தை மட்டும் ஏன் கணக்கில் கொள்கிறீர்கள்? இந்த செலவுகைள சமாளிக்க மாற்று வழிகளை தேடுங்கள் - உங்கள் வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பொருட்களை விற்றோ அல்லது குடும்ப நண்பர்களிடம் கடனாக பெறவோ முயற்சி செய்து நிலுவையிலுள்ள கடன்களை சரியான தேதிகளில் செலுத்துங்கள்.

கார் வாங்குவதே ஒரு கலை தான்..

கார் வாங்குவதே ஒரு கலை தான்..

கார் வாங்கும் போது நாம் பல வகையில் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமானது கார் பயன்படுத்தும் போது அதற்கான பராமரிப்பு செலவு குறைவானதாக இருக்கும் கார்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. முதல் ஆண்டு முடிந்தவுடனேயே கார்களின் மதிப்பு 25 சதவிகிதம் குறைந்து விடுகிறது. இந்த தேய்மானத்தை அல்லது மதிப்பு குறைவதற்கு ஈடாக வேறேதுவும் இல்லாத பட்சத்தில், நீங்கள் வாங்கும் கடன் மட்டும் முழுமையாக இருந்தால் - நிலைமை என்னாவது?! உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!

கூட்டுக் கடன்

கூட்டுக் கடன்

எந்த நிலையிலும், உங்களால் கொடுக்க இயலாத கடன்களை மற்றவர்களுக்காக கோ-சைன் போட்டு ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுடன் மறுமுறை பேச விரும்பாத வரையிலும் இந்த நிலைப்பாட்டைக் கடைபிடிக்கலாம்.

மாணவர்களுக்கான கடன் திட்டங்கள்..

மாணவர்களுக்கான கடன் திட்டங்கள்..

நம் நாட்டு வங்கிகள் பெரு நிறுவனங்களுக்கும், பெரும் புள்ளிகளுக்கும் கடன்களை வாரி வழங்கிவிட்டு வாய்யை முடிக்கொண்டு உட்கார்ந்துகொள்ளும். ஆனால் நாட்டின் தூண்களாக விளங்கும் மாணவர்களுக்கு தங்களின் படிப்பை தொடர வழங்கும் கடன்களை வழங்க முக்கால் அழுகிறது. இப்படி அரும்பாடுபட்டு வாங்கிய கடனை சரிவர செலுத்த வேண்டும். முடியாவிடில் அதற்கான தக்கது செயல்திட்டங்களை எடுக்க வேண்டும்.

படிப்பை நிர்ணயம் செய்யும் கல்லூரி..

படிப்பை நிர்ணயம் செய்யும் கல்லூரி..

கல்லூரி பெரியது, துறை சார்ந்த படிப்பு, வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறை என்பதை எல்லாம் மனதில் கொள்ளாமல், உங்களுக்கு பிடித்தமான துறை, படிப்பு, கல்லூரி எது என்பதை கண்டறிந்து அதில் சேர வேண்டும். மேலும் செலவுகளை மனதில் கொள்ளுங்கள் மற்றும் குறைவான செலவு வைக்கும் கல்லூரிகளையோ அல்லது சமூக கல்லுரிகளையோ தேர்ந்தெத்து, உங்களுக்கு கிடைக்கும் கடன்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 dumb debt decisions in 2014

Forget the 2013 Financial Cliff! Here is my take on the 2014 Abyss for dumb debt moves. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X