மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டத்தை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மற்றும் பங்கு சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளது, இதில் முக்கியமான ஒன்று மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டம். இதில் முதலீடு செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்று பெரும்பாலான மக்கள் சொல்வது உண்டு. இதில் முதலீடு செய்யும் முன் அதன் பற்றிய சில முக்கிய விபரங்களை தெரிந்துகொள்ளவது மிகவும் உசிதம். ஆழம் தெரிந்துக் கொண்டு காலை விடுவோம்.

 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 அதி முக்கிய விஷயங்களை இங்கே பார்போம்.

எந்த வகையான முதலீடு திட்டம்??

எந்த வகையான முதலீடு திட்டம்??

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறதா அல்லது கடன் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறதா என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்யவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. இதேபோல் கடன் சந்தையில் முதலீடு செய்யும் போது இதற்கான ஆஃபரை நீங்கள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

மாத வருமானம் அல்லது மூலதன வருமானம்

மாத வருமானம் அல்லது மூலதன வருமானம்

நீங்கள் ஒய்வு பெற்றவர்களாக இருந்தால் மாத மாதம் ஒய்வுதியம் பெறப்படும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், இது உங்களை மாதந்தொரும் பண நெருக்கிடியில் பாதுகாக்கும். மேலும் மாதம் வருமானம் தேவையில்லை, ஒட்டுமொத்தமாக கிடைத்தால் போது என்பவர்களுக்கும் இத்திட்டம் வழிவிடுகிறது.

ஓபன் என்டட் / குலோஸ் என்டட்
 

ஓபன் என்டட் / குலோஸ் என்டட்

உங்கள் திட்டத்தை விரும்பிய நேரத்தில் விற்கவும், பகுதி பகுதியாக விற்க விரும்பினால் ஓபன் என்டட் திட்டம் மிகவும் சரியானது. குலோஸ் என்டட் என்பது ஒற்றை வழி சாலை போல் தான் இருக்கும், முதலீடு செய்துவிட்டால் முதிர்வு காலம் முடிந்த பிறகு தான் பணம் கிடைக்கும்.

வரலாறு

வரலாறு

ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கும் போது, அதன் முந்தைய செயல்பாட்டை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

ஆபத்து காரணிகள்

ஆபத்து காரணிகள்

இத்திட்டத்தில் மிக முக்கியமான ஒன்று மியூச்சுவல் ஃபண்ட் திட்ட பத்திரத்தில் கையெழுத்திடும் போது அதில் உள்ள ஆபத்து காரணிகளை முழுமையாகவும், தெளிவாகவும் படித்து முடிக்க வேண்டும். சில சமையங்கள் புதிய மற்றும் முக்கிய காரணிகள் தென்படும் இது இத்திட்டத்தின் மீதான தெளிவை மேம்படுத்தும்.

குறைந்தபட்ச முதலீடு

குறைந்தபட்ச முதலீடு

பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு என்ற நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு இருக்கும். இது அனைவருக்கும் பொருந்துவதாக இருப்பதில்லை. மேலும் இந்த அளவீடு திட்டத்திற்கு திட்டத்திற்கும் மாறுபடும்.

கட்டணங்கள்

கட்டணங்கள்

மியூச்சவல் ஃபண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் போது அதனுடைய கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக சேவை மாற்ற செலவுகள்,நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணங்கள், நிர்வாக கட்டணம் மற்றும் பிற சேவைகள் கட்டணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 things you must read in a mutual fund offer document in India

It's not always easy investing in a mutual fund scheme. You must evaluate your own ability to take risk along with checking the track record and the nature of the scheme. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X