பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்திற்கு ரூ.1,157 கோடி நிதியுதவி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான குஜராத்தில் உள்ள 'கிப்ட் சிட்டி' புராஜெக்ட்டுக்கு 5 தேசிய வங்கிகள் இணைந்து சுமார் ரூ.1,157 கோடி நிதியளிக்க முன் வந்துள்ளன.

'குஜராத் இண்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி' என்ற "GIFT CITY" திட்டம் உலக வர்த்தக நாடுகளான கருதப்படும் லண்டன், சிங்கப்பூர், துபாய், ஹாங்காங் ஆகியவற்றிற்கு இணையாக உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது 2007ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகபடுத்தபட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

குஜராத் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் அடிப்படை வசதிகளுக்கான சேவைகளை அளிக்கும் IL&FS நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 'கிப்ட் சிட்டி' உருவாக உள்ளது.

886 ஏக்கர்

886 ஏக்கர்

காந்திநகர் மற்றும் அகமதாபாத் நகர்களுக்கிடையே சபர்மதி நதிக்கரையில் சுமார் 886 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள இந்த 'கிப்ட் சிட்டி', லண்டன், சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களுக்கு இணையான அளவில் உருவாக்கப்பட உள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. ஜா தெரிவித்தார்.

ஷாங்காய் பயணம்

ஷாங்காய் பயணம்

2007ஆம் ஆண்டின் போது இன்றைய, நாட்டின் பிரதமர் மற்றும் முன்னாள் குஜராத் முதல்வரான நரேந்திர மோடி அவர்கள் ஷாங்காய் பயணத்திற்கு பிறகு அறிவித்த ஒரு திட்டம் என்பது குறிப்பிடதக்கது.

5 வங்கிகள்

5 வங்கிகள்

மோடியின் இந்த மெகா சிட்டியை உருவாக்க ரூ.1,818 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதற்கான அடிப்படை வசதிகளுக்காக சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப்-சிந்து பேங்க் மற்றும் கார்ப்பொரேசன் பேங்க் ஆகிய 5 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ.1,157 கோடி அளிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 சகல வசதிகளும்

சகல வசதிகளும்

அனைத்து வசதிகளையும் கொண்ட மின் விநியோகம், ஒரு நீர்த்தேக்கம், ஆட்டோமேட்டிக் குப்பை சேகரிப்பு, குடிநீர் வடிகால் பராமரிப்பு, சுரங்க சாலைகள் உள்ளிட்டவை இந்த அடிப்படை வசதிகளில் அடங்கும்.

கிப்ட் சிட்டி

கிப்ட் சிட்டி

நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டமான கிப்ட் சிட்டியின் வலைபக்கம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 banks give Rs 1,157 crore for Narendra Modi's dream financial hub project in Gujarat

Days after he became prime minister, a consortium of five state-run banks has sanctioned Rs 1,157 crore to a project in Gujarat that aims to capture Narendra Modi's vision of a financial hub.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X