என்.ஆர்.ஐகளுக்கான வரி பயன்கள்!! படித்து லாபம் பெறுங்கள்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: என் ஆர் ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நீங்கள் இந்தியாவில் பெற்ற வருவாய்க்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் இருப்பின் வரி செலுத்த வேண்டும். இதில் சில வரிவிலக்குகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதோடு சரியாக விவரங்களை அளிப்பதும் அவசியம். இதைப் பற்றிய விவரங்கள் இதோ.

 

என்.ஆர்.ஈ, எப்.சி.என்.ஆர் டெபோசிட்டுகளின் மீதான வட்டி

என்.ஆர்.ஈ, எப்.சி.என்.ஆர் டெபோசிட்டுகளின் மீதான வட்டி

என்.ஆர்.ஈ எனப்படும் வெளிநாடு வாழ்வோரின் வைப்புகள் மற்றும் எப்சிஎன்ஆர் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியரின் அந்நிய பண வைப்புகள் மீதான வட்டி வரி விதிப்பிற்கு உட்பட்டதல்ல என்பதால் அவற்றை கணக்கில் சேர்க்க வேண்டாம். எனினும் வெளிநாடு வாழ் இந்தியரின் சாதாரண வைப்புகள் (என்ஆர்ஒ) மீதான வட்டியை கணக்கில் கொள்ள வேண்டும்.

பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள்

பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள்

நீங்கள் இந்தியாவில் வாழ்பவரோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியரோ, பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளிலிருந்து கிடைக்கும் பங்காதாயங்கள் வரி விலக்கு உடையவை என்பதை மனதில் கொள்ளுங்கள். இவற்றை வரி மதிப்பீட்டின்போது கணக்கில் கொள்ளத் தேவையில்லை.

நீண்ட கால முதலீடுகள்
 

நீண்ட கால முதலீடுகள்

நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்துள்ள பங்குகள் அல்லது பரஸ்பர நிதி முதலீடுகளை விற்பதன் மூலம் லாபம் அடைந்திருந்தால் அதற்கான முதலீட்டு ஆதாய வரியை செலுத்தவேண்டியதில்லை.

வீட்டு வரி மற்றும் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளில் 30%

வீட்டு வரி மற்றும் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளில் 30%

நீங்கள் இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டிலிருந்து வாடகை பெறுபவராக இருந்தால் என்ஆர்ஐ என்ற முறையில் வீட்டு வரிக்காக செலுத்திய தொகையையும், வீட்டுப் பராமரிப்பிற்காக செலவிட்ட தொகையில் ஒரு சிறப்பு சலுகையாக 30 சதவிகிதத்தையும் கழித்துக்கொள்ளலாம்.

பிற சலுகைகள்

பிற சலுகைகள்

நீங்கள் பிரிவு 80cc இன் கீழ் ஆயுள் காப்பீடு, பொது சேம நல நிதி ஆகியவற்றை கழித்துக் கொள்ளலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அளித்த நன்கொடைகளை பிரிவு 80ட் இன் கீழ் சலுகைகளை பெறலாம்.

அப்புறம் என்ன ..காச மிச்சம் பண்ணுங்க சந்தோசமா இருங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax exemptions NRIs should note while filing their income tax returns in India?

Non Resident Indians (NRIs) have to pay income tax if their income is accrued in India or if their income is sourced from India and if the amount of such income exceeds Rs two lakhs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X