7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 'பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய வங்கி கணக்கிலுள்ள பணத்தை பராமரிப்பது தலைவலியாக உள்ளது. ஏனெனில் வங்கிகள் எதிர்பாரா வங்கி கட்டணங்களை உங்களுடைய கணக்கிலிருந்து வசூல் செய்து விடுகின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பல்வேறு வழிகளில் கட்டணத்தை வசூல் செய்கின்றன. இதில் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு போகாதவையும் கூட சில அடங்கும். இது சிறு சிறு கட்டணமாக இருந்தாலும் பெரிய தொகையாக சேர்ந்து விடும்.'

 

வங்கி கட்டணத்தை தவிர்க்க உங்கள் வங்கியின் கட்டண சேவையை முன் கூட்டியே அறிவது அவசியமாகும். கணக்கு தொடங்கும் போது, வெறும் படிவத்தை மட்டுமே நிரப்பி கொடுத்தால் போதும் என்று பூரிப்படைந்து விடாமல், உங்கள் சந்தேகங்கள் மற்றும் வங்கி கட்டணம் பற்றிய கேள்விகளை வங்கி ஊழியர்களிடம் கேட்டால் முறையாக பதில்களைப் பெற முடியும்.

நமக்கு மறைமுமாக விதிக்கப்படும் சில வகை கட்டணங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

கிரெடிட் கார்ட் உபயோகிப்போர்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது வட்டி விகிதம். இது கிரெடிட் கார்ட் நிறுவனம் நாம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய கடைசி தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அப்பணத்தின் மீது வங்கிகள் சில சதவீத வட்டியை நம் தலையில் கட்டிவிடும். இது மாதம் 2.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதம் வரை இருக்கும். இதை வருடத்திற்கு கணக்கிட்டால் 30 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் வரை உயரும்.

கணக்கு தொடங்குவதோடு இருந்து விடக்கூடாது

கணக்கு தொடங்குவதோடு இருந்து விடக்கூடாது

வங்கி கணக்கு தொடங்கி பணம் சேர்ப்பது நல்ல எண்ணம் தான். ஆனால் தொடங்கிய பின் உபயோகிக்காமல் இருந்தால் வங்கி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சாதாரணமாக வங்கிகள் இதற்கு 250 ரூபாயை கட்டணமாகவும் மற்றும் சேவை வரியையும் வசூலிப்பார்கள்

இது சிறிய தொகையாக தெரிந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல் பெரிய தொகையாக மாறும். இதை தவிர்க்க உபயோகிக்காத வங்கி கணக்கை மூடிவிடலாம்.

 

வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்தல்
 

வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்தல்

வெளி நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது அதை இந்திய நாணயத்திற்கு மாற்ற உள்கட்டமைப்பு விகித மதிப்பின்படி மாற்றமும் செய்யப்படும். கிரெடிட் கார்ட் வழங்குபவர்கள் பண பரிமாற்றம் செய்யும் தொகையிலிருந்து ஓரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டண தொகையாக வசூலிப்பார்கள். இது குறைந்தபட்சமாக 250 ரூபாய் அல்லது பாரிமாற்ற தொகையிலிருந்து 3.5 சதவிகிதமாக இருக்கும்.

கிரேடிட் கார்டு லிமிட்

கிரேடிட் கார்டு லிமிட்

'நீங்கள் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக தெரியாமல் உபயோகித்து விட்டீர்களா? அப்படியானால் உங்கள் கிரெடிட் கார்ட நிறுவனம் அதற்கும் கட்டண தொகையை வசூலிப்பார்கள். எவ்வளவு தொகை அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டண தொகையாக வசூலிப்பார்கள். இது அதிகபட்சம் 5 சதவிகிதமாக இருக்கும். ஒரு சில நிறுவனங்கள் எவ்வளவு சதவிகிதம் அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதையே கட்டண தொகையாகவும், வேறு சில நிறுவனங்கள் அதிதபட்சமாக 10 சதவிகிதமும் வசூலிப்பார்கள். ஆகையால் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக உபயோகிக்காமல் இருக்க கவனமாக உபயோகிக்க வேண்டும்'

காசோலை

காசோலை

நிறைய வங்கிகள் கட்டணத்தின் பேரில் அனைத்து வங்கிகளும் ஏற்கும் உள்ளுர் காசோலைகளை வழங்கி வருகின்றன. 3 மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக ஒரு காசோலை புத்தகம் வழங்கும் வங்கிகளும் இதில் அடக்கம். ஒரு காசோலைக்கு 3 முதல் 25 சதவிகிதம் கட்டணத்தில் வழங்கும் வங்கிகளும் உண்டு. வங்கி கட்டணம் பற்றிய விவரங்களை படித்து இம்மாதிரியான காசோலை தேவையில்லை எனில் பெறாமல் இருப்பது நல்லது

சில வங்கிகளில் இது போன்ற கசோலை புத்தகங்களை கொடுப்பதில்லை; மாறாக வேறு வேறு நகரங்களுக்கு பண பரிவர்த்தனைகளை நாம் செய்யும் போது அதிகபட்மான பணத்தை கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கச் செய்கின்றன.

 

ஏ.டி.எம் கட்டணங்கள்

ஏ.டி.எம் கட்டணங்கள்

நமக்கு இருக்கும் சேமிப்புத் தொகையிலிருந்து நாம் எடுக்கும் தொகைக்கு வங்கிகள் ஒரு கட்டணம் வைத்துள்ளன. பணத்தை நமது கைகளில் தரும் போது இந்த கட்டணம் பிடிக்கப்படுகின்றது. இதனால் வங்கி சேமிப்பில் இருக்கும் பணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

ஒருவேளை பெருமளவில் பணத்தை எடுக்க முற்பட்டால் பெருந் தொகையை கட்டணமாக செலுத்தவும் தயாராக இருங்கள். இது பணம் செலுத்தும் கட்டணங்களைப் போல் பெருமளவில் இருக்கும். சில கிரெடிட் கார்டுகளை பணம் எடுக்க பயன்படுத்தும் போது அதற்கும் வங்கிகள் கட்டணங்கள் விதிக்கின்றன.

 

இதர கட்டணங்கள்

இதர கட்டணங்கள்

நேஷனல் எலக்ட்ரானிக் பன்ட் டிரான்ஸ்பர் (NEFT) மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்; (RTGS)இதை பற்றி எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். RTGS மற்றும் NEFT ஆகிய அமைப்புகள் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் பண சுழற்சியை செய்ய உதவுகின்றன. வங்கிகள் இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களுக்கு பிற நாடுகளிலிருந்து இந்திய நாட்டில் துவங்கப்படும் வங்கி கணக்கிற்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன.

இதன் கட்டணங்கள் பெரும் தொகை அல்ல. ஆனால் பெருமளவில் இத்தகைய பண பரிமாற்றங்களை செய்யும் போது அதிக அளவில் கட்டணங்கள் செய்ய முற்படுகின்றன. வங்கிகள் தற்போது 5 முதல் 25 தலா ஒரு NEFT மற்றும் 25 RTGS பரிமாற்றங்களுக்கு கட்டணம் பிடிக்கப்படுகின்றது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Ways The Bank is Stealing From You Legally

Most people have enough trouble keeping the balance they want in their bank accounts and could do without the added worry of having to pay unforeseen bank fees. Banks fine customers for many different items, some of which customers don’t even know about or expect.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X