மாசம் பொறந்தாச்சு பட்ஜெட் போட்டாச்சா..?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வரவு எட்டனா செலவு பத்தனா என்று கூறும் காலம் எக்காலத்திலும் உள்ளது. ஏழை குடும்பத்திலிருந்து பணக்காரக் குடும்பம் வரை அவரவர் தேவைக்கேற்ப வரவுகளும் செலவுகளும் வருகின்றனர்.

அதில் சிலரே ஒழுங்கான பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்துகின்றனர். சிலர் வருங்காலத் தேவைக்காகவும் சேர்கின்றனர். சிலர் வரிசையாக பட்ஜெட் போட்டாலும் செயல் படுத்த தெரியாமல் பணத்தை இழக்கின்றனர்.

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் போதவில்லை என்று கூறும் சிலர் ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் பட்ஜெட்டிற்குள் வருமான பணத்தை அடக்க முடியவில்லை என்று புலம்பும் சில குடும்பங்களும் உள்ளது. இதுவே பெரும்பான்மை என்றும் கூறலாம்.

சம்பளமும்... செலவுகளும்..

சம்பளமும்... செலவுகளும்..

சம்பளம் உயர உயர அதற்கான செலவையும் ஏற்றி கொள்கின்றனர். இதனால் தற்பொழுதைய தேவையைக் கூட நிறைவேற்றி கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் பலரை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம்.

குடும்ப பட்ஜெட்

குடும்ப பட்ஜெட்

கணவன், மனைவி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பட்ஜெட்டிற்குள் குடும்பம் நடத்துவதில் பங்கு உள்ளது.

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால், உள்ளதும் போய்விடும் என்பதை மறக்க கூடாது. நம் தாத்தா பாட்டி காலத்திலிருந்து பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது பழக்கத்தில் இருந்தாலும் இன்றும் நம் மக்களுக்கு வரவு செலவை சமாளிக்கும் சூட்சமம் புரியவில்லை.

 

பட்ஜெட்  ரொம்ப முக்கியம்

பட்ஜெட் ரொம்ப முக்கியம்

பட்ஜெட் உங்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இது இருந்தால் நாம் சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் செலவிடவும் பாதுகாக்கவும் ஏதுவாக இருக்கும். இல்லையெனில் பாடுபட்டு சம்பாதித்த பணம் வீணாகும்.

பட்ஜெட் போட மூன்று வழிகள்

பட்ஜெட் போட மூன்று வழிகள்

1. எப்படி பணத்தை செலவு செய்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளுதல் முக்கியம்.
2. தற்பொழுது எப்படி செலவு செய்கின்றீர்கள் என்பதை கணகிட்டு வாழ்நாள் முழுவதற்குமான தேவையை சிந்தித்து பட்ஜெட் போடுவது மிக மிக அவசியம்.
3. உங்கள் செலவுகள் உங்கள் பட்ஜெட்டிற்குள் உள்ளதா என்பதை ஆராய்தல் போன்றவை பட்ஜெட் போடுவதற்கான மூன்று சிறந்த வழிகள்.

மென்பொருள் கருவிகளை பயன்படுத்தவும்

மென்பொருள் கருவிகளை பயன்படுத்தவும்

உங்களால் பட்ஜெட் போட முடியவில்லையென்றால் அதற்கும் ஓரு சிறந்த வழி உள்ளது. தற்பொழுது வளர்ந்த வரும் நவீன உலகில் இதற்கென பல மென்பொருள் கருவிகள் உள்ளன. அவற்றில் உங்கள் வரவு செலவு கணக்கை பதிவு செய்தால் அவை உங்கள் பட்ஜெட்டை வரைந்து கொடுக்கும்.

தேவையற்ற செலவை கண்டு கொள்ள வேண்டாம்

தேவையற்ற செலவை கண்டு கொள்ள வேண்டாம்

மென் பொருள் உதவியுடன் போடப்படும் பட்ஜெட்டில் ஒரு குறையுள்ளது. அது அவசியமில்லா சில கணக்குகளை கொடுக்கலாம். எது தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள். எதற்கு முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் எதன் செலவை குறைக்க வேண்டும் என்பது உங்களுக்குதான் தெரியும்.

செலவுகளை கண்காணியுங்கள்

செலவுகளை கண்காணியுங்கள்

நீங்கள் ஏடிஎம் மூலம் எடுக்கும் பணம் உங்கள் பாக்கெட்டை விட்டு மிகுதியாக கரைகிறது என்றால் கவனம் தேவை. அதற்கு உங்கள் செலவை பற்றிய கணக்கையும் குறிப்பையும் வைத்து கொள்ளுங்கள். ஏடிஎம் வாசலை நீங்கள் வாரம் இருமுறை மிதிக்கின்றீர்கள் என்றால் உங்கள் பட்ஜெட் உங்களை மீறி செல்கின்றது எனவே கவனம் தேவை.

வரவுக்கு மீறிய செலவு வேண்டாமே

வரவுக்கு மீறிய செலவு வேண்டாமே

நிறைய குடும்பங்களில் வரம்பிற்கு மீறிய செலவு உள்ளது. சில குடும்பங்களில் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால் அதற்கு மீறிய செலவு வைத்துள்ளனர். இது தொடர்ந்தால் நிலைமை மோசமாகி ஓட்டாண்டி ஆக வேண்டியதுதான் எனவே கவனம் சிக்கனத்தில் இருக்கட்டும். சிக்கனம் பட்ஜெட்டில் இருக்கட்டும்.

தேவை என்ற போர்வையில் ஆடம்பர செலவு

தேவை என்ற போர்வையில் ஆடம்பர செலவு

சில வேளைகளில் தேவையான செலவு என்று ஆடம்பர செலவில் கவனம் செலுத்துவோம். நம்மையும் அறியாமல் இந்த செலவு நம்முள் வரும். எது தேவை எது ஆடம்பரம் என்று தெரியாமல் ஆடம்பர செலவை தேவையான செலவு என்று எண்ணி பணத்தை இழப்பதை தவிர்க்கவும்.

உங்கள் செலவை ஆராய கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் செலவை ஆராய கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் சம்பளத்தின் 90 சதவிகிதத்திற்கு மேல் செலவு செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். செலவு வரதான் செய்யும். ஆனால் அதை எப்படி கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நமக்குதான் தெரிய வேண்டும். நம் பட்ஜெட் நம் கையில்தான். (உன் வாழ்க்கை உன் கையில்)

ஆகாயத்தில் கோட்டைக் கட்ட வேண்டாம்

ஆகாயத்தில் கோட்டைக் கட்ட வேண்டாம்

உங்கள் வரவு செலவு உங்களுக்குதான் தெரியும். அதை உணராமல் அதிக பேராசை உங்களை வீழ்த்தி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். வரவுக்கேற்ற செலவுதான் புத்திசாலிக்கு அழகு.

பட்ஜெட் உடையாமல் பார்த்து கொள்ளுங்கள்

பட்ஜெட் உடையாமல் பார்த்து கொள்ளுங்கள்

உங்கள் ஆண்டின் வருமானம் கூடக் கூடக் புத்திசாலித்தனமான சேமிப்புத் திட்டங்களை செய்யுங்கள். ஆடம்பர தேவைகளை குறைத்து கொள்ளுங்கள். பட்ஜெட் உங்கள் வரவை காக்க வேண்டும். இன்றைய வரவு நாளையை முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 steps to making a financial budget

Learn how to budget by following these 10 steps on how to bring your spending under control.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X