ஜூக்கர்பெர்க் போல ஆக வேண்டுமா..? அப்போ கார்ப்பரேட் வேலையை உதறித்தள்ளுங்கள்..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதல் நாள் வேலையில் சேர்வதென்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவு. உண்மையில் இது அற்புதமான அனுபவமாக இருந்தாலும், முதல் வேலைக்கு சேருவதற்குள் பெரும்பாடாகி விடும்.

கார்ப்பரேட் வேலை உங்களுக்கு கொடுக்கக் கூடிய சலுகைகள், வாய்ப்புகள் ஆகியவை மிகவும் ஏற்றதாக இருக்கும். ஆரம்ப நாட்களில் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள், ஆனால் இந்த உழைப்பை உங்களது சொந்த நிறுவனத்தில் செய்தால் அடுத்த 10 வருடத்தில் உங்களின் நிலையே வேறு, ஏன் நீங்களும் மார்க் ஜூக்கர்பெர்க் போல உயரலாம்.

இவ்வாறு கார்ப்பரேட் வேலையை விடுத்து சிறு நிறுவனங்கள் மற்றும் சொந்த நிறுவனங்களில் பணியாற்ற வேண்டிய அவசியத்தை இப்போது பார்போம்!.

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கக் கூடிய வேலைகளின் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது அந்த வேலை ஒரே மாதிரியான வேலையை கொண்டிருப்பதாக இருப்பது தான். லாக்-இன், லாக்-அவுட் என திரும்பத் திரும்ப செய்த வழிமுறையையே செய்து வருவது தான் சலிப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாளும் நமக்கு வேறுவேறானதாக இருக்கும் மற்றும் உங்களால் புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்.

அனுபவமும், வாய்ப்புகளும்

அனுபவமும், வாய்ப்புகளும்

அதிகமான வேலையை குறைவான நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய அற்புதமான நேரமாக ஆரம்ப காலம் இருக்கும். நீங்கள் சிறந்த திறன்களை கற்றுக் கொள்ளவும் மற்றும் வேகமாக வளரும் தொழிற்துறைக்கு ஈடுகொடுக்கும் அனுபவம் கிடைக்கும். நீங்களாகவே வேலையை தொடங்க வேண்டும் என திட்டங்கள் எதுவும் இல்லையென்றாலும், உங்களுடைய அனுபவம் உங்களுக்கான அடுத்த பாத்திரத்தை தயார் செய்து விடும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில், வாய்ப்புகள் மற்றும் உயர் பதவிகளுக்கு செல்வதில் சவால்கள் இருக்கும், ஆனால் ஆரம்ப நிலையில் உங்களால் வேகமாக வளர முடியும்.

உங்களுக்கென தனியான உடை

உங்களுக்கென தனியான உடை

ஒவ்வொரு நாளும் ஃபார்மல் உடைகளை அணிந்து கொண்டு வேலைக்கு செல்வது அலுப்பூட்டும் அனுபவமாக இருக்கும். எனினும், புதுதிதாக வேலைக்கு செல்பவர்கள் யாரும் கவனிக்கவோ மற்றும் அவர்கள் உடுத்தும் உடையைக் கொண்டு மதிப்பிடவோ மாட்டார்கள். சிறு நிறுவனங்களில் சாதாரணமாக டி-சர்ட் ஒன்றையோ அல்லது பழைய ஜுன்ஸ் பேண்டையோ கூட மாட்டிக் கொண்டு வேலைக்கு போகலாம். இதற்குத் துணையாக உங்களுடைய திறமைகளில் கவனம் செலுத்தி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

முதல் அனுபவங்களில் மூழ்கித் திளைத்தல்

முதல் அனுபவங்களில் மூழ்கித் திளைத்தல்

நீங்கள் பெரிய நிறுவனங்களில் புதிதாகப் பணியில் இருக்கும் போது உங்களுக்கு சாதித்த உணர்வுகள் கிடைப்பது அரிதாக இருக்கும். 'உங்களுடைய முதல் கூட்டாளி, முதல் வாடிக்கையாளர், முதல் பத்திரிக்கை சந்திப்பு, மற்றும் முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட பயனாளிக இருப்பது'-என எண்ணற்ற முதல் அனுபவங்களை புதிதாக கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்காது, சிறுநிறுவனங்களில் மட்டுமே கிடைக்கும்.

புதுமை

புதுமை

அறிவுக்கூர்மை மற்றும் புதுமைகளைப் படைத்தல் ஆகியவற்றிற்கு புதிதாக வேலைக்கு சேரும் போது தான் வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக வேலைக்கு சேருபவர்கள் புதிய ஐடியாக்களுடன் வருவார்கள் மற்றும் பணிகளை செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருப்பது தான் புதிதாக கார்ப்பரேட் வேலைக்கு சேருவதன் மிகப்பெரிய பலனாக உள்ளது. இவ்வாறு புதிதாக வேலைக்கு செல்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்காவிடினும், எதையாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறுநிறுவனங்களில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன் மூலம் நீங்கள் அடுத்த படிநிலைக்கு செல்லவும், பின்நாட்களில் வெற்றிகரமான தொழில் முனைவராக வரவும் கூட முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Fantastic Reasons To Choose A Startup Over A Corporate Job

Landing your first job is exciting, but can be stressful too. The benefits, opportunities and stability a corporate job offers may look ideal for you; but to get hands-on experience in your initial days, a startup can do wonders.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X