ஈரான் டிரேட் மிஷனை கண்டு அஞ்சும் அமெரிக்கா!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெஹ்ரான்: ஈரானில் நடைபெற்ற டிரேட் மிஷன் நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்களை அழைத்ததன் மூலம் தெஹ்ரான் நாட்டு (Tehran) கதவுகள் "வர்த்தகத்திற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளன" என்ற தப்பான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக புதன்கிழமை அமெரிக்கா பிரான்ஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தின் போது ஈரான் அதன் நியூக்ளியர் புரொக்ராமை கட்டுப்படுத்தக்கூடிய இடைக்கால உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டதற்குப் பிந்தைய காலகட்டத்தில், ப்யூகியாட், ரினால்ட், டோட்டல் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய, சுமார் 116 பேர் கொண்ட பிரெஞ்சு குழு தான், ஐரோப்பாவிலிருந்து சென்ற இத்தகைய குழுக்களுள் மிகப்பெரிய குழுவாகும்.

ஈரான் டிரேட் மிஷனை கண்டு அஞ்சும் அமெரிக்கா!

இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதற்கு பதிலாக, அமெரிக்கா அதற்கான அனுமதியில் பொருளாதார தடை ஆணையில் சற்றே தளர்த்தியுள்ளது. இந்த தளர்வினால் ஈரானின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையாணையை தவிடுபொடியாக்கி விடும் என்ற இஸ்ரேல் மற்றும் சில அமெரிக்க காங்கிரஸாரின் எச்சரிக்கைகளையும் மீறி ஒபாமா அரசு இந்நடவடிக்கையை "கட்டுப்பாடான மற்றும் திரும்ப வாபஸ் பெறக்கூடிய" வகையிலானது என்று வலியுறுத்தி மேற்கொண்டுள்ளது.

பிரான்ஸ் விரைவாக ஒரு வர்த்தகக் குழு ஒன்றை ஈரானுக்கு அனுப்பி வைத்திருப்பதின் மூலம், தன் அரசின் மீதான அந்த விமர்சனத்தை உண்மையாக்கி விடுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறது. அமெரிக்க செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் பதவி வகிக்கும் ஜான் கெர்ரி தனது பிரெஞ்சு சகாவாகிய லாரென்ட் ஃபேபியஸிடம் இந்த மிஷன் செயல்படுத்தப்பட்ட சமயம் உகந்ததாக இல்லை என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வர்த்தக அமைப்பான மெடெஃப் தான் இக்குழுவை "ஆய்வு செய்யும் நோக்கத்துடன், பிரான்ஸின் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு" தன் சொந்த முயற்சியில் இரானுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்பதாக பிரெஞ்சு ஃபாரீன் மினிஸ்ட்ரி அழுத்தமாகக் கூறியுள்ளது.

மெடெஃப் அமைப்பின் தலைவரான பியர்ரி கட்டாஸ் ஜெனீவாவில் கையெழுத்திடப்பட்ட நியூக்ளியர் ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட வரையறைக்குட்பட்ட பொருளாதார தடைகள் நிவாரண ஒப்பந்தத்தை எவ்விதத்திலும் இக்குழு மீறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US warns France over Iran trade mission

America warned France yesterday (Wednesday) that allowing more than 100 business leaders to visit Iran on a trade mission risked undermining sanctions by giving the impression that Tehran was "open for business".
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X